பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கிராம பொதுமக்கள் .

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5000 ஏக்கர் நிலத்திற்கு மேல் கையகப்படுத்தும் திட்டத்திற்கு, கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் தங்களுடைய எதிர்ப்பை விமான நிலையம் அமைக்க தெரிவித்து வருகின்றனர். விமான நிலையத்தால் பாதிக்கப்படும் கிராமங்களில் 13 கிராமங்கள் தொடர்ந்து 500 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதைப்பற்றி மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல், நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவதில் குறிக்கோளாக உள்ளது. […]

Continue Reading

தேனி மாவட்டத்தில் தொடரும் கனிம வள கொள்ளைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்களும், பார்வர்ட் பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி மாவட்ட ஆட்சியருக்கு புகார்  அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் ?

தேனி மாவட்டத்தில் உள்ள  ஆண்டிப்பட்டி தாலுக்கா மரி குண்டு  ஊராட்சியில்  மலை மண் மற்றும் கிராவல்  எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதி அளவைவிட மொத்தமாக அப்பகுதியே காலி செய்துள்ளனர். இது எவ்வளவு பெரிய விதிமீறல் என்பது மாவட்ட ஆட்சியருக்கும் ,கனிம வளத்துறை அதிகாரிக்கும் தெரியாததா?  மேலும், இது சம்பந்தமாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கண்டு கொள்ளாமல் ,அதை குப்பையில் தூக்கி போடுகிறார்கள். பொதுமக்கள் எதற்காக புகார் அளிக்கிறார்கள்? என்பது மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரியாததா? மேலும் இந்த கிராவல் மண் […]

Continue Reading

பெரியார் அணைகளில் உள்ள தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேனி மாவட்ட விவசாயிகளுக்கு தகுந்த நேரத்தில் தண்ணீர் திறக்காமல் விவசாயிகளை மன வேதனைக்கு உள்ளாக்கம் அரசியல் நோக்கம் என்ன? – தேனி மாவட்ட விவசாய சங்கங்கள்.

பெரியாறு அணையின் கொள்ளளவு 142 கன அடி  to 152 கன அடி கூட நீர்தேக்கலாம் என்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள் . மேலும், இந்த நீர் தேக்குவதில் பெரியார் அணையில் என்ன பிரச்சனை இருக்கிறது?  மேலும், இதை தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கொடுக்காமல் ,பிற மாவட்ட விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் செல்வதில் உள்ள அரசியல் என்ன?  இது தவிர, இந்த தண்ணீர் திறந்து விடும் போது கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு, சவுடு மண் கொள்ளைக்கு, மலைகள் கொள்ளைக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதா ?

கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதன் விளைவு தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தற்போது உள்ளே நுழைந்து விட்டது. இந்த மணல் கொள்ளைக்கு முக்கிய காரணம் அரசியல்.  யார்? ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக மணல் மாபியாக்கள் மாதம் இத்தனை ஆயிரம் கோடி அல்லது வருடத்தில் இத்தனை ஆயிரம் கோடி  என்ற கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தில் இந்த மணல் வியாபாரம் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த பணத்தை […]

Continue Reading

மத்திய அரசு ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யாமல், பல ஆயிரம் கோடிகளை வாங்கிய நிறுவனங்களுக்கு சுமார் 25 லட்சம் கோடிக்கு மேல், தள்ளுபடி செய்தது ஏன் ?

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஆம் என்று நிரூபிக்கிறாரா? அதாவது ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கிய வங்கிக் கடன் இலட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தான் உள்ளது .அதிலும், சில தொழில் முனைவோருக்காக பிரதமர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கடன் திட்டத்தில், ஆயிரக்கணக்கான பேர் தொழிலில் நலிவளைந்து சிக்,ஆகிய தொழில் முதலீட்டாளர்கள் வங்கி கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள் .அவர்களுக்கெல்லாம் பிரதமர் மோடி கடன் தள்ளுபடி செய்யவில்லை.  ஆனால், பல ஆயிரம் கோடிகளை […]

Continue Reading

மணல் குவாரி முறைகேடுகளில் நேரில் ஆஜராகாத நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு, அமலாகத்துறை சம்மன் அனுப்பியதாக தகவல் .

நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடுகள் மாநிலம் முழுதும் நடைபெற்றுள்ளது. மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு, ஏற்றி செல்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இது தவிர,இதில் என்ன சட்ட ஓட்டை? என்றால், மணல் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதியை விட மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.  இதில் இத்தனை மீட்டர், எத்தனை லோடு என்றுதான் அனுமதி வழங்கப்படுகிறது. இதை நீர்வளத்துறை மட்டுமே கொடுக்கவில்லை, நீர்வளத்துறை ,வருவாய்த்துறை ,கனிமவளத்துறை மூன்று துறையும் இணைந்து மாவட்ட […]

Continue Reading

பயிர் காப்பீட்டு நிறுவனங்கள்! விவசாயிகளிடம் பகல் கொள்ளையர்களாக மாறி இருப்பதை தடுத்து, மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா?

விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக் கொள்கிறார்களே! தவிர,அந்த விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் ஆட்சியாளர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்களா? விவசாயிகள் 100 நாள் வேலை திட்டத்தால் வேலையாட்கள் கிடைக்காமல் ,எவ்வளவு இன்னல் படுகிறார்கள்? புயல் ,மழை, வெள்ளம் போன்ற பருவநிலை மாற்றங்களால், எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள்? அந்த நஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் எத்தனையோ விவசாயிகள், நிலங்களை விற்பனை செய்திருக்கிறார்கள்.இப்படிப்பட்ட ஒரு போராட்டமான வாழ்க்கை தான் விவசாயிகளின் வாழ்க்கை. இதை கருத்தில் கொண்டு ,மத்திய அரசு பயிர் காப்பீட்டு திட்டம் கொண்டு […]

Continue Reading

காவிரி தண்ணீருக்கு கர்நாடகம் கைவிரிப்பு ! டெல்டா மாவட்ட விவசாயிகளை தமிழக அரசு காப்பாற்றுமா ?

தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்ராமய்யா முடிவில், ஒட்டுமொத்த அங்குள்ள அரசியல் கட்சிகள் இரண்டாவது முறையாக கூட்டி, நாளை நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்க அழுத்தம் கொடுக்கிறது கர்நாடக அரசு . இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது?  குருவைப் பயிர்களை காப்பாற்றுவதற்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் வருமா ?வராதா? அக் கிராம மக்களின் மனநிலை என்ன?

பரந்தூர் விமான நிலையம் வருமா ?அல்லது வராதா? என்ற சூழ்நிலையில் தான் இந்த திட்டம் இருந்து வருகிறது .ஒரு பக்கம் அரசு அதற்கான செயல் திட்டத்தை வகுத்து செயல்பட்டாலும், மக்களின் மனநிலை என்ன ?என்பது பற்றி இதுவரை எந்த ஒரு புள்ளி விவரமோ அல்லது கருத்து கேட்பு கூட்டமோ நடத்தவில்லை . மேலும், இது ஒன்றும் முடியாட்சி அல்ல. அரசர்கள் நினைத்தால், குடிமக்களே ஓரிடத்தில் இருந்து அப்புறப்படுத்தி அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை செயல்படுத்த முடியும். ஆனால், […]

Continue Reading

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபத்ரா செல்லத்துரை தலைமையில், பனை விதை நடும் நிகழ்ச்சியினை நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 13 கடலோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை ,முட்டம், மண்டைக்காடு, சங்குத்துறை, மணக்குடி தெங்கபுதூர், லெமோரியா கடற்கரை, சொத்தவிளை, குளச்சல், தேங்காய் பட்டினம், பெரிய காடு ,இறையன்புத்தன் துறை, சின்னத்துரை போன்ற இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அந்தந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அப்பகுதி உதவியாளர்கள் கலந்து கொண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை […]

Continue Reading