மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது- மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.

ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்காக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் புது தில்லியில் வெளியிட்டார். ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள் – 2023, துறைமுக மேம்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இயற்கையுடன் இணைந்து பணிபுரிவதை ஊக்குவிக்கிறது. மேலும், துறைமுக செயல்பாட்டில் சுத்தமான/பசுமை ஆற்றலைப் […]

Continue Reading

வர்த்தகர்களிடமிருந்து சரக்குகளை மக்களின் வீட்டுக்கு டெலிவரி செய்யும் இந்திய அஞ்சல் துறை திட்டம்.

கோடிக்கணக்கான வர்த்தகர்களுக்கு போக்குவரத்து பங்குதாரராகும் இந்திய அஞ்சல் துறை. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அஞ்சல் துறை இன்று மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், ‘பாரத் இமார்ட்’ என்ற போர்ட்டலை செயல்படுத்த உதவுகிறது. இது வர்த்தகர்களிடத்திலிருந்து சரக்குகளை எடுத்துச் சென்று, நாடு முழுவதும் மக்களின் வீட்டிலேயே டெலிவரி செய்வதை உறுதி செய்யும். இது சிஏஐடி […]

Continue Reading

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளNIA (National investigation agency) மாவட்டம் முழுவதும்கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் தீவிரவாத அச்சுறுத்தல், மற்றொரு பக்கம் அரசியல் ரவுடிகளின் ஆதிக்கம் ,இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களின் சுதந்திரம், உயிர் பயம், இதை வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மக்கள் இருந்து வருகிறார்கள். இந்த அரசியல் ரவுடிகள் எல்லா அரசியல் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இவர்களை பயன்படுத்தி சமூக ஆர்வலர்களுக்கு எதிராகவும், உண்மைகளை தட்டி கேட்பவர்களுக்கு எதிராகவும், மறைமுகமாக பயன்படுத்துகிறார்கள். இது தவிர ,நேர்மையான அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் மீது பழி வாங்கும் நடவடிக்கைகள் மறைமுகமாக இருந்து […]

Continue Reading

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் திமுக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படாதது ஏன்?

லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எம்எல்ஏ, எம்பி, மந்திரி, அதிகாரிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்பட அவர்களின் சொத்து கணக்கு ஆய்வுக்கு உட்பட்டு அதிக சொத்து சேர்த்தால் அவை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். அல்லது சோதனை செய்து பறிமுதல் செய்யப்படும்.  தற்போது கூட, மத்திய அரசின் ஜெல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரஜிந்தர் குமார் குப்தா 2019 ஆம் ஆண்டில் ஓய்வு […]

Continue Reading

பிரதமரின் ஆயுள் காப்பீடுத் திட்டம் (PMJJBY) ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு ஒரு வரப் பிரசாதம்.

பிரதமரின் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (PMJJBY) பிரதமரின் விபத்துக் காப்பீட்டுத் திட்டம் (PMSBY) மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) ஆகியவை 8 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பை வழங்கி வருகின்றன. தவிர, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்று மக்கள் பாதுகாப்புத் (ஜன் சுரக்ஷா) திட்டங்களும் குடிமக்களின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை என்றும், எதிர்பாராத ஆபத்துகள், இழப்புகள் மற்றும் நிதி நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து மனித வாழ்க்கையைப் பாதுகாக்கின்றன என்றார்.மேலும்,மக்கள் பாதுகாப்புத் (ஜன் சுரக்ஷா) திட்டங்களின் […]

Continue Reading

இந்தியாவின் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த நேரம் இது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திறமைகள், படைப்பாற்றல்,  புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு  உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள […]

Continue Reading

தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுச்சேரியின் பொறுப்பு இயக்குநராக முனைவர் கணேசன்  கண்ணபிரான்   காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழக   மத்திய கல்வி அமைச்சகத்தால் 03.05.2023  அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் (08.05.2023)  பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதற்கு முன்பு இயக்குநராக இருந்த  முனைவர் கி. சங்கரநாராயணசாமி   பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் இந்த  பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முனைவர் கணேசன் கண்ணபிரான்  ஆந்திரப் பிரதேசத்தில்  அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்ரீ சிட்டி,  சித்தூரின் இயக்குநராக பதவிவகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இயக்குனர் முனைவர் கே சங்கரநாராயணசாமிக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்.

Continue Reading

தர நிர்ணயம் மற்றும் தர முறைகளுக்கு மாநில அளவிலான கூட்டம் இன்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

தர நிர்ணயம் மற்றும் தர முறைகளுக்கு மாநில அளவிலான கூட்டம் தமிழ்நாடு அரசு  தலைமைச் செயலகத்தில் இன்று (08.05.2023) நடைபெற்றது. குழாய் மூலம் குடிநீர் விநியோக மேலாண்மை அமைப்புக்கான தரநிலைகளை செயல்படுத்துதல், ஆயத்த கலவை தயார்நிலை கான்கிரீட் செயல்முறை சான்றிதழ், மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ் திட்டம், முத்திரையிடுதல், பால் மற்றும் பால் பொருட்களுக்கான இணக்க மதிப்பீட்டுத்  திட்டம், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மைத் திட்டம், மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான அணுகுமுறை  போன்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில்  விரிவாக விவாதிக்கப்பட்டு  பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ​தமிழ்நாடு மாநிலத்தில் தர நிர்ணயம் குறித்த அமைப்புகளை உருவாக்குவது  தொடர்பாகவும் விவாதங்கள் நடத்தப்பட்டன.  இந்த தர நிர்ணய அமைப்புகளின் முக்கிய பணியானது அரசு, தொழில்துறை மற்றும்  இந்திய தர நிர்ணய அமைவனம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு  பாலமாக செயல்படுவதே ஆகும். மாநில அரசு அதிகாரிகளின் தரநிர்ணயம் குறித்த  திறனை மேம்படுத்துவது, தரநிலைகளை உருவாக்குதல், தர நியமங்கள் உபயோகத்தை அதிகரித்தல், இணக்க மதிப்பீடு மற்றும் நுகர்வோர் மேம்பாடு ஆகியவை குறித்தும் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது, விவாதிக்கப்பட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் வெ. இறையன்பு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, கூடுதல் தலைமைச் செயலர் (கூட்டுறவு, உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை), டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு)   திரு யு எஸ் பி யாதவ்,  சென்னை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி.பவானி ஆகியோர் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கமளித்தனர்.

Continue Reading

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள் மக்கள் நலத் திட்ட பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்-கூடுதல் தலைமை இயக்குனர் மா -அண்ணாதுரை.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு செயல்திட்டங்களை அரசு நிறுவனங்கள் மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தின் அவசியம். மேலும் இதற்காக மத்திய அரசின் ஊடக நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மேலும், அரசு நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஊடக ஒளிபரப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற போது, இதன் ஒருங்கிணைப்பு […]

Continue Reading

அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு உருவாக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க முடிவு- ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இது செக்.

நாட்டில் வரி செலுத்துவோர் அமைப்பு ! வரிப்பணம் வரி செலுத்துவோருக்கு உரிமையானது. அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் உரிமை ,வரி செலுத்துவோர் அனைவரும் அந்த உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், செயல்படுவது எல்லாம் ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் .இது காவல்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த உண்மை தெரிய வேண்டும்.  மேலும், யார் ஆட்சி செய்தாலும், இனி இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர் […]

Continue Reading