நாட்டில் போலி வழக்கறிஞர்களை களை எடுக்க , இந்திய பார் கவுன்சில் கொண்டு வந்த சட்டம் போல்! பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா போலி பத்திரிகைகளையும், போலி பத்திரிகையாளர்களையும் களையெடுக்க சட்டம் கொண்டு வருமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram

நாட்டின் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்திய பார் கவுன்சில் சட்ட மாணவர்களுக்கான குற்ற பின்னணி பயோமெட்ரிக் ஆய்வு அறிவிப்புகளை பரிந்துரைத்துள்ளது. இந்திய பார் கவுன்சில் குற்றவியல் பின்னணி சரிபார்ப்பு முறையை உடனடியாக செயல்படுத்த அனைத்து சட்டக் கல்வி மையங்களில் (CLE) ஒரே நேரத்தில் பட்டங்கள் வேலை வாய்ப்பு நிலை மற்றும் வருகைக்கு இணைந்துதல் தொடர்பான கட்டாய அறிவிப்புகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது. 

மேலும், துணை வேந்தர்கள், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், சட்ட பட்டங்களை வழங்கும் சட்ட கல்வி மையங்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பில் சி எல் இ கள் பயோமெட்ரிக் வரவேற்பு பதிவு முறைகள் இணைத்து வகுப்பறைகளில் சிசி டிவி கேமராக்களை பொருத்தி, வெளிப்படைத்தன்மை மற்றும் வருகை மற்றும் நடத்தை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது. இது சட்டக் கல்வி மாணவர்களை தூய்மையான குற்றவியல் பதிவை பராமரிக்கவும், எஃப் ஐ ஆர் குற்றவியல் வழக்கு தண்டனை, அல்லது விடுதலையை இறுதி தீர்ப்புக்கு முன் அறிவிக்க வேண்டும். மதிப்பெண்கள் மற்றும் பட்டங்கள் போன்ற தகவல்களை வெளியிட தவறினால் இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டத்தை நிறுத்தி வைப்பது உட்பட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், இந்த சட்டபதிகளை அமல்படுத்தாத சட்ட கல்லூரிகளின் BCI ஆல் அங்கீகாரம் நீக்கவும் தேவையான கல்வி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான அபராதங்கள் விதிக்கவும், இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் மாணவர்களின் பட்டப்படிப்பு,  சமூக சேவை, கிரிமினல் வழக்கு போன்றவை இருந்தால் அவர்களுடைய பட்டம் நிறுத்தி வைக்கப்படும் .

மேலும், சட்டக் கல்வி பட்டத்தை வாங்குவதற்கு முன் ஒவ்வொரு மாணவரும் இந்திய பார் கவுன்சிலின் என் ஓ சி (NOC) அதாவது தடையில்லா சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறவில்லை என்றால், பட்டம் சட்டக் கல்வி விதிகளின் விதி  12 இன் படி வருகை விதிமுறைகளுக்கு இணங்குவதற்கான சான்றும் வழங்கப்பட வேண்டும். மேலும், இது போன்ற அனைத்து வேலை வாய்ப்பு வழக்குகளும், பிசிஐக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் அமைப்பு கூறியுள்ளது. 

மேலும், இந்திய பார் கவுன்சிலருக்கு தெரிவித்து, என் ஓ சி (NOC) பெற தவறினால், மாணவர்கள் எந்த மாநிலத்திலும் இவர் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது போன்ற இந்திய பார் கவுன்சில் நாட்டின் சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த சட்டங்களை கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று. 

ஏனென்றால், இன்றைய வழக்கறிஞர்களின் 75% அரசியல் கட்சிகளிலும், ஜாதி அமைப்புகளிலும், மதரீதியான அமைப்புகளிலும் ,தங்களை அதில் ஈடுபடுத்திக் கொண்டு, நாட்டில் நடக்கின்ற கிரிமினல் குற்றங்களுக்கு ஒத்து ஊதும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, சுமார் 20 ஆண்டுகளாக கர்நாடகா, ஆந்திரா போன்ற சட்ட கல்லூரிகளில் ரூ 50,000/- கொடுத்து, இந்த பட்டத்தை வாங்கி வந்தவர்கள் புரோக்கர் வேலைகளிலும், தானும் வழக்கறிஞர் என்று கோட்டுகளை போட்டுக்கொண்டு, இந்த சமூகத்தை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களும் இந்த பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞர் என்று தங்களை பதிவு செய்கிறார்கள். 

இதற்கு காரணம் சட்ட கல்லூரி செய்கின்ற தவறு இன்று நாட்டில் சட்டக் கல்வியை வியாபாரமாக்கி, அதனுடைய தகுதியும், முக்கியத்துவத்தையும் தெரியாமல், இந்த பட்டங்களை கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்களா ? என்பதை ஆய்வு செய்தால், அதில் ஒரு சதவீதம் கூட தேர மாட்டார்கள். இது போன்ற வழக்கறிஞர்கள் சுமார் பத்து லட்சத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் இருப்பார்கள் என்பது இது ஒரு தோராயமான கணிப்புடன் தெரிவிக்கும் சர்வே, இது சட்டத்தைப் பற்றியே தெரியாமலே வழக்கறிஞர் என்று சொல்லிக் கொண்டு சமூகத்தை ஏமாற்றுபவர்கள்.

 இன்று அரசியல் கட்சிகளில் பதவி பொறுப்புக்களை வைத்துக் கொண்டு, கட்சி வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் ,மற்றொரு பக்கம் தனக்கு பின்னால் ஒரு ஜாதி சங்கமும், ஜாதி அரசியல் கட்சியும் இருக்கிறது என்று சமூகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் வழக்கறிஞர்களா? அல்லது ஜாதி அரசியல் கட்சியை சார்ந்தவர்களா? அல்லது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களா? எதன் அடிப்படையில் இவர்கள் பணியாற்றுவார்கள்?

 ஒரு வழக்கோ அல்லது சமூக முக்கியத்துவமான வழக்கோ ,நீதிமன்றத்தில் இவர்கள் மூலம் அந்த வழக்கை பதிவு செய்து, இவர்கள் வாதாடும்போது, ஒரு வழக்கறிஞர்களாக அதாவது நடுநிலையோடு வாதாடுவார்களா? அல்லது அந்த ஜாதி கட்சிகளுக்காக வாதாடுவார்களா? அல்லது அரசியல் கட்சிகளுக்காக வாதாடுவார்களா? இது ஏன் இந்த கேள்வியை இங்கே முன் வைக்க வேண்டும்? என்றால் பெரும்பாலான வழக்குகள் அரசியல் கட்சியினர் வழக்குகளாக தான் நாட்டில் இன்று இருக்கிறது.இதே நிலைமைதான் அரசியல் கட்சி பத்திரிகைகளுக்கு நிருபர்களாக பணியாற்றுபவர்கள், அந்த கட்சிக்காக செய்தியை கொடுப்பார்களா? அல்லது நடுநிலையாக கொடுப்பார்களா? இவர்களும் செய்தியாளர்கள் என்று அரசின் சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்கு பின்னால் தன்னுடைய கட்சி தான் எவ்வளவு சமூக குற்றங்களில் ஈடுபட்டாலும், அல்லது சட்ட மோசடிகளில் ஈடுபட்டாலும், நம்மை காப்பாற்ற அரசியல் கட்சி வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு தவறான கருத்து அரசியல் கட்சியினர் இடையே இருந்து வருகிறது. அது மட்டுமல்ல, இன்றைய அரசியல் கட்சியினர் முதல் அமைச்சர்கள் வரை தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் , கிரிமினல் வழக்குகள், இவை அனைத்திற்கும் அந்தந்த அரசியல் கட்சிகளில் வழக்கறிஞர்கள் டீம் என்று ஒன்றை உருவாக்கி வைத்து, அதில் இது போன்ற வழக்கறிஞர்களை பயன்படுத்தி வருகிறார்கள். 

இதில் எல்லோரையும் இந்த 50,000 கொடுத்து பட்டத்தை வாங்கியவர்கள் என்று சொல்ல முடியாது. படித்து வந்தவர்களும் உண்டு. இருப்பினும் கட்சிகளில் பொறுப்புகளை பெற்று, அந்தக் கட்சியின் வழக்கறிஞர்களாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் இவர்களுடைய கட்சியின் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மந்திரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊழல் வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் மறைமுகமான பேரத்தை நடத்துகிறார்கள். இங்கே தான் நீதி தேவதை தலை குனிகிறாள். 

எத்தனையோ மந்திரிகள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சட்டத்தின்படி தண்டனை பெற்றிருக்க வேண்டியவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள். எப்படி இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி மாணவர்களுக்கு பயோமெட்ரிக் முறையை கொண்டு வந்து அவர்களை ஒழுங்கு படுத்துவது போல இதையும் ஒழுங்கு படுத்த வேண்டும். நீதிபதியின் தீர்ப்பு வெளிப்படத் தன்மையாக இருக்க வேண்டும். அது சட்டத்தின் ஓட்டையில் உள்ள ஊழல்வாதிகள் தப்பிக்க இடம் கொடுக்கக் தீர்ப்பு ஒத்துழைக்கக் கூடாது. அதனால்தான், நாட்டில் குற்றவாளிகள் அரசியலில் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அரசியல் கட்சிகள் என்பது சமூகத்திற்கான மாற்றமாக இருக்க வேண்டும்.ஆனால் அரசியல் கட்சி என்பது அவர்களுடைய முன்னேற்றமாக இருந்து வருகிறது. மேலும், இன்று சமூகத்தின் குற்ற பின்னணி உள்ளவர்கள் தான் சுமார் 75% அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள். மக்களுக்கு சேவை என்று சொல்லிவிட்டு, கொள்ளையடிக்கும் வேலையை அரசியல் கட்சியினர் தொழிலாக கொண்டுள்ளனர். இதற்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் துணை போகிறார்கள்.

 நியாயமான முறையில் கொடுக்கப்பட வேண்டிய பத்திரிக்கை துறையின் சலுகை, விளம்பரங்கள் கூட பத்திரிக்கை துறையில் இது போன்ற தவறான அரசியல்வாதிகளால் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் அதற்கு துணை போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆக கூடி அரசியல் என்பது நீதிமன்றத்திற்கு வெளியில் இருக்க வேண்டும். அரசியல் என்பது பத்திரிக்கை துறைக்கு வெளியில் இருக்க வேண்டும்.. இவை எல்லாம் உள்ளே வந்து விட்டால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலை வேரறுக்க வேண்டும் என்றால் நீதித்துறையிலும், பத்திரிக்கை துறையிலும் அரசியல் வெளியில் இருக்க வேண்டும் .

இங்கே ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசத்தை பத்திரிக்கை துறையில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். அறிவுக்கு, திறமைக்கு, தகுதிக்கு, பணம் ஈடாகாது. ஆனால், அரசியல் உள்ளே இருப்பதால் ,ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. விலையில்லா அறிவு, திறமை ,கல்வியை போலி வழக்கறிஞர்களால் விலை பேசப்படுகிறது .போலி பத்திரிகையாளர்களால் விலை பேசப்படுகிறது. 

மேலும், தமிழ்நாட்டில் அரசியல் ஆதிக்கத்தின் உச்சம் தான் கார்ப்பரேட் பத்திரிகையாளர்கள் மட்டுமே, பத்திரிகையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்பாளர்கள். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. தவிர, பத்திரிகையின் நடுநிலைக்கு அர்த்தமில்லாத ஒன்று. இங்கே அரசியல்வாதிக்கும், ஊழல்வாதிக்கும், முட்டுக் கொடுக்கும் வேலை பார்ப்பது பத்திரிகையாளர்களின் வேலையும், பத்திரிகைகளின் வேலையும் அல்ல. இது பத்திரிகையாளர்களின் போலி உருவகம் தான், 

இன்றைய தமிழ்நாட்டின் பத்திரிகை நல வாரியம் , தகுதியற்ற பத்திரிகைகள் சலுகை, விளம்பரங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தகுதியற்ற பத்திரிகையாளர்கள் அந்த சலுகை, விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் களை எடுக்கப்பட வேண்டும். எப்படி நீதித்துறையில் இந்திய பார் கவுன்சில் களை எடுப்பது போல, போலி செய்தியாளர்கள், போலி பத்திரிகைகள் களை எடுக்கப்பட வேண்டும். இந்த போலிகள் அரசியல் பின்னணியில், சர்குலேஷன் சட்ட விதியில், பத்திரிக்கை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. 

இந்த சலுகை, விளம்பரங்கள் அரசியல் கட்சியினரின் அல்லது ஆட்சியாளர்களின் பரிந்துரையாக அது இருக்கக்கூடாது. ஒரு நடுநிலையான பத்திரிக்கை சமூக நன்மைக்கான, பத்திரிக்கை எது? என்பதை தீர்மானிக்க பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா இதை வரைமுறைப்படுத்த வேண்டும் . அரசியல் கட்சி பத்திரிகைகள் கூட சர்குலேஷன் என்ற விதிமுறையை பயன்படுத்தி கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தை நாட்டில் வீணடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், சமூக நன்மைக்கான பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் மறுப்பது இவர்களையெல்லாம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும் .

 எப்படி இந்திய பார் கவுன்சில் சட்டக் கல்வி மாணவர்களை ஒழுங்கு படுத்துவது போல, இந்த பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா பத்திரிகை துறையை ஒழுங்கு படுத்த வேண்டும் .அப்போதுதான் நாட்டில் ஊழல்வாதிகள், அரசியல் கிரிமினல்கள், அரசியலில் இருந்து வெளியேற்ற முடியும்.இவர்கள் அரசியலில் இருக்கும் வரை நாட்டின் வளர்ச்சிக்கு, சமூக முன்னேற்றத்திற்கு, இந்த தேசத்தின் பாதுகாப்பிற்கு, இவர்கள் தடைகளாக இருந்து வருவதோடு, உழைக்கும் மக்களுக்கு, தகுதியானவர்களுக்கு, எந்த ஒரு நன்மையும் கிடைப்பதில்லை .அவர்கள் வாழ்க்கையோடு போராடுவதற்கு இந்த போலி அரசியல்வாதிகள், ஊழல் வாதிகள், போலி பத்திரிகைகள், போலி பத்திரிகையாளர்கள் மற்றும் போலி வழக்கறிஞர்கள் முக்கிய காரணம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *