நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram
மின்சாரத் துறையில் நான் ஒரு கோடி சென்னை பரங்கிமலை அரசு நிலம் ஆக்கிரமிப்பு 411 கோடி , கனிமவளத் துறையில் 700 கோடி இதுபோல் திமுக அமைச்சர்களின் பட்டியல் நீல்கிறதா?
மக்கள் வரிப்பணம் ஊழலாக போய்க்கொண்டிருக்கிறது .அதற்கு ஒத்து ஊதும் வேலை கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மற்றும் youtube சேனல்கள் பல உள்ளன. அதனால்தான், அவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் லஞ்சமாக கிடைக்கிறது. மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக திமுக குற்றம் சாட்டி ஆட்சிக்கு வந்தது. ஊழலற்ற ஆட்சியை தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குறுதிகள் எல்லாம் அந்த நேரத்திற்கு பேசி விட்டுப் போவது தான் அரசியல் கட்சிகளின் வேலையாகி விட்டது .
இதுபோல், தமிழ்நாட்டில் சீமான் ,திருமாவளவன் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கூட இதுபோன்ற அமைச்சர்களின் ஊழலை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை. வாய்ச்சவடால் விட்டு, பெரியாரிசம், பாசிசம்,திராவிடம் ,தமிழ் தேசியம் இந்த இசம்களை எல்லாம் கொள்கைகளாக பேசிவிட்டு ,கொள்ளையடிக்கும் கூட்டமா ?இவர்கள் வேலையே அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருப்பது தான். மேலும், தகுதியான அரசியல் கட்சிகள் அது அதிமுகவாக இருக்கட்டும், பிஜேபியாக இருக்கட்டும், எதிர்க்கட்சிகளுடைய ஊழலை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் .அந்த வகையில் பிஜேபியில் அண்ணாமலையின் பங்கு மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்று .
மேலும், மக்களுக்கு அரசியல் தெரியாமல், சுயநலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .இதுதான் தமிழ்நாட்டு மக்களின் மிகப்பெரிய தவறு. இந்த தவறை செய்பவர்கள் மக்கள். இதை இளைய தலைமுறைகளும், அரசியல் தெரிந்தவர்களும் ,அரசியல் படிப்பவர்களும், செய்யாமல் நாட்டு நலனில் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்கு உண்டு. இங்கே திருடனையும், கொள்ளையடிப்பவனையும் கூடவே வைத்துக் கொண்டு, நாங்கள் ஊழலை ஒழிப்போம் என்று மேடைகளில் பேசிக்கொண்டிருப்பார்கள். அதற்கு கைதட்ட கூட்டங்களும் இருக்கும் .அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை .மக்கள் ஒரு தெளிவான புரிதலை, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். யார் மக்களுக்கு நேர்மையான அரசியல்வாதி? என்பதில்தான் தமிழகத்தின் எதிர்காலம்!இந்த ஊழல்வாதிகள், ஊழல் அரசியல் கட்சிகள் வருங்கால சந்ததிகளை வாழ வைக்க மாட்டார்கள். அதை உறுதியாக நம்புங்கள். மேலும்
தமிழ்நாட்டில் கிராமப் பகுதிகளில் 13 ஆயிரத்து 733 தூரத்திற்கு கிராம சாலைகள் போடப்பட்டிருப்பதாக தமிழக அரசு தகவல் . தமிழக அரசு மூன்று ஆண்டுகளில் கிராமப்புறங்களில் சுமார் 18,899 கிலோமீட்டர் சாலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. தவிர, இதன் மதிப்பு சுமார் ஒன்பதாயிரம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி போடப்பட்ட சாலைகளில் 90க்கும் மேற்பட்ட பாலங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ,இதில் 22 பாலங்கள் உள்ளிட்ட 50219 கோடிக்கு பணிகள் முடிந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பணிகள் குத்துமதிப்பாக போடப்பட்டதா? அல்லது தேர்வு செய்து போடப்பட்டதா? இதையெல்லாம் எங்கே இருக்கிறது என்று கிராமங்களில் தேட வேண்டி இருக்கிறது? ஒவ்வொரு கிராமத்திலும், போடப்படும் சாலைகள் ஓராண்டு கூட அவை மக்களின் பயன்பாட்டுக்கு இருப்பதில்லை. போட்ட ஆறு மாதங்களுக்குள் அவை பல இடங்களில் பள்ளம் ஆகிவிடுகிறது. அந்த அளவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
மேலும், இவையெல்லாம் தான் வரப்போற இயக்கத்தின் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலில் வெளி வருகிறதா ? தற்போது நாட்டின் உண்மையான அரசியல்வாதியாக என்றால்! அது அறப்போர் இயக்கம் தான். இன்று நாட்டில் உண்மையான ஒரு அரசியல்வாதி யார் என்றால்? அது அறப்போர் இயக்கம் தான். நாட்டில் பல அரசியல் கட்சிகள் இருந்தும் இதுவரை ஆளுங் கட்சியின் ஊழலை எதிர்த்து வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, அதை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்து சேர்க்கவில்லை. இல்லையென்றால் தேச துரோக அரசியலை பேசுகிறார்கள். ஜாதி அரசியலை பேசிக் கொண்டிருக்கிறார்கள் .இதை எல்லாம் மக்களை முட்டாளாக்குகின்ற வேலை. எந்த வேலைக்கு இவர்கள் வந்தார்களோ, அந்த வேலையை ஒழுங்காக செய்யவில்லை.
இவர்கள் அரசியல் வியாபாரம் நடத்துவதற்கு தமிழ்நாட்டு மக்கள்தான் கிடைத்தார்களா ? அரசியல் கட்சிகள் ஊழலை உருவாக்கிக் கொண்டு, ஊழல்வாதிகளை உருவாக்கிக் கொண்டு, பேச்சிலே ஊழலை ஒழிப்போம் என்றால், திருடனை கையிலே வைத்துக்கொண்டு, நான் திருடனை பிடிப்பேன் என்று சவால் விடும் கூட்டம் தான் இந்த அரசியல் கட்சிகளா? அதனால், மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக தெளிவாக, இந்த அரசியல் கட்சிகளை புரிந்து கொண்டு வாக்களிக்க வேண்டும்.
இங்கே திருடனும், கொள்ளையடிப்பவனும் உத்தமனாக பேசி ஏமாற்றுவது தமிழ்நாட்டின் அரசியல் ஆகிவிட்டது .மக்கள் எத்தனை காலம்தான் இந்த ஆயிரம், 500 க்கு ஏமாறப் போகிறார்கள்? இவர்களை முன்னிலைப்படுத்துகின்ற கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இவர்களும் இந்த திருடர்களுக்கும், கொள்ளையடிப்பவர்களுக்கும் அரசியலில் ஒத்து ஊதும் கூட்டமாக தான் இருக்கிறார்கள். மக்களுக்கு சொல்ல வேண்டிய விஷயங்கள் உண்மைகள் மறைக்கப்படுகிறது. அதனால், மக்கள் அரசியலில் ஏமாறுவது வாடிக்கையாகி விட்டது .இளைய தலைமுறைகள் அரசியல் படிப்பவர்கள் விழித்துக் கொள்வது எப்போது ?மேலும்,
மக்களின் வரிப்பணம் ஊழலாக போய்க்கொண்டிருக்கிறது . பொது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவது ஊழலாக மாறுகிறது. இதையெல்லாம், தேர்தல் நேரத்தில் அதிமுகவை பற்றி திமுக பேசிய ஊழல்கள் தான் இன்று, ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். இப்படி மாறி ,மாறி வாக்களித்து ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் எப்போது இந்த உண்மையை உணரப்போகிறார்கள்? எப்போது உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளப் போகிறீர்கள்? அப்பொழுதுதான் தமிழகத்திற்கு விடியல்.
ஊழல் ஆட்சியும், ஊழல்வாதிகளையும் பதவியில் அமர்த்தி விட்டு ஊழலைப் பற்றி நாம் பேசுவதற்கு தகுதி இல்லை. தவறு செய்பவர்கள் மக்கள்தான் எப்போது மக்கள் திருந்துவார்கள்? அது இறைவனின் தவறா? அல்லது மக்களின் சுயநலமா? அரசியல் அலட்சியம் செய்தால்! இன்று நம்பிக்கை அற்ற ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு முக்கிய காரணம்.அது எப்போது மக்கள் புரிந்து கொள்வார்கள் ?