நாமக்கல்லில் பிடிபட்ட பங்களாதேஷ் பிரஜைகள்…! தீவிரவாத கும்பலுடன் தொடர்பா? NIA விசாரணை!

அரசியல் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் மாவட்ட டவுன் காவல் நிலைய எல்லையில் நேற்று பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் ரகசிய தகவலின் அடிப்படையில் பிடித்துள்ளனர்.இதில், பிடிப்பட்டவர்களிடம் ஒருவரிடம் மட்டும் முறையாக பாஸ்போர்ட், விசா இருந்துள்ளது. மற்றவர்களிடம் இல்லாததால் அவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “கடந்த 9 மாதங்களாக நாமக்கல் டவுன் காவல் நிலைய எல்லையான விசாணம் பகுதியில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மொகமது முல்லா, அனிக்ஷ் பாசில், இஸ்லாம் முகமது மற்றும் அவரது நண்பர் ஒருவர் என 4 பேர் வீடு வாடகைக்கு எடுத்து கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதுதொடர்பாக தீவிரவாத குழுவை கண்டறியும் பிரிவிலிருந்து நாமக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்மூலம் சம்பந்தப்பட்ட 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ஒருவரிடம் மட்டும் பாஸ்போர்ட் இருந்துள்ளது. மற்றவர்களிடம் ஏதும் இல்லாததால், பாஸ்போர்ட் உள்ள நபரை தீவிர விசாரணைக்கு பின் பங்களாதேஷ்க்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் 3 பேரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக தீவிரவாதிகளை கண்டறியும் மற்றும் தடுத்து நிறுத்தும் பிரிவினர், தேசிய புலனாய்வு முகமை (NIA) மேற்கண்ட 3 பேரிடமும், கடந்த 9 மாதங்களாக நாமக்கல்லில் என்ன செய்தார்கள், இவர்களை அழைத்துவந்தது யார்? தீவிரவாத கும்பலுடன் ஏதும் தொடர்பில் உள்ளார்களா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *