நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram
விவசாயிகள், பொதுமக்கள் கனிமவளக் கொள்ளையை தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் கதறிக் கொண்டு, புலம்பி வருகிறார்கள். மக்கள் உணர்வுகளை, கருத்துக்களை பற்றியோ, அல்லது புகார்களை பற்றியோ அல்லது பத்திரிக்கை செய்திகளைப் பற்றியோ கவலைப்படாமல் அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக.
இங்கே தேனி மாவட்டம், சுருளி அருவி அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி விவசாயிகள் போராட்டத்தினால் கடந்த பத்து ஆண்டுகளாக முடங்கி இருந்த சங்கிலி கரடு மலை கல் குவாரிகை திறக்க, கனிம வள அதிகாரிகளுடன் கனிமவளக் கொள்ளையர்கள் இப்பகுதியில் கல்குவாரியை திறக்க முயற்சிகள் நடந்து வருவதாக பொதுமக்கள் பேசி வருகின்றனர்.
மக்களின் ஆதங்கம் பிறந்தது முதல் இந்த இயற்கை வளங்களோடு வாழ்ந்து விட்டு, யாரோ ஒரு நான்கு பேர் பல்லாயிரம் கோடிகளை சம்பாதிக்க இயற்கை வளங்கள் அழிவது ,அப்பகுதி கிராமத்தினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதனால் செய்வது அறியாது, இந்த ஆட்சியை பற்றி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் இந்த கனிம வளங்கள் கொள்ளை என்பது மாறி ,மாறி வேதனைக்கு உள்ள ஆழ்த்தி வருகிறது. கனிம வளங்கள் என்பது அந்தப் பகுதியில் இயற்கையின் பேரிடர் வராமல் ஒரு பாதுகாப்பு அறண் தான் ,இயற்கை வளங்கள். இது இரண்டு கட்சிகளுக்கும் இது புரியாமல் தொடர்ந்து கனிம வளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் அழியும்போது மனித வாழ்க்கைக்கு எதிரான சுற்றுச்சூழல் உருவாகிறது. அதுதான் புயல் பூகம்பம் கடும் மழை வெள்ளம் போன்ற இயற்கையின் எதிர்ப்பை மனித சமூகம் இன்று அனுபவித்து வரும் மிகப்பெரிய கடுமையான போராட்டம்.
அதுதான் தற்போதைய இயற்கை பேரிடர் என்கிறார்கள். இந்த இயற்கை பேரிடர் எதனால் உருவாகிறது? இன்று வரை சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் வல்லுநர்கள், கூறுகின்ற கருத்தை அலட்சியம் செய்கிறார்கள். மக்கள் மரங்களை நேசித்து வாழ்ந்தார்கள், ஆற்று மணலை நேசித்து வாழ்ந்தார்கள், இந்த இயற்கையோடு வாழ்ந்த மக்களை ஆட்சி ,அதிகாரம் அதற்கு கட்டுப்பட்டதா?அல்லது இந்த மக்கள் செய்த தவறு, இவர்கள் தலையிலே அது இடியாக விழுகிறதா? மக்களின் கதறல் பணத்திற்கு காது கேட்காது. அது ஆட்சியாளர்களுக்கு கூட கேட்கவில்லையா?
மேலும், இதனுடைய ஹைலைட்டே !இந்த பேரூராட்சியின் மன்ற கூட்டத்தில் கனிம வள குவாரி நடத்தக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் இது பற்றி விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.ஆனால், இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு கனிமவளத்துறை அதிகாரி வருவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்போதாவது திமுக ஆட்சிக்கு விவசாயிகள் ,பொதுமக்கள் என அனைவரின் குமுறல் புரிந்து இருக்குமா? -இது திமுக கட்சிக்கு மக்கள் வாக்களித்ததால்! அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையா? மக்கள் சிந்திப்பார்களா? –
தேனி மாவட்ட நிருபர், மக்கள் அதிகாரம்/ சட்டத் தமிழ் மாத இதழ்களின் இணை ஆசிரியர் & தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் – வேப்பம்பட்டி சுகன்யா முரளிதரன்.