மார்ச் 10, 2025 • Makkal Adhikaram

அரசியல் அதிகார பதவிக்காகவும், கோடிகளை கொள்ளையடிக்கவும், சினிமாவையும், அரசியலையும், தமிழ்நாட்டில் ஒன்றாக இணைத்து விட்டார்களா? நிழலும், நிஜமும் இணைய முடியுமா?

சினிமா நிழல் உலகம், அரசியல் நிஜ உலகம், இந்த இரண்டு உலகமும் வேறுபட்டவை. நிழல் நிஜமாகாது,நிஜம் நிழலாகாது. அப்படி இருக்கும்போது சினிமாவில் திரைக்கதை வசனம் பேசுவது போல, அரசியலில் அரசியல்வாதிகள் பேசக்கூடாது. இங்கே உங்களுடைய உழைப்பு என்ன? என்பதை நிருபியுங்கள். இங்கே இது மக்களுக்கான உங்கள் செயல்பாடு? மற்றும் சேவை என்ன? என்பதை தெரிவியுங்கள்.

அதை விட்டு ,விட்டு தொலைக்காட்சிகளிலும், கார்ப்பரேட் ஊடகங்களிலும் பேட்டியில் உங்கள் திரைக்கதை, வசனங்களை எழுத வேண்டாம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் ? என்ன செய்யப் போகிறீர்கள்? இதுதான் தேவை. இதுதான் அரசியல். இதை விட்டு,விட்டு அதிமுகவை, திமுக குறை சொல்லிக் கொண்டு, திமுக, அதிமுகவை குறை சொல்லிக் கொண்டு, திமுக, பிஜேபியை குறை சொல்லிக் கொண்டு, தவெக மற்ற கட்சிகளை குறை சொல்லிக்கொண்டு,ஒருவரையும் மாற்றி, ஒருவர் குறை சொல்லும் அல்லது நியாயப்படுத்தும் அரசியல் வசனங்களை தொடர்ந்து பேசி மக்களை முட்டாளாக்கும் வேலையும், உங்களை நீங்களே புனிதப்படுத்திக் கொள்வதாக மக்களை ஏமாற்ற வேண்டாம் .

மக்களுக்கு அரசியல் புரிய வைக்க எங்களைப் போன்ற பத்திரிகைகள் இருக்கிறது என்பதை அரசியல் கட்சிகள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் அதிகாரத்தை பார்த்து எத்தனையோ பத்திரிகைகள், யூடியூப்கள் இன்று காப்பியடித்தியாவது, மக்களிடம் அதைக் கொண்டு போய் சேர்க்கிறது. மேலும், எத்தனை நாளைக்கு இந்த கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு அரசின் சலுகை, விளம்பரங்கள் அதன் சட்டங்கள் ஆட்சி அதிகாரத்தின் எல்லை மீறிய சட்டங்களாக இருக்கிறது.

அது சுயநலமா? அல்லது பொதுநலமா ?தெரியாமல் செய்தித் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியும் என்று நினைக்கிறேன். மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு எதிராக செய்திகளை ஆட்சியாளர்களுக்காக அல்லது அவர்களின் சுயநலனுக்காக வெளியிட்டுக் கொண்டிருக்கும் பத்திரிகைகளுக்கு மட்டுமே என்றால்! நீதி ஒரு நாளைக்கு நிச்சயம் வெல்லும். தமிழ்நாட்டில் நடப்பது அரசியலா? அல்லது சினிமா? டிராமா? அரசியலா? என்ற குழப்பத்தில் மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

எம்ஜிஆர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து முதலமைச்சர் ஆகிவிட்டார் என்பது அது ஒரு அபூர்வமான மாபெரும் போராட்ட வெற்றி .அதை ஃபாலோ செய்து எல்லாரும் அதில் வெற்றி பெற முடியாது. மேலும், எம்ஜிஆர் ஒரு தனிப்பிறவி.அவர் பார்த்து ஜெயலலிதாவை கைகாட்டி விட்டார். ஜெயலலிதாவும், முதலமைச்சராகி வெற்றி கண்டார். அதே பாணியில் விஜயகாந்த் வந்தார் முடியவில்லை, கமல்ஹாசன் வந்தார் முடியவில்லை, சரத்குமார் வந்தார் முடியவில்லை . இப்போது விஜய் வந்திருக்கிறார் விஜய்யாளும் அது முடியுமா?

மேலும், ஜெயலலிதா போல் பல நடிகைகள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களாலும், அவர்களுடைய அரசியல் கனவு முடியுமா? மக்களின் மனம் மாற்றத்தை நோக்கியது. காலம் மாற்றத்தை நோக்கியது. இது இரண்டும் ஒருவருக்கு சரியாக அமைந்தது தான் எம்ஜிஆர். அப்போது வாழ்ந்த மக்களின் எண்ணங்கள், அவர்களுடைய அறிவு, அது எல்லாம் அவர்களுக்கு தேவையாக இருந்தது. ஆனால், இப்போது சினிமாவும். அரசியலுக்கு போட்டி போடுகிறது. அரசியலும், அரசியலுக்கு போட்டி போடுகிறது. இங்கே எது நிஜம்? எது நிழல் ?என்று தெரியாமல் ஓடிக் கொண்டிருக்கிறது?மேலும்,

மக்களுக்கு அரசியல் என்றால் என்ன? என்று தெரியாத வரை போலிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கும். எது போலி? எது உண்மை ?என்று தெரிந்தால், போலிகள் இருக்கிற இடம் தெரியாமல் மறைந்து விடும்.தவிர,
போலிகள் எல்லாத்துறையிலும் மலிந்து விட்டது .இன்று பத்திரிக்கை துறை, நீதித்துறை, அரசியல், சினிமா எல்லாவற்றிலும்,போலிகள் ஊடுருவியதால், உண்மைக்கு மதிப்பில்லாமல், போராடிக் கொண்டிருக்கிறது. இந்த போலிகளால்,தான் இன்றைய அரசியல் கட்சிகளும், சினிமாவும் சேர்ந்து இந்த அரசியலில் போலி வேஷங்களை போட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் மக்களிடத்தில் மும்மொழிக் கொள்கையாக, மத்திய அரசு இந்தியை ஏழை எளிய மக்களிடம் திணிக்கிறது என்கிறார்.

மேலும்,மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்று மக்களிடம் கொண்டு செல்ல நினைக்கிறது. இந்த கல்விக் கொள்கை மாணவர்களுக்கு அவசியமானதா? இல்லையா? என்பதை பள்ளிக்கல்வித்துறையின் வல்லுனர்கள்,கல்வி ஆய்வாளர்கள்,அவர்கள் தான் தெரிவிக்க வேண்டும்.அரசியல் கட்சியினர் தெரிவிக்கக் கூடாது. உங்களுக்கு என்ன தெரியும்? வாய்க்கு வந்தபடி பேச தெரியும். அதை விட்டால், வேறு எதுவும் தெரியாது. அப்படி இருக்கும்போது, கல்வி பற்றிய விஷயங்களை அதை யார்? மக்களிடம் சொல்ல தகுதியானவர்கள்? என்பதை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும்,மத்திய அரசின் கல்வியாளர்கள், மாநில அரசின் கல்வியாளர்கள், இது பற்றிய உண்மை விளக்கத்தை இவர்கள் கொடுக்க வேண்டும். இந்த புதிய கல்விக் கொள்கையின் உண்மைத்தன்மை என்ன? இதைப்பற்றி ஆய்வு செய்து உண்மையை மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு ,விட்டு இவர்கள் அரசியல் லாபங்களுக்காக கொடி பிடித்துக் கொண்டு, அறிக்கை விட்டுக்கொண்டு, அதை இந்த ஊடகங்கள் உண்மை என்று மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பது, மக்களை ஏமாற்றும் வேலை. இது செய்தி அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், இன்று 90 சதவீதத்திற்கு மேல் உள்ள ஊடகங்கள் தமிழ்நாட்டில் கூலிக்கு மாரடைக்கும் கூட்டமாக மாறி விட்டது .ஊடகங்களே அப்படி இருந்தால், அதில் வேலை செய்யக்கூடிய நிருபர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை மக்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உண்மையைப் புரிந்து கொள்ள உங்களுடைய தகுதி இல்லாதவரை, இவை அத்தனையும் ,தமிழ்நாட்டில் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் என்பதை புரிந்தவர்களுக்கு இந்த உண்மைகள் புரியும்.

எனவே, அரசியல் ,சினிமா ,ஊடகங்கள் இவை அத்தனையும்,மக்களை தங்களுடைய சுயலாபங்களுக்காக போட்டி போட்டுக் கொண்டு ஏமாற்றி வருகிறது. மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு அவசியம் தேவை. சினிமா என்றால், அது பொழுது போக்கா? அல்லது மக்கள் நலனுக்கா? என்பதை இன்றைய இளைஞர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் .ஏனென்றால் எத்தனையோ லட்சக்கணக்கான இளைஞர்கள், சினிமாவின் ஹீரோக்களுக்கு ரசிகனாக இருக்கிறார்கள் .

இந்த ரசிகர்கள் நிழலை பார்த்து சினிமா தியேட்டர்களில் ஆரவாரம் செய்து விசில் அடிப்பது, கைதட்டுவது எல்லாம் இருக்கும், அதே போல் தான் அரசியல் மேடைகளில் பேசுகின்ற அவரவர் கட்சி தலைவர்கள், பேசும்போது, அங்கேயும் விசில் அடிப்பார்கள், கைதட்டுவார்கள். இதற்கு முட்டாள்கள் தேவை. அதற்கும் முட்டாள்கள் தேவை. அறிவாளிகள் யாருக்கும் கைத்தட்ட மாட்டார்கள். அவர்கள் பாராட்டுவார்கள், அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.

இது படித்த சமுதாயம், அரசியலையும் ,சினிமாவையும் ,உணர்ந்த சமுதாயம். இவர்களை அவ்வளவு எளிதில் இந்த இரண்டு பேரும் ஏமாற்ற முடியாது. இவர்கள் எங்கு போனாலும், தங்களுடைய தகுதி என்ன? என்று நிரூபிப்பவர்கள். அதனால், தமிழ்நாட்டில் இப்போது அரசியல் என்பது நிழலா? அல்லது நிஜமா? அதாவது சினிமாவும் அரசியல் என்று பேசுகிறது. அரசியலும் அரசியல் என்று நிழலை போல, அதாவது சினிமாவைப் போல வசனம் பேசுகிறது. ஊடகங்களும் அது உண்மை செய்தியாக விளம்பரப்படுத்தி மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்..இந்த குழப்பத்தில் மக்கள் இருக்கிறார்கள் .

ஆளாளுக்கு ஒரு கருத்து, ஆளாளுக்கு ஒரு கட்சி, இவர்கள் எல்லாம் தொண்டர்கள், இந்த தொண்டர்கள் நாட்டில் என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்? இவர்களுடைய சேவை என்ன? என்பதை ஒவ்வொரு கட்சியும், இவர்களுடைய கணக்கு விவரங்களை காவல்துறை தான் எடுக்க வேண்டும். இதில் ஒவ்வொரு கட்சியிலும், அரசியல் என்பது வசனம் பேசிவிட்டு போவதற்கு, வந்தவர்களாகவே இருக்கிறார்கள். நிர்வாகிகளாக இருக்கட்டும், தொண்டர்கள் விசில் அடிக்கவும், கொடி பிடிக்கவும், கையாட்டம், கைதட்டவும், பாட்டு பாடி டான்ஸ் ஆடவும், இதுதான் ஒரு சினிமா, அரசியல் போல் இந்த அரசியலை ஆக்கிவிட்டார்கள்.

பதவிக்காகவும்,அரசியல் அதிகாரத்திற்காகவும், அரசியலில் கோடிகளை கொள்ளை அடிக்க இன்றைய அரசியல் கட்சியினரின் நோக்கமாக மாறிவிட்டது. கூட்டத்தைக் காட்டுவது, பணத்திற்காக அந்தக் கூட்டத்தில் போய் மக்கள் பிரியாணி, பணமும், பாட்டிலும் வாங்கிக்கொண்டு, உட்கார்ந்து கொண்டிருக்கும் கூட்டங்கள் எல்லாம் இன்று கட்சிக் கூட்டங்களாக ஊடகங்கள் காட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு அரசியல் கட்சியினர், சில லட்சங்களை செலவு செய்து,பதவி, அதிகாரம் கிடைத்தால், பல கோடிகளை சம்பாதிக்கும் கனவோடு தான் இவர்கள் அரசியல் கட்சிகளில் தங்கள் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நல்ல நோக்கமல்ல.

அதனால் ,அரசியல் என்பது கூட்டத்தைக் கூட்டுவது, கொடி பிடிப்பது, அரசியல் வசனம் பேசுவது, இதுவல்ல அரசியல் திறமை. கட்சியினர் இதுதான் திறமை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எது தேவை? என்று நினைப்பவன் அரசியல்வாதி. தனக்கு அதனால் என்ன தேவை என்று நினைப்பவன் போலி அரசியல்வாதி. இந்த பார்முலாவை ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், பொதுமக்கள் புகுத்தி பாருங்கள். ஒவ்வொரு கட்சியிலும், எத்தனை பேர் தேர்வார்கள் ? அவர்களை தேர்வு செய்யுங்கள்.
இதே போல் எத்தனை பத்திரிகைகள், மக்களுக்கான செய்திகளை வெளியிடுகிறது என்பதை சிந்தியுங்கள்? அந்த செய்திகள் மக்களுக்காகவா? அல்லது ஆட்சியாளர்களுக்காகவா? அல்லது இவர்களுக்காகவா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.மேலும்,

இங்கே மக்களுக்கு என்ன நன்மை ?என்பதை எந்த ஒரு அரசியல் கட்சியும் யோசிக்கவில்லை .எந்த ஒரு ஊடகமும் அதைப்பற்றி எழுதவில்லை. அதனால், மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் உழைப்புக்கு அர்த்தம் தெரியாமல், இன்றைய அரசியலும், சினிமா ,ட்ராமா அரசியலாக போய்க்கொண்டிருக்கிறது. மக்களே உங்களை காப்பாற்றிக் கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது. அதனால் வருங்கால இளைஞர்கள் உங்களுடைய முன்னேற்றம் உங்கள் கையில் தான் இருக்கிறது. இந்த அரசியல் கட்சியினர் பேசும் பேச்சுக்களில் இல்லை என்பதை புரிந்து கொண்டு நாட்டில் தகுதியான நேர்மையான அரசியலை கொண்டு வருவது உங்கள் கையில் அதனால் பொதுநலத்துடன் சிந்தியுங்கள் சுயநலத்துடன் சிந்தித்தால் நல்லாட்சி மற்றும் நேர்மையான அரசியலை கொண்டு வர முடியாது.

என்னுடைய அரசியல் அதிகார உரிமையை எவ்வளவு கஷ்டப்பட்டாலும், 1000க்கும், 500 க்கும், இரண்டாயிரத்திற்கும், மூவாயிரத்திற்கும், 5000 க்கும் 10,000 ஆயிரத்திற்கும் விற்க மாட்டேன். என்று உங்களுக்குள் இதை முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்குள் இதை முடிவு செய்து கொள்ளுங்கள்.