தமிழ்நாட்டின் அரசியல், சினிமா அரசியல் போல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

திமுகவின் ஆரம்பம் சினிமாவில் ஆரம்பித்த கட்சி ,அதனுடைய நடவடிக்கைகள் ஆராய்ந்து பார்க்கும் போது, எல்லாம் சினிமா மாடலாகவே திராவிட மாடல் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சினிமாவில் வரும் காட்சிகளை போல தான் இருக்கிறது. அமலாக்கத்துறை பல வருடங்களாக செந்தில் பாலாஜியின் புகார்கள் விசாரணையில் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும், அமலாக்கத் துறையும் சேர்ந்து எடுக்கின்ற நடவடிக்கை. இதனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், உச்ச நீதிமன்றத்திற்கு அமலாக்கத் துறை தெரிவித்து […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் பல்ஸ் பார்க்க சென்னை வந்த உள்துறை அமைச்சர் –அமித்ஷா விசிட் .

தமிழ்நாட்டிற்கு அரசியல் பல்ஸ் பார்க்க வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா இங்குள்ள சில முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்துள்ளார். இது தவிர, சில தொழிலதிபர்கள், வியாபாரிகள் சந்தித்து அரசியல் நிலவரங்களை கேட்டறிந்துள்ளார். இந்நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் சந்திக்க நேரம் கேட்டார்கள். ஆனால், அவர்களை சந்திப்பதற்கு பிஜேபி தலைவர் அண்ணாமலை ஏற்பாடு செய்யவில்லை என்பது இரண்டு பேருக்குமே வருத்தம். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். […]

Continue Reading

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தவரின் சொத்து முடக்கி ,வழக்கும் தொடர்கிறது? இது பற்றி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மோசடி பேர்வழிகள் ,அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சிந்திக்கிறார்களா?

அமலக்கத்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை ,வருமானவரித்துறை போன்ற துறைகள் இல்லை என்றால், நாட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கள்ள நோட்டுகள் ,ஊழல்கள், மோசடிகள், சொத்து குவிப்பு ,வரியைப்பு  போன்ற எந்த குற்றங்களும் கண்டுபிடித்து, அதற்குரிய தண்டனையை சட்டப்படி கொடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வருவது இந்த துறைகளாகும். இப்படிப்பட்ட துறைகள் நாட்டு மக்களின் நலன்களில், அக்கறை செலுத்த வேண்டிய துறைகள்.  இவர்கள் ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாட்டில் ஊழல்வாதிகள், சட்டத்தை ஏமாற்றி அரசியல் […]

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டதால் –  கலக்கத்தில் திமுக.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .அதன்படி இன்று அவர்களின் சொத்து பட்டியலும் வெளியிட்டுள்ளார். இது முதல் கட்டமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து கோடிக்கு மேல் அமைச்சர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் சபரீசன் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் மீது பினாமி சொத்துக்கள் குடும்ப சொத்துக்கள் வெளிவந்துள்ளது. இது தமிழக மக்களிடையே எப்படிப்பட்ட […]

Continue Reading

இந்தியாவை ஏழை நாடாக ஆகிய காங்கிரஸ் ஆட்சியின் வரலாற்று ஊழல் சுவிஸ் வங்கிகள் யார்? யார்? எவ்வளவு என்ற விவரம் தெரியுமா?

இந்தியா எப்பொழுதோ வல்லரசாக வேண்டிய நாடு. இதை ஆண்ட காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக வரலாற்று ஊழல் செய்து ,அந்த ஊழல் பணத்தை சுஸ் வங்கி மற்றும் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். மேலும் திமுக வை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஆட்சி அதிகாரம் மக்கள் எதற்காக கொடுத்தார்கள்? என்று கூட தெரியாமல் கொள்ளையடித்து ,அதை கொண்டு போய் வெளிநாடுகளில் முதலீடு செய்வது, அல்லது […]

Continue Reading

தமிழ்நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் ,மக்களின் தேவைகள் இருக்கும் போது, இன்று திமுக அரசு, தமிழகம் என்ற கவர்னரின் வார்த்தை ஏன் அரசியல் ஆக்க வேண்டும்?

கவர்னர் அரசியல்வாதியா? அல்லது ஸ்டாலின் அரசியல்வாதியா? பார்க்க போனால் கவர்னர் தான் முதல் அரசியல்வாதி போல் தெரிகிறது. மேலும் கவர்னரை மிகப்பெரிய அளவில் ஸ்டாலின் உயர்த்தி விட்டார். இதுதான் இவருடைய அரசியலுக்கும், கலைஞர் கருணாநிதியின் அரசியலுக்கும், உள்ள வித்தியாசம் என்று நினைக்கிறேன் .மேலும், ஒரு சாதாரண பேச்சு இன்று தமிழகம் முழுதும் சர்ச்சையாக்கி விட்டார்கள். இது திமுகவுக்கு நஷ்டம். பாஜகவிற்கு லாபம். கவர்னர் சொன்னது தமிழ்நாடு என்று அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என்று அழைக்கலாம் .இது அவருடைய […]

Continue Reading

100 நாள் வேலை திட்டத்தில் நடக்கும் மோசடிகள் மீது மத்திய அரசின் நடவடிக்கை பாயுமா ? – தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன்.

100 நாள் வேலை திட்டத்தில் மோசடி நடந்தால் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், இந்த தொலைபேசி எண்ணில் ஜனவரி 1 முதல் 8925811328  தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தேனி மாவட்ட ஆட்சியர் தெரிவித்த தகவல்.மேலும், சில தினங்களுக்கு முன் மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளத்தில் வெளியிட்ட செய்தி தமிழக அரசுக்கு கேட்கவில்லை என்றாலும், அது மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தமிழக மக்கள் சார்பாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கும், தேனி மாவட்ட ஒப்பர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரத்திற்கும், தேனி மாவட்ட எமது நிருபர் முரளிதரனுக்கும் கிடைத்த வெற்றி. பல ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் நடந்து வந்த என் ஆர் ஜி எஸ் ( NRGS) வேலைகளில் நடைபெற்று வந்த ஊழல், மத்திய அரசின் நடவடிக்கைக்கு கொண்டு வந்துள்ளது .அதில் யார் தவறு பண்ணாலும், அதாவது ஊராட்சி மன்ற தலைவரோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரோ அல்லது கிராம பஞ்சாயத்து செயலாளரோ, அந்த நிதி சம்பந்தமான மோசடிகள் அல்லது வேலை செய்யும் மக்களுக்கான சம்பளம் மற்றும் தில்லுமுல்லு எதுவானாலும், இதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி  : 8925811328 . எண்ணுக்கு புகார் அளித்தால் ,சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதில் யார், யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? என்பது தான் மிகவும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.  எனவே ,இந்த 100 நாள் வேலை திட்டத்தில் இனி தமிழக முழுவதும் இந்த நிதியை தவறான முறையில் வேறு செயல்பாட்டுக்கு கொண்டு சென்றால், அது பற்றியும் புகார் அளிக்கலாம் என்று மத்திய அரசு இந்த எண்ணை வெளியிட்டுள்ளது.  இதை தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள், தங்கள் கிராமங்களில் நடை பெறும் ஊழல்கள், தில்லுமுல்லுகள், எதுவானாலும் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் இதை தெரிவித்துள்ளார். இனி ஜனவரி 1 முதல் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு 100 நாள் வேலை திட்டத்தில் நடக்கின்ற கோடிக்கணக்கான மோசடிகளுக்கு தமிழக மக்கள் இனி முற்றுப்புள்ளி வைக்கலாம்.

Continue Reading

தமிழகம் முழுதும் 100 நாள் வேலை திட்டத்தில் தொடரும் மோசடிக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?,- தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம்.

தேனி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வழக்கறிஞர் சோமசுந்தரம் ஒரு புகார் மனுவை தேனி மாவட்ட ஊராட்சி முகமைக்கு அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கட்டுமான பணிகளுக்காக குறிப்பிட்டு சதவீதத்தை அந்த கிராம மக்களின் வேலை வாய்ப்புக்காக மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ஆனால், தமிழகம் முழுதும் இந்த தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அந்த மக்களுக்கு அந்த வேலையும் கொடுப்பதில்லை. அதற்கான பணமும் அவர்களுக்கு கொடுப்பதில்லை. ஏனென்றால், அந்த […]

Continue Reading