காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளின் கலப்பட அரிசி -நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர் கலைச்செல்வி மோகன்?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கலப்பட அரிசி கொடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த அரசு வேக வைத்தாலும், சாதம் ஒரு விதமான பிசுபிசுப்பு தன்மையோடு உள்ளது. மேலும், அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கும் போது ,அதில் அரிசியும் மிதக்கிறது. பாதி அரசி பிளாஸ்டிக் அரிசி போன்று இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், இதை சாப்பிடுவதால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும், வீட்டில் வளர்க்கும் பிராணிகளுக்கும், ஏதாவது நோய் உருவாகுமா என்ற அச்சத்தில் பேசி வருகின்றனர். […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் கம்பம் தொகுதி திமுக எம்எல்ஏ வை சிறைபிடித்த பொதுமக்கள்.

தமிழ்நாட்டிலே தேனி மாவட்ட மக்கள் ஆட்சியாளர்களையும், அரசியல்வாதிகளையும் தட்டி கேட்க பயப்படுவதில்லை. அவர்கள் அரசியல் தெரிந்த மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை சிறை பிடித்து கேட்க வேண்டிய அவசியம் என்ன ? எதற்காக சிறப்பிடிக்கப்பட்டார் ? சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமில் கம்பம் தொகுதி எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மக்களால் சிறைபிடிக்கப்பட்டார். மேலும், அரசு விழாவிற்கு வந்த எம் எல் ஏ வை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு காரசாரமாக வாக்குவாதத்துடன் […]

Continue Reading

திமுக அரசின் நில ஒருங்கிணைப்பு திட்டத்தின் மூலம் ஏரி, குளங்களில் சவுடு மண் கொள்ளை .

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி மற்றும் மூர்த்தி நாயக்கன்பட்டியில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் பொதுப்பணித்துறை ,வருவாய்த்துறை, காவல்துறை , என அனைத்தும் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு, விவசாயத்திற்கு என்று காரணம் காட்டி, குடியிருப்பு பகுதிகளுக்கு இந்த மண்ணை விற்பனை செய்து வருகிறார்கள் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. மேலும், மக்கள் அதிகாரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சட்டத்தை கொண்டு வரும் போதே, இதற்கான விளக்கத்தை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அதுதான் இப்போது தமிழகத்தில், கிராமங்களில் திமுக […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரத்தின் மதிப்பு மற்றும் அதன் ஊழல் தெரியாத உயர் நீதிமன்றம்.

கருவேல மரம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்ற ஒரே கருத்து மட்டும் தான் உயர்நீதிமன்றத்திற்கு தெரிய வந்துள்ளது. ஆனால், அது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை எந்த ஒரு பத்திரிகை, தொலைக்காட்சியும் இதுவரை நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை . அதாவது கருவேல மரத்தின் ஒரு டன் கட்டை இன்று மார்க்கெட் மதிப்பு ரூபாய் 4 ,500/-அதுவே அதை கரியாக்கி விற்பனை செய்தால், அந்த கரி எக்ஸ்போர்ட் செய்யப்படுகிறது .இதை வியாபாரிகள் கருப்பு தங்கம் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் , […]

Continue Reading

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை எந்த காரணமும் இன்றி, தாக்க வேண்டிய அவசியம் என்ன ?இதற்கு பின்னணியில் யார் …………? காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பேபி FIR போட மறுத்தன் பின்னனி என்ன? நடவடிக்கை எடுப்பாரா? – SP செபாஸ் கல்யாண்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமஸ். 80 வயது மதிக்கத்தக்க ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை நுங்கம்பாக்கம் காலனியை சேர்ந்த கண்ணன் /தந்தை பெயர் வரதன் (வயது 44) என்பவர் தாக்க வேண்டிய அவசியம் என்ன? இருவருக்கும் எந்த முன் விரோதமும் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எதனால் கண்ணன் ஓய்வு பெற்ற ஆசிரியர் தாமசை அடிக்க வேண்டும்? இவர் வேலை உண்டு. இவர் உண்டு இருப்பவர்.  அதாவது இவருடைய வீடு மணவாள நகரில் உள்ளது .நிலம் நுங்கம்பாக்கம் கிராம பஞ்சாயத்தில் உள்ளது. […]

Continue Reading

மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல.

மக்கள் அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட நிருபர்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி சமூகத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் நிர்வாகம் பொறுப்பல்ல. மேலும், மக்கள் அதிகாரத்தில் நிருபர்களாக சேர்ந்தவர்கள். இதுவரை எந்த ஒரு செய்தியும் கொடுக்காமல், நாங்கள் தொடர்பு கொண்டாலும் பேச மறுப்பதும், பத்திரிகை விதிமுறைக்கு எதிரான ஒன்று.  இவர்கள் எல்லாம் பத்திரிகையின் அடையாள அட்டை தான் பத்திரிகை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது எதற்காக கொடுக்கப்பட்டது? ஏன் கொடுக்கப்பட்டது? அதற்கு அர்த்தம் தெரியுமா? என்று கூட தெரியவில்லை. இவர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து ஒரு மாதம் கூட ஒரு படியாக வேலை செய்யவில்லை அதனால் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி எந்த ஒரு பத்திரிகையிலும் இவர்களை தகுதியானவர்கள் என்று ஏற்றுக் கொள்ளக் கூடாது. அதனால், கீழ்க்கண்ட நபர்களை இப் பத்திரிகையின் அடையாள அட்டைக்கு தகுதியற்றவர்கள் என்றும், பத்திரிகைக்கும் ,இவர்களுக்கும் எழுத சம்பந்தமும் இல்லை என்றும்,  நிருபர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  மேலும், இந்த பத்திரிகை அடையாள அட்டையை காண்பித்து, இவர்கள் சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபட்டால், அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை எமது  பத்திரிகையின் மூலமும், இணையதளத்தின் மூலமும் தெரிவித்துக் கொள்கிறோம்.                                                                                                 இப்படிக்கு                         […]

Continue Reading

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்குமா ?

சாமானிய மக்களின் நம்பிக்கையாக உயர்நீதிமன்றம் இருக்க வேண்டும் என்பது தமிழக மக்களின் சார்பில் மக்கள் அதிகார பத்திரிகையின் கோரிக்கை (மக்கள் அதிகாரம் சமூக வலைதளத்தில் பெரணமல்லூர் அரிய பாடி ஊராட்சி மன்ற செயலாளர் ரவி பதிவிட்ட ஒரு செய்தி ) ஐயா அமைச்சர்கள் நிலைமையே இப்படி இருக்கும்போது, ஊராட்சி தலைவர்கள் நிலைமை எப்படி ஐயா இருக்கும்? இது தெரியாமல் பெரணமல்லூர் ஊராட்சி மன்ற செயலாளர் ரவி உண்மையை சொன்னால் நடவடிக்கை எடுப்பார்களா ? எங்கய்யா சாமானிய மக்களுக்கு நீதி […]

Continue Reading

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 6வது ஆண்டு விழா.

சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் 6வது ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் கல்வி மற்றும் ஆராய்ச்சி சாதனைகளை, வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த ஆண்டு விழாவிற்கு கல்லூரியின் துணைத் தலைவர்கள்.சொக்கு வள்ளியப்பா,. தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் தலைவர்.வள்ளியப்பா தலைமையேற்று சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா கொண்டாட்டங்களை துவக்கி வைத்தார். அனைவரையும் வரவேற்ற கல்லூரியின் முதல்வர் காதர்நாவஷ் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான் வர்கீஸ் விடையூர் கிராம கரு வேல மரங்களை முழுதும் வெட்டிய பிறகே, கவர்னர் ஆர் என் ரவி, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், மற்றும் ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது க்கு ரிப்போர்ட் அனுப்பப் போகிறாரா ? கிராம பொதுமக்கள்.

விடையூர் கிராம பொதுமக்கள் மூலம் அனுப்பப்பட்ட புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து, அதன் நகலை சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு அனுப்ப ஊராட்சிகள் ஆணையர் தாரேஷ் அகமது, கவர்னர் ஆர் என் ரவி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் ஆகியோர் உத்தரவிட்டனர். ஆனால், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் கருவேல மரம் முழுதும் வெட்டி எடுத்து, அந்த வேரையும் நோண்டிய பிறகு அங்கு எதுவும் இல்லை என்று ரிப்போர்ட் அனுப்பலாம் என்று காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார். […]

Continue Reading

தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் – வந்தவாசி நகராட்சி.

வந்தவாசி நகராட்சியில் பயனற்ற பொருட்களை சேகரிக்கும் மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் வீடுகளில் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதை வந்தவாசி நகராட்சி பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, தங்களின் உபயோகமற்ற பொருட்களை இந்த சேமிப்பு கிடங்கில் கொடுக்கலாம். அல்லது அதை எடுத்து வர இயலாதவர்கள் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வரும்போது, அவர்களிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஜலால், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் தூய்மை இந்தியா திட்டம், […]

Continue Reading