நவம்பர் 16, 2024 • Makkal Adhikaram
நாட்டில் அரசியல் கட்சிகள் நாட்டு நலனை விட, மக்கள் நலனை விட, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு சொந்த நலன் தான் முக்கியம் ஆகிவிட்டது .
அதனால் தான் கூலிக்கு மாரடைக்கும் பத்திரிகைகள் கூட ,கரூர் மாவட்டத்தில் குண்டோடு பிஜேபி கட்சியினர் திமுகவில் இணைந்து குண்டோடு காலி, அதே போல், அதிமுகவினர் திமுகவில் இணைந்து கூண்டோடு காலி என்ற செய்திகளை போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும், பொது நலன், சமூக நலன், தேச நலன் கருதி செயல்படக்கூடிய எத்தனை அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்? இதைப் பற்றி யாராவது சொல்ல முடியுமா? இல்லை, எந்த பத்திரிகையாவது இதைப்பற்றி மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்களா? இல்லை.
இந்த கட்சிக்காவது அர்த்தம் தெரியுமா? தெரியாதா? அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு! மேலும், மதுரையில் 2023 ஆம் ஆண்டு ,மே 29ஆம் தேதி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலினுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களும் அரசியல்வாதிகள் எடுப்பாக மாறிவிட்டார்கள். அவர்கள் என்ன சொன்னாலும் செய்யக்கூடியவர்கள், எப்படி சட்டத்தின் பாதுகாப்பை நிலை நாட்டுவார்கள்? அதனால் தான், நாட்டில்சட்டத்தின் கடமையை செய்யக்கூடிய அதிகாரிகள் காவல்துறையில் மிக மிக குறைவு .
அதனால்தான் எதற்கெடுத்தாலும் வழக்கு பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதை மதுரை ஐகோர்டில் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. செல்லூர் ராஜு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்க்கட்சி எம்எல்ஏ என்ற அடிப்படையில் மனுதாரர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் என்று வாதிட்டுள்ளார் .அதேபோல் போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் முதல்வரின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில், உள்நோக்கத்துடன் செல்லு ராஜு பேசியுள்ளார் என்று வாதிட்டார்கள் .மேலும், இவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும். வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி வேல்முருகன் சரியான ஒரு கருத்தை சொல்லி மாறி, மாறி இருவரும் அதாவது அதிமுக ,திமுகவையும், திமுக, அதிமுகவையும் தமிழ்நாட்டில் குறை சொல்வது வாடிக்கையாகிவிட்டது என்று பொதுமக்களுக்கும், நீதித்துறைக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சரியான கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சில் எந்த அவதூரும் இல்லை என்று அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்கிறேன். மேலும், ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் அரசியல் கட்சிகள் ஒருவர் மற்றொரு கட்சியை குற்றம் சாட்டுவது இன்றைய அரசியல் நிலைமை .இதுதான் ஜனநாயகியாக கடமையா ? அல்லது இது தான் அரசியலா?