பீகார் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால் 100% வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் ஆன்லைன் நேரலையில் கண்காணிக்க முடிவு .தேர்தல் ஆணையம் இன்னும் சட்டங்கள் கடுமையாக கொண்டு வராமல்! கடமைக்கு தேர்தல் என்பது, உழைக்கும் மக்களின் உயர்வு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டமே.

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஜூன் 17, 2025 • Makkal Adhikaram

 தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளை ஆன்லைன் நேரலையில் 100% கண்காணிக்க முடிவு செய்திருப்பது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய ஒன்று. அதுமட்டுமல்ல, 

வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சந்திக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமானது .அது ஏனென்றால், பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதை ரகசிய கேமராக்கள், கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும், தெருக்களில் ரகசியமாக வைத்து கண்காணிக்கப்பட வேண்டும். 

காவல்துறை ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் பட்டியலை எடுத்து, அவர்கள் இரவு நேரங்களிலோ, பகல் நேரங்களிலோ சென்று பண பட்டுவாடா செய்வதை தடுக்க வேண்டும். இதனால்தான் ஊழலையும், கருப்பு பணத்தையும், நாட்டில் ஒழிக்க முடியும். இது சாத்தியமா? சாத்தியம் தான். ஆங்காங்கே ரகசிய கேமராக்களை வைத்து, காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். 

இவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யட்டும், மாநாடு நடத்தட்டும், மாநாடு நடத்துகிற சாக்கில் பணம் பட்டுவாடா நடத்தக்கூடாது. இதுதான் முக்கியமாக தேர்தல் ஆணையம் ,அரசியல் கட்சியினரை கண்காணிக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல, இவர்களுடைய சொத்து விவரம் கொடுக்கும் போது, அது சரியானதுதானா? உண்மையானது தானா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். குறுகிய நாட்கள் இருப்பதால் ஆய்வு செய்வது கடினமானது. 

மேலும், தவறான சொத்து விவரம் கொடுத்தால், அப்போதே அவர்களை வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதேபோல் தவறான முறையில் சொத்து சேர்த்திருந்தாலும், அது பற்றி புகார் வந்தால்  தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கும் முக்கிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். 

கடமைக்கு தேர்தல் என்பது நாட்டில் ஊழலை வளர்க்கிறது. நல்ல நிர்வாகம் கொடுக்கக்கூடிய அரசியல்வாதிகள் தேர்வு செய்யப்படவில்லை. மக்களின் வரிபணம் கோடிக்கணக்கில் வீணாகிறது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. விலைவாசி உயர்வு ,வரி உயர்வு, கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், போன்றவற்றில் மக்களுக்கு ஒரு போராட்டமான வாழ்க்கையை அரசாங்கமே ஏற்படுத்திவிடுகிறது. 

இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால்! சில சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். பணத்திற்காக வாக்களிக்கும் மக்களின் ஓட்டு உரிமை நீக்கப்பட வேண்டும். பணம் கொடுப்பவர்களின் ஓட்டுரிமை நீக்கப்பட வேண்டும். இப்படி சட்டங்கள் கடுமையாக கொண்டு வராமல், கடமைக்கு தேர்தல் என்பது உழைக்கும் மக்களின் உயர்வு ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டமே .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *