ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டை உருவாக்கி அரசியல் கட்சி ஆரம்பித்த விஜயின் தமிழக வெற்றி கழகம் தற்போது அதிமுகவுடன் கூட்டணி பேரமா ? செய்திகளின் கசிவு .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram

வரும்போது முதலமைச்சர் கனவில் வந்த விஜய்! இப்போது அதிமுகவுடன் கூட்டணி என்று தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் தெரியாத மக்களாக நீங்கள் இருக்கும் வரை நடிகர், நடிகை முதல் அரசியல் கட்சியினர் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். பேசுவதற்கும், நடிப்பதற்கும், செயல்படுவதற்கும், சம்பந்தம் இல்லாமல் இருக்கும்போது ,யாரை நம்பியும் அரசியல் இருப்பதாக ஏழை எளிய நடுத்தர மக்கள் நினைப்பது தவறான ஒன்று. அது உங்கள் அறியாமை. அதிலிருந்து நீங்கள் வெளிவர வேண்டும். 

ஒவ்வொரு இளைஞனும்,அது பெண்களாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், அரசியலும் ,அரசியல் கட்சியையும் நன்கு படிக்க வேண்டும். கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் போல யார் எந்த பக்கம் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்கிறார்கள் .இந்த போட்டோவுக்கு பதில் அந்த போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளுவார்கள். இந்த கொடிக்கு பதில், அந்த கொடியை பிடித்துக் கொள்வார்கள். இது அவர்களின் தனிப்பட்ட அரசியல் லாபம். ஆனால் இதற்கு அப்பாவி மக்கள் பலியாகிறார்கள் . 

அதனால், நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும், அரசியல் என்றால் என்ன? எது அரசியல் ?என்பதை படிக்க வேண்டிய காலகட்டத்திற்கு ஒவ்வொரு இளைஞனும் தள்ளப்பட்டிருக்கிறீர்கள். 1965க்கு முன் அரசியல் என்பது மனசாட்சி உள்ள அரசியல் கட்சியினர், தலைவர்கள் இருந்தார்கள். நீங்கள் படிக்கவில்லை என்றாலும் கவலை இல்லை .ஆனால், இப்பொழுது அரசியலை ஒவ்வொரு இளைஞனும் படித்தே ஆக வேண்டும் .நடிப்பு என்பது வாழ்க்கையாகி விட்டால்! உண்மைக்கும், பொய்க்கும் அர்த்தம் தெரியாது. அது போல்தான் இன்றைய அரசியல் உண்மை எது? பொய் எது? தெரியாமல் ஆகிவிட்டது. வருங்கால இளைய தலைமுறைகள் மிகவும் ஜாக்கிரதையுடன் உங்களுடைய அரசியல் தேர்வு இருக்க வேண்டும். மேலும்,

நாட்டில் யார் அரசியல் கட்சியை ஆரம்பித்தாலும், முதலில் நாங்கள் ஊழலை ஒழிப்போம் என்று தெரிவிக்கிறார்கள். பிறகு, ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். அப்புறம் எப்படி, நாட்டில் ஊழலை ஒழிப்பார்கள்? விஜயின் தமிழக வெற்றி கழகம் பத்தோடு 11 தான். கொள்கையை மேடையிலே பேசிவிட்டு, கொள்ளை அடிப்பதற்கு அரசியல் கட்சிகள் தேவையில்லை . 

மேலும், ஒரு கல்யாண புதுப்பெண் எப்படி வருகிறார்களோ, அதுபோல்தான் இந்த புதிய கட்சிகள் ஆரம்பிக்கும் போது, பேசும்போது ஊடகங்களில் செய்திகள் வெளி வரும் போது, பெரிய எதிர்பார்ப்பாய் மக்களிடம் நினைப்பதும், பேசுவதுமாக இருக்கிறது. ஆனால், செயல்பாடு என்று வரும்போது அங்கே பூஜியமாக நிற்கிறது. இளைஞர்கள் இந்த செல்போன் இணையதளத்தை பார்த்து முடிவு செய்யாதீர்கள். உண்மை எது? என்பதை பார்த்து முடிவு செய்யுங்கள். 

ஏனென்றால், செல்போனில் எல்லாம் வருகிறது .ஒரு லிங்கை அழுத்தினால் வங்கி கணக்கு மோசடி செய்கிறார்கள் . இப்படி ஆன்லைன் மோசடிகள் போல அரசியல் கட்சிகள் மோசடி பேச்சுகளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கென்று தனி ஐடி வீங்குகள் வைத்திருக்கிறார்கள். அதனால், இதை நம்பி எதிர்கால அரசியலை எப்படித் தீர்மானிப்பது?

இங்கே எது உண்மை ? எது பொய் ?என்று தெரியாமல் பத்திரிகை, தொலைக்காட்சிகளே குழம்பிக் கொண்டிருக்கிறது . ஏனென்றால் இன்றைய அரசியல் கட்சிகளுக்கும், அரசியல் கட்சியினருக்கும் நோ கேரண்டி, எந்த பத்திரிக்கை ,தொலைக்காட்சிகளும் கொடுக்க முடியாது. அதனால், நீங்கள் சுயமாக சிந்தித்து முடிவு செய்யுங்கள். உங்களுக்காக உழைப்பவர்கள் யார் ? அதை நீங்களே முடிவு செய்யுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *