செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram
செந்தில் பாலாஜியை குற்றவாளி என்று நீதிமன்றம் இதனால் வரை அவரை சிறையில் வைத்திருந்தது. இன்னும் அவர் இந்த வழக்கில் விடுதலை பெறவில்லை. விடுதலை பெற்று வந்திருந்தால் கூட அவருக்கு பட்டாசு வெடிப்பதில் அதில் ஒரு நியாயமோ, அர்த்தமோ இருக்கிறது. இங்கே ஜாமினில் தான் வெளிவந்திருக்கிறார்.
அவருக்கு பட்டாசு வெடிப்பது, இது சந்தோஷத்தின் அடிப்படையிலா? அல்லது இவ்வளவு நாள் ஜெயிலில் இருந்து ஏதாவது சாதனை செய்து விட்டாரா? அல்லது இவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டாரா? எதுவுமே இல்லை. இந்த போலி அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்ற பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அரசியல் தெரியாத மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும் அரசியல் கலாச்சாரம் தான் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவது, அதில் ஏதாவது அர்த்தம் இருந்தாலும் பரவாயில்லை.
ஊழல் செய்துவிட்டு ஜெயிலுக்கு போய் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்துவிட்டு, மந்திரி பதவியும் நீக்கி ,அவர் பல துன்பங்களை அனுபவித்து விட்டு ஜாமினில் வெளி வருகிறார். இதற்கே இந்த ஆர்ப்பாட்டமா? அதனால் தான் மக்களுக்கு அரசியல் என்றால், பணத்தை கொடுத்து அவர்களுடைய வாக்கு அதிகாரத்தை வாங்கி ஊழல் செய்துவிட்டு, ஜெயிலுக்கு போய் வந்தவருக்கு இது ஊழல்வாதிகள் அளிக்கின்ற கௌரவமா?
அல்லது மக்களை ஏமாற்ற இது போன்ற போலி அரசியலா? எது? என்பதை செந்தில் பாலாஜிக்கு வாக்களித்து, தேர்வு செய்யப்பட்ட மக்கள் தான் இது தேவையா? இல்லையா? என்பதை முடிவு செய்யுங்கள் .இவையெல்லாம் அரசியல் என்றால் என்ன? என்று படிக்காதவனிடம் காட்டும் வித்தையா ? அல்லது பேசும் வித்தையா?