youtube சேனல்களுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை – தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். இவர் சமூக நலன் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பற்றி படிக்கவில்லை .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எதற்கு என்றால், அனுமதி இன்றி தியேட்டருக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் அவர்கள் ரசிகர்களிடம் நுழைவாயிலில் அந்த சினிமா பற்றிய கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . 

இவர் பேசியிருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாக தான் இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உள்ள நாட்டில் சினிமா தியேட்டர்களில் படம் பார்த்தவர்களிடம் கருத்து கேட்கக் கூடாது என்பது இவர்கள் தனி சட்டம் போடுவது போல் இருக்கிறது. 

ஜனநாயக நாட்டில் படத்தைப் பார்த்துவிட்டு வந்த மக்கள் youtube சேனலுக்கு கருத்து சொல்லக்கூடாது என்பது சினிமா தியேட்டர் சங்க உரிமையாளர்கள் போட்ட சட்டமா? அந்த சட்டத்தை கெசட்டில் வெளியிடுங்கள் என்பதுதான் சினிமா ரசிகர்களின் முக்கிய கேள்வி ?

மேலும், இவர்கள் செய்கின்ற தவறுகளை எல்லாம் நியாயப்படுத்தி சட்டமாக பேசிக் கொண்டிருக்கிறார். தாஜ் ஹோட்டலில் ஒரு பிளேட் இட்லி 120 ரூபாய் ஆனால், சாதாரண ஓட்டலில் பத்து ரூபாய் அதை ஏன் நீங்கள் 120 ரூபாய்க்கு விற்பனை செய்ய இருக்கிறீர்கள் என்று கேட்க முடியுமா? மேலும், எல்லா தியேட்டர்களிலும் 190 ரூபாய்க்கு அதிகமாக சினிமா டிக்கெட் விற்கவில்லை என்று கூறுகிறார் .மேலும் முதல் நாள் டிக்கெட் அதிக கட்டணத்துக்கு விற்பனை செய்வது அது ஸ்பெஷல் ஷோவாக இருக்கும் என்கிறார். 

அதுமட்டுமல்ல, கருத்துரிமை என்ற பெயரில் ஊடகங்கள் எல்லா இடத்திலும் காட்டுகிறீர்களா? ஒரு ஜவுளிக்கடை முன்பு, ஓட்டல் முன்பு, இந்த ஹோட்டலில் சாப்பிடாதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? இவர் இந்த வியாபார ஊடகங்களை பற்றி பேசுகிறார் .அவர் பேசுவது சரிதான் .ஏனென்றால், சமூக நலன் இல்லாமல் பத்திரிகையின் வியாபாரம் என்று திருப்பூர் சுப்பிரமணியன் சொன்ன கருத்து ஒத்துப்போகிறது. 

இன்றைய கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் சமூக நலனை விட வியாபார நலன் அதற்கு முக்கியத்துவமானது .அதனால், அவர் சொல்வது திரைப்படங்களை பார்க்க வருகின்ற மக்களுக்கு அந்தப் படத்தை பற்றிய உண்மை தெரியக்கூடாது. தெரிந்தால் மக்கள் அதிகம் பார்க்க மாட்டார்கள் .அந்த படம் பத்து நாள் கூட தியேட்டரில் ஓடாது .இதுதான் அவர் சொல்ல வந்த முக்கிய கருத்து. அதனுடைய சுருக்கம் என்னவென்றால், அவர்களுடைய வியாபாரம் பாதிக்கிறது .மக்கள் பாதித்தால் பரவாயில்லை. இதுதான் அவர் சொன்ன கருத்தின் உண்மை சுருக்கம். 

இவர் சமூக ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பற்றி படிக்கவில்லை என்று நினைக்கிறேன் .வேண்டும் என்றால், மக்கள் அதிகாரம் இணையதளம் சென்று பார்க்கவும். ஓட்டல் உணவுகள் பற்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு என்னென்ன சொல்லி இருக்கிறோம்? அதேபோல் ஊடகங்களை பற்றி எவ்வளவு விஷயங்கள் சொல்லி இருக்கிறோம்? அரசியலைப் பற்றி எவ்வளவு உண்மைகளை சொல்லி இருக்கிறோம்? சினிமாவைப் பற்றி எவ்வளவு உண்மைகளை சொல்லி இருக்கிறோம்? இதை எல்லாம் படித்துப் பார்த்துவிட்டு, நீங்கள் போய் போலீசில் கம்பளைண்ட் கொடுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *