பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

அரசியல் இந்தியா உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும், 

மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு அது தேவையற்ற ஒன்று. இன்று பிஜேபியில் அண்ணாமலை முதல் சீமான் வரை இதை தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால், முதன்முறையாக மக்களின் பிரச்சனையை கையில் எடுத்து சரியான அரசியலை இந்த காலத்திற்கு ஏற்றவாறு விஜய் அரசியலில் இறங்கி உள்ளார் என்பது மக்களுக்கு தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்ல, பரந்தூர்  விமான நிலையத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை விஜய் நிச்சயம் முறியடிப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதில் திமுக வா? தமிழக வெற்றிக்கழகமா? என்ற நிலைக்கு பிரச்சனை உருவாகும். இதில் அதிகாரத்தால் திமுக அரசு சரி செய்ய முடியும் என்றோ அல்லது பணத்தால் சரி கட்ட முடியும் என்றோ நினைத்தால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். 

அந்த மக்கள் ஒரே பிடிவாதமாக தான் இருக்கிறார்கள். அவர்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதில் விஜய் திமுகவை எதிர்த்து அரசியல் செய்வார் என்பது ஊர்ஜிதம். மேலும், சீமான் போன்றவர்களும் களத்தில் இறங்கினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதை தவிர்த்து வேறு சில அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கவும் வாய்ப்புள்ளது. இந்தப் பிரச்சனையில்

 அந்த கிராமத்திற்கு வந்து சென்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கிராம மக்களிடையே பேசியதில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கின்றனர். அதாவது இவர்கள் லட்சம் கொடுத்தாலும், கோடி கொடுத்தாலும், அந்த மக்களுக்கு அங்கிருந்து செல்ல விருப்பமில்லை. திமுக ஆரம்பத்தில் இருந்தே இந்த பணம் கொடுக்கும்  கட்சி புரோக்கர்களும், பணம் கொடுத்து சரி கட்டி விடலாம் என்று மந்திரி வேலு நினைப்பது தவறு. 

உங்களுடைய சுயநலத்துக்கு தான் இந்த விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்கிறார்கள் என்ற எண்ணம் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை அழித்து விமான நிலையமா? இந்த விமான நிலையத்தால் எத்தனை பேர் இங்கு இருப்பவர்கள் தினம் விமானத்தில் ஏறப்போகிறார்கள்?இதை வேலு சொல்லுவாரா? உங்களை மாதிரி அரசியலில் கொள்ளை அடித்து பல ஆயிரம் கோடிகளை சேர்த்துக்கொண்டு, விமானத்தில் ஏறிக் கொண்டிருக்கிறீர்கள் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். திமுக இதுவரை பார்க்காத ஒரு தேர்தலை 2026 இல் பார்க்கப் போகிறது. 

உங்களுடைய இந்த டிவி பேட்டி ,பத்திரிகை பேட்டி வைத்து அந்த மக்களை சமாதானப்படுத்தி விட முடியாது. நீங்கள் கொடுக்கின்ற பொய் வாக்குறுதிகளை நம்ப தமிழக மக்களே இனி தயாராக இல்லை. அவர்கள் நிலத்தை உங்களுக்கு கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் நிற்க வைத்து, நீங்கள் வீடு கட்டி கொடுக்கிறீர்கள், வேலைவாய்ப்பு கொடுக்கிறீர்கள், உங்களை ஒரு நயா பைசாவுக்கு கூட இனிமேல் நம்ப மாட்டார்கள். 

நாட்டில் மந்திரிகளின் சொத்து ஏறுகிறதே ஒழிய, மக்களின் வருமானம் ஏறவில்லை. அவர்களுடைய வாழ்வாதாரம் உயரவில்லை. அது மட்டுமல்ல, எங்களைப் போன்ற பத்திரிக்கை நடத்தக்கூடிய எங்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்களை சட்டத்தின் மூலம் ஏமாற்றுவது எத்தனை நாளைக்கு என்பதை பார்க்க தான் போகிறீர்கள். திமுகவிற்கு தமிழக மக்கள் 2026 ல் சரியான பாடம் புகட்ட எப்போது? என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த காலத்தில் திமுக சொன்னதை நிறைவேற்றி இருக்கிறது?

நீங்கள் சொல்வதை இந்த டிவியிலும், பத்திரிக்கையிலும் படித்து பார்த்து ஆறுதல் அடைவதற்கா? மேலும் ,திமுக அரசு போலீசை நம்பி இந்த கிராம மக்களை அச்சுறுத்தினால், அதன் விளைவு தமிழகமெங்கும் இந்த மக்கள் மீது நிச்சயம் ஒரு அனுதாபம் கண்டிப்பாக ஏற்படும். விஜய் நிச்சயம் இந்த மக்களுக்காக இருப்பார் என்ற நம்பிக்கையில் அவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் இதை எதிர்த்து மக்களின் விருப்பத்திற்கு மாறாக திமுக நிலத்தை கையகப்படுத்தினால், நிச்சயம் பிரச்சனை வேற மாதிரியாகத்தான் இருக்கும். 

மேலும் ,குறிப்பிட்ட மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த ஒரு இடத்தையும் அரசாங்கம் கையகப்படுத்த முடியாது. இங்கே சட்ட சிக்கல் ஏற்படும். அதற்குள் ஆட்சி முடிந்துவிடும். உங்கள் நோக்கம் நிச்சயம் இங்கே நிறைவேறாது. இந்த மந்திரிகளை நினைத்தால் கடவுள் பண்ண தப்பா? அல்லது இந்த மக்கள் பண்ண தப்பா? ஆயிரம், 500க்கு விலை போனதன் விளைவு, இன்று ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது இவர்கள் திருந்துவார்களா?கடவுள் தான் இவர்களை திருத்த முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *