ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகி வருகிறது. இன்று கிண்டி உயர் நோக்கு அரசு மருத்துவமனையில் தன்னுடைய தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று டாக்டரை கத்தியால் குத்திய நபர் குறித்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் என்றால் !திருவெற்றியூர் பகுதியில் ரவுடி மாமூல் கொடுக்கவில்லை என்று அப்பகுதி பெண் ஒருவரை ரவுடி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி திமுக ஆட்சியில் ரௌடிசம் , அராஜகம் இதற்கெல்லாம் பெயர் போன ஒரு ஆட்சி தான் திமுக ஆட்சி .எப்போது திமுக ஆட்சி வந்தாலும் ரவுடிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடும் . ரவுடிகள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் பின்னணியில் இருந்து கொண்டிருக்கிறார்கள் .
அவர்கள் எந்த கட்சியில் தங்களை ஐக்கிய படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது. யாருக்கு அவர்களுடைய சப்போர்ட் தேவைப்படுகிறதோ அவர்களை கையில் எடுத்துக் கொள்வார்கள். இப்படித்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலுய்ம் ரவுடிகள் குவிந்து கிடக்கிறார்கள் சில காட்சிகளில் ரவுடிகளே கட்சியாக வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .இது எல்லாம் பொதுமக்கள் சிந்திக்காமல் அவர்களுக்கு வாக்களித்து வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறை ரவுடிகளின் அட்டகாசத்தை வேடிக்கை பார்க்கிறதா அல்லது அவர்கள் அரசியல்வாதிகளின் கையாலாக இருக்கிறார்கள் என்று கவலைப்படுகிறதா இப்பிரச்சனைக்கு ?எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். அதனால் இப்பிரச்சினை தொடருமா அல்லது திமுக ஆட்சி இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற ஏக்கத்தில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் .