தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.  ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் […]

Continue Reading

சனாதன தர்மத்தை எதிர்ப்பதால் இந்து கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகிறார்களா ? அதனால், அரசியல்  லாபம் அடைந்து விடுவாரா? – உதயநிதி ஸ்டாலின்.

அரசியலுக்கு வந்து அரசியலில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய வேண்டும்? மக்களின் தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்கு நாதி இல்லாமல், சனாதனத்தையும், இந்து மதத்தையும் ,இந்துக்களையும் ,இழிவு படுத்தும் விதமாக அரசியல் ஆக்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு  இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது . எந்த பேச்சால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அல்லலாம் என்று நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழப்பது உறுதி. மேலும், […]

Continue Reading

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் அதிகாரமும், சாமானிய டீக் கடைக்காரரின் வேதனையும்…. !

திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியாளராக இருந்து வரும் சாரு ஸ்ரீ, ஒரு சாமானிய டீக்கடைக்காரர் மீது அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பது வேதனையானது. இது திருவாரூர் டீக்கடைக்காரர் செல்வகணபதிக்கும், மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீக்கும் இடையே அப்படி என்ன ஒரு பகை? அல்லது ஒரு வெறுப்பு ?இது பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? திருவாரூர் விளமல் பகுதி ஏ ஆர் கிரவுண்ட் அருகில் கடந்த ஏழு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருபவர் செல்வகணபதி.  சில நாட்களுக்கு முன்பு செல்வ […]

Continue Reading

உள்ளாட்சி நிர்வாக 90% ஊழல்களை மறைத்து ஊழலுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள்.

மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து, இவற்றில் ஊழலுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள் தான். இந்த ஆடிட்டர்கள் மாவட்டம், ஒன்றியம் அளவில் உள்ள ஆடிட்டர்கள், ஒருவர் கூட அதற்கு தகுதியானவர்களாக இல்லை.  பெயருக்கு கிராம பஞ்சாயத்து  கணக்குகளை ஆடிட்டர் செய்யும் ஒன்றிய அளவில் உள்ள பஞ்சாயத்து ஆடிட்டர்கள், ஒப்புக்கு கணக்கு வழக்கு  பார்க்கும் ஆடிட்டர்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில்  நடக்கின்ற ஊழல்களை கிராம மக்கள் புகார் அளித்தால் அவர்கள் என்ன ஆடிட் செய்கிறார்கள் ?ஆடிட்டிங் படித்தவர்கள் […]

Continue Reading

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சஸ்பெண்ட் ஆன ஆசிரியர் கார்த்திகை சாமியை நிரபராதி ஆக்கும் நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் ஷாலினி youtube சேனல் செய்தி நோக்கம் என்ன?

நாட்டில் உண்மை எழுதும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் சமூக ஆர்வலர்கள், மிகவும் குறைவு. அப்படி இருக்கும் போது, அவர்களுக்கு உரிய மரியாதை ,கௌரவம் கொடுக்க விட்டாலும், காவல்துறை பொய் வழக்கு என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று. மேலும்,  கோடி, கோடியாக அரசியலில் கொள்ளையடித்து ,சொகுசு வாழ்க்கையில் மிதந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரணம் தேட ஓடி வருவதில்லை. ஆனால், ஒரு பள்ளியில் படிக்கின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஒரு ஆசிரியரை […]

Continue Reading

குதிரை சாகச பயணத்தில் உலக சாதனை புரிந்த சிறுவர்கள்

சிறிய வயதிலேயே கன்னியாகுமரியில் இருந்து அந்தியூர் வரை சுமார் 497 கிலோமீட்டர் தூரம் மதுரையில் சாகச பயணம் செய்த சிறுவர் சிறுமி மற்றும் இரு பெண்கள் என ஐந்து பேர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர் மேலும் ஈரோட்டைச் சேர்ந்த சிறுவன் மானவ் சுப்ரமணியம் மற்றும் சிறுமி சுபத்ரா சந்திரகாந்தா ஆகியோரும், இதே போல பிரியதர்ஷினி ரங்கநாதன், மற்றும் சுவாதி விக்னேஷ்வரி ஆகிய இரு பெண்களும் அவர்களது பயிற்சியாளர்   கவுதமன் மேவாணி வெற்றி கண்ணன் ஆகிய […]

Continue Reading

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் ,கோவை சரவணம்பட்டி சமஷ்டி சர்வதேச பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இப்பள்ளியில் தனியார் சர்வதேச பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், மாணவ மாணவிகள் சிறப்புடன் செயல்பட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும்,பள்ளியின் முதல்வர் தீபா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் அதன் நிர்வாக இயக்குநர்கள் நவீன் மேதா,மீரா பந்தாரி அரோரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றதோடு,தொடர்ந்து பள்ளி சிறுவர் சிறுமியர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினர்களுக்கு அணி வகுப்பு மரியாதையில் தடை ஓட்டம்,ஓட்ட பந்தயம் என நடைபெற்ற பல்வேறு […]

Continue Reading

கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு .

நாங்குநேரியில் அரங்கேறிய பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்திற்காக சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித  நீதி சபை அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இது  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி அரங்கேறிய பள்ளி மாணவர்கள் இடையிலான சாதி மோதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை […]

Continue Reading

சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம் பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். […]

Continue Reading

என்எல்சி நிறுவனத்திற்கும் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கும் உள்ள பிரச்சனை என்ன?இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் போராடவில்லை என்றால், அந்த விவசாயிகளுக்கு நியாயம் கிடைப்பது எப்போது ?

என்எல்சி நிறுவனம் கடந்த 2006 ல்  விவசாயிகளிடமிருந்து நிலக்கரி சுரங்கத்திற்கு நிலத்தை கையகப்படுத்தியது. கையகப்படுத்திய நிலத்தை என்எல்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவில்லை. அதனால், நிலம் கொடுத்த விவசாயிகள் அந்த நிலத்தை பயிர் செய்து வருகிறார்கள். அப்படி பயிர் செய்து வருகின்ற நிலத்தை தற்போது கையகப்படுத்த நினைக்கும் போது, அதில் பயிரிடப்பட்டுள்ளது.  பயிரிடப்பட்ட நிலத்தை அறுவடைக்கு பின் தான் அதை என் எல் சி நிறுவனம் எடுத்திருக்க வேண்டும். ஆனால், பயிர்களை அழித்து எடுத்தது விவசாயிகளுக்கு அது […]

Continue Reading