குடும்ப ஊழல் பிரச்சனைகளை முதல்வர் எப்படி சமாளிக்க போகிறார்? திமுகவின் ஆட்சி நிர்வாகம் என்ன ஆகும்? திமுக வாய்ச்சொல் வீரர்கள் வாயிலேஇதை சமாளிக்க முடியுமா……? தமிழக மக்களின் கேள்வி ?

திமுக வின் வாய்ச்சொல் வீரர்கள் எல்லாவற்றையும் வாயிலே சமாளிக்கும் முரட்டு தைரியம் கொண்டவர்கள். ஆனால் இப்ப பிரச்சனைகள் வாய் சொல் வீரர்களுக்கு கடும் சவால்கள் தான். தவிர, எத்தனை நாளைக்கு இவர்களுடைய பேச்சை நம்பி தமிழக மக்கள் ஏமாறுவார்கள்? ஒரு பக்கம் ஆட்சி நிர்வாகத்திற்கு நெருக்கடிகள், இன்னொரு பக்கம் அமைச்சர்களின் பேச்சு, தமிழக மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் விட மிகப்பெரிய தலைவலி, சபரீசனின் ஜி ஸ்கொயர் விவகாரம், மகன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் விவகாரம், […]

Continue Reading

அமலாக்கத்துறை நடத்திய ரெய்டில் கலக்கத்தில் முதல்வர் குடும்பம்.நோ அப்பயிண்ட்மெண்ட் டெல்லி மேலிடம்.

தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேலாக அமலாக்கத்துறை நடத்தும் ரெய்டில் முதல்வர் குடும்பம் ஆடிப் போய் இருக்கிறது. இதில் ஏராளமான ஆவணங்கள் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்து ,தோண்ட, தோண்ட அமலாக்கத்துறைக்கு லிங்க் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இதைப் பற்றி தெரிந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் டெல்லி மேல் இடத்துக்கு அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறார் .அதற்கு டெல்லி மேலிடம் மறுத்துவிட்டது. அதனால் முதல்வர் வேதனையில் என்ன ஆகும்? என்ற கலக்கத்தில் முதல்வர் குடும்பம் இருந்து வருகிறது.  இதில் மருமகன் சபரீசன் […]

Continue Reading

பெண்கள் சமூக உணர்வுடன் தவறுகளை தட்டிக் கேட்டால், சரித்திர மாற்றங்கள் உருவாக்க முடியும்.

இந்த பெண்மணி சமூக அக்கறையுடன் பேசியிருப்பது ,சமூக வலைதளத்தில் மக்கள் மத்தியில் சில உண்மைகளை அது பிரதிபலிக்கிறது. இப்படிப்பட்ட பல பெண்கள் இந்த சமூக குற்றங்களுக்கு எதிராக பேசும்போது, நிச்சயம் மாற்றங்கள் கொண்டுவர முடியும். அதற்கு அரசியல் தேவையில்லை. இது போன்ற நல்ல சிந்தனை உள்ள பெண்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், நிச்சயம் சமூகத்தில் மாற்றங்களை கொண்டு வர முடியும். இவர்கள் சொல்வது போல், நமக்கு நாமே என்ற வார்த்தை மிக முக்கியத்துவமானது. நமக்கு நாமே நம்மை காப்பாற்றிக் […]

Continue Reading

இன்று பிறந்தநாள் காணும்  மாண்புமிகு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் எம்பி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில்,பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .

வன்னிய சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் உரிய பங்களிப்பை அரசியல் அதிகாரத்தால் கொடுத்த, உங்களது கடமை உணர்வுக்கு சமுதாயம் என்றும் நன்றி கடன் செலுத்த கடமைப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து, இது சமுதாயத்தின் வாழ்த்துக்களாக நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியமும் பெற்று, சமூகப் பணியில் மேலும் பல பதவிகள் பெற்று தொடர்ந்திட, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை சார்பில், இன்று பிறந்தநாள் காணும் மாண்புமிகு முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தற்போதைய எம்பி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் […]

Continue Reading

இட ஒதுக்கீட்டு பிரச்சனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தலைவலியை ஏற்படுத்தப் போகிறதா ?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பட்டியலினத்தில் மதம் மாறிய கிறிஸ்துவ, முஸ்லிம்களுக்கு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருப்பது இந்து பட்டியலின சமூகத்திற்கு செய்கின்ற மறைமுக துரோகம். அந்த துரோகத்தை எதிர்த்து போராட இந்து பட்டியல் இன சமுதாயம் போராட ஆரம்பித்து விட்டது. தவிர, இது திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது. ஒரு பக்கம் வன்னியர் சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டிய 10.5% கொடுக்காமல் இருட்டடிப்பு செய்யும் வேலை. மறுபக்கம், இந்து பட்டியலின சமுதாயத்திற்கு கொடுக்கப்பட்ட இட […]

Continue Reading

வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் படி நிறைவேற்றாமல் திமுக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி முடக்குவதன் நோக்கம் என்ன ? – வன்னியர் சத்ரிய சாம்ராஜ்ய நிறுவனர்- சி ஆர் ராஜன்.

உச்சநீதிமன்றத்தில் 10.5% இட ஒதுக்கீட்டை மாநில அரசே நிறைவேற்றிக் கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். ஆனால் ,அதை எதிர்த்து முதல்வர் ஸ்டாலினுடைய மைத்துனர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். மதுரை உயர்நீதிமன்ற கிளை, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ,மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. தரவுகள் சரியாக வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. மேலும் 1985இல் அம்பாசங்கர் அறிக்கை இன் […]

Continue Reading

புதுவை துணைநிலைஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில்! இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

புதுவை மாநில துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் மற்றும்  அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை செயலாளர் மற்றும்  அதிகாரிகள், இஸ்லாமிய தோழர்கள், அனைவரும் கலந்து கொண்டு ஆன்மீக விழாவை சிறப்பித்தனர்.

Continue Reading

பாண்டிச்சேரி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி இறைவன் கொடுத்த ஒரு வரப்பிரசாதம். ஆனால், தமிழக மக்கள் திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்தியது தமிழகத்தின் துரதிஷ்டம்.

 மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்களுக்காக செயல்படுத்தும் போது தான் அது மக்களுக்கான ஆட்சி ! அந்த வகையில் புதுவை முதல்வர் ரங்கசாமியை அங்கு உள்ள மக்கள் சிறிய விஷயத்துக்கு கூட, அவரை எளிதில் பார்த்து தங்கள் பிரச்சனைகளை முறையிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அவர்களுடைய முகத்தைக் கூட பார்க்க முடியாது. கார் கண்ணாடி தான் பார்க்க முடியும்.மேலும், அந்த காலத்தில் இருந்த மக்கள் தலைவர்கள், முதலமைச்சர்கள், எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்களோ, அதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் புதுவை முதல்வர் […]

Continue Reading

புதுவை முதல்வர் ரங்கசாமியை மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பாண்டிச்சேரி முதல்வரங்க சாமியை மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியரும் வெளியீட்டாளருமான ராஜேந்திரன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார் . அதேபோல் சபாநாயகர் செல்வம் அவர்களையும் மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டார் ராஜேந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார் அவருடன் செய்தியாளர்கள் ஹரிஹரன் சோழன் பன்னீர்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை ! திமுகவினர் சொத்து பட்டியல் வெளியீட்டால், தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளுக்கு எதிரான அரசியல் யுத்தமாக இருக்குமா?

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்த அண்ணாமலைக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் திமுக அரசின் மீதும், தமிழக முதல்வர் மீதும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அதனால் அவர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சார்பில் மூத்த […]

Continue Reading