ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தது போதும் அவருடைய ரசிகர்களும் பெரும் ஏமாற்றத்தை அடைந்திருப்பார்கள்.
ஏதோ ஒரு மேடையோ, மைக்கோ கிடைத்தால் ரஜினி அரசியலைப் பற்றி பேசுகிறார். இவர் செயல்பாட்டுக்கு உதவாதவர். பேசி விட்டு போவதற்கு வழிப்போக்கனாக,மேடைப் பேச்சாளர்கள் என தமிழ்நாட்டில் பல ஆயிரம் பேர் இருக்கிறார்கள்.
மக்கள் ரஜினியை அவ்வாறு எதிர்பார்க்கவில்லை. கடைசி வரைக்கும் இவர் வருவேன் வருவேன்,என்று டயலாக் பேசிவிட்டு சினிமா காட்சி போல தமிழக மக்களை,அவருடைய ரசிகர்களை ஏமாற்றத்தை தான் சந்தித்தார்கள். இப்போதுதான் அவருடைய உண்மையான தெரிந்தது ஜானகி அம்மாவின் காணொளியில் ரஜினியின் வாழ்த்தி பேசியது அங்கே ஒளிபரப்பப்பட்டது.
இவர் பணம் செலவு பண்ண பயந்து கொண்டு தான், பணம் எங்கே நம் கைவிட்டு போய்விடுமோ என் அச்சம் தான் ரஜினிக்கு, மற்றும் அவர்களுடைய குடும்பம் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்பது சினிமா வட்டாரத்தில் பேசுகின்ற பேச்சு. இப்படி இருக்கும்போது அரசியலை பற்றி பேச என்ன தகுதி என்பது அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி? மேலும்,தமிழ்நாட்டில் வரும்போது ரஜினி கொண்டு வந்தது என்ன? இது தமிழக மக்களுக்கு தெரிந்த உண்மை. தவிர,
இப்போது எத்தனை ஆயிரம் கோடி ரஜினி கிட்ட இருக்கிறது என்பது யாருக்கு தெரியும்?அப்படி இருந்தும் ரஜினியால் தமிழக மக்களுக்கு அரசியலில் சமூக சேவை செய்ய முன் வரவில்லை . விஜய் எவ்வளவோ மேல் என்றுதான் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கும் கருத்து.
சொன்னார் வந்துவிட்டார். இவரை யாரும் அரசியலுக்கு வா என்று கூப்பிடவில்லை இருப்பினும் அவருக்கு அந்த வாய்ப்பும் தமிழக மக்கள் கொடுத்தார்கள் அதை கருணாநிதி குடும்பத்திற்கு விட்டுக் கொடுத்து விட்டார். இனி அரசியலைப் பற்றி பேசி தமிழக மக்களை ஏமாற்றுவதை விட ரஜினி அவருடைய நடிப்பில் சினிமா வியாபாரத்தில் லாபம் பார்க்கும் வேலையை பார்க்கலாமே . எதற்கு இந்த அரசியல் பேச்சு? – சமுக நலன் பத்திரிகையாளர்கள்.