நவம்பர் 25, 2024 • Makkal Adhikaram
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க உத்தரவிட்டுள்ளார். அது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. இது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்துகிறாரா? இவ்வளவு நாள் இல்லாத ஒரு அறிவிப்பு,இப்போது ஏன் வந்தது? தமிழ்நாட்டில் திமுகவிற்கு அவசியமோ அல்லது உள்நோக்கமோ இல்லாமல் எந்த அறிவிப்பும் வெளிவராது. மோடி அங்கே இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுகிறார். அதற்கு எதிரான வேலையை இவர் பார்க்கிறார் என்பதுதான் எங்களை போன்ற பத்திரிகைகள் பார்க்க வேண்டி இருக்கிறது.
இந்தியாவில் காலத்திற்கேற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப, சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். இதை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சரி இவருடைய ஆட்சியில் கொண்டு வந்தது தான் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம், இந்த நல வாரியத்தில் உறுப்பினர்கள் யார் என்றால் ?கார்ப்பரேட் பத்திரிக்கையில் பணிபுரியக்கூடியவர்கள் மட்டுமே உறுப்பினர்கள்.சட்டம் எந்த அளவிற்கு சுயநலமாக இருக்கிறது? அதை பொதுநலமாக மாற்ற வேண்டாமா? அதில் எவ்வளவு ஓட்டைகள் இருக்கிறது? அந்த ஓட்டைகளை அடைக்க வேண்டாமா? இப்படி பலகையில் எழுதி வைத்துவிட்டு, அதைப் பார்த்து விட்டோ, படித்து விட்டோ போவதில் என்ன பயன் மக்களுக்கு?
உங்களுக்கான ஊடகங்களுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்றால் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவது ஏன்? சர்குலேஷன் ஒரு ஏமாற்று சட்டம்,தற்போது தினசரி பத்திரிக்கைக்கு கொடுக்கப்படும் சட்டம் பத்திரிக்கை துறையை ஏமாற்றி வருகிறது .மேலும் அந்த சட்டம் அரசின் கொள்கை முடிவான சட்டமா? உங்களுக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு கொடுப்பதுதான் கொள்கை முடிவா?
மேலும், சலுகை ,விளம்பரங்களை போலியான ஆடிட் ரிப்போர்ட்டுகளை கொடுத்து சலுகை, விளம்பரங்கள் உங்களுக்கு சாதகமான பத்திரிகைகளுக்கு, தொலைக்காட்சிகளுக்கு கொடுக்க மட்டுமே சட்டம் சொல்கிறதா? இன்று இணையதளம் தான் அதிக அளவில் பயன்பாட்டிற்கு இருக்கும்போது ,மக்கள் வாங்கி படிக்கும் பத்திரிகைகள் குறைந்துவிட்டது. இது செய்தித் துறை அதிகாரிகளுக்கும் தெரியும். சட்டத்தை ஏமாற்றி வருகிறார்கள் . இந்த ஏமாற்று சட்டங்களுக்கு எதிராகத்தான் சமூக நலன் பத்திரிகைகள் ஒன்றிணைந்து போராடி வருகிறது. நீதிமன்றங்களின் கதவுகளை தட்டுகிறது.
பத்திரிக்கைகளுக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கும்? அது மட்டுமல்ல, நாட்டில் பல சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் .இந்த சட்டத்தை வைத்து ஊழல்வாதிகள், அரசியலில் பல்லாயிரம் கோடிகளை சம்பாதித்தாலும், எப்படி சம்பாதித்தார்கள் என்பது எதுவும் கணக்கு காட்ட தேவையில்லை. ஆனால்,அரசு அதிகாரிகளோ, நீதிபதிகளோ ,சாமானிய மக்களோ ,பத்திரிகையாளர்களோ எப்படி சம்பாதித்தார்கள் என்பதை கணக்கு காட்ட வேண்டும். அரசியல்வாதிகளுக்கு ஒன்று சாமானிய மக்களுக்கு ஒன்றா?.
அதனால்தான் மோடி இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றத்த திட்டமிட்டுள்ளார். அம்பேத்கரின் ஓட்டை சட்டங்களை எழுதி வையுங்கள் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவிக்கிறாரா? மேலும், சிறுபான்மையினர் என்று தொடர்ந்து 50 ஆண்டு காலமாக பெரும்பான்மையினரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் மாற்றாமல் என்ன செய்வது?
பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட சட்டம் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் என்ன? 50 ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட பத்திரிக்கை துறையின் சட்டம் அப்படியே இருக்க வேண்டிய அவசியம் என்ன? பத்திரிக்கை துறையில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது? இந்த உண்மை மக்களுக்கு தெரியாதா? மேலும்,
சட்டம் காலத்திற்கு ஏற்ப ,மக்களின் மன நிலைக்கு ஏற்ப, மாற்றப்பட வேண்டியது அவசியம் . அம்பேத்கரின் சட்டங்களை மோடி நிச்சயம் திருத்துவார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மாற்றங்கள் சமூக முன்னேற்றத்திற்கானது. வருங்கால இளைய தலை முறைகளின் முன்னேற்றத்திற்கானது.