ஏமாற்றும்  கர்நாடகம், ஏமாறும் தமிழக விவசாயிகள்… !இதற்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதியில் நடப்பு  குருவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா, தாளடி சாகுபடிகள், நடைபெறுமா? என்பது மாபெரும் கேள்விக்குறியே.. … ! மேலும், தென்மேற்கு பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து விட்ட இவ்வேளையில், நெல்லை மட்டும் சாகுபடி செய்யும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் காவிரி நீரின்றி  ஏரிகளும், குளங்களும்  வறண்டு கிடக்கின்றன. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களும் விவசாயம் இல்லாமல் வறண்டு […]

Continue Reading

சனாதனம் தர்மம் என்றால் என்ன? என்று புரியாமல் பேசும் – உதயநிதி ஸ்டாலின்.

சனாதனதர்மம் ஒழிப்பது அரசியலுக்காக பேசும் வார்த்தை அல்ல. சனாதனம் என்பது ஜாதியை ஒழிப்பது அல்லது ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது அல்லது பிராமணர்களுக்கு எதிரான கொள்கையை அரசியலாக்குவது, இது எல்லாம் சனாதன தர்மம் அல்ல.  சனாதன தர்மத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பதால், ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை எதிர்க்க முடியாது. ஒழிக்க முடியாது. ஆனால், பேசிவிட்டு தான் போக முடியும். அதுதான் உண்மை.  சனாதனதர்மம் என்பது ஜாதி அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வைத்து சனாதனத்தை […]

Continue Reading

அமலாக்கத்துறை வங்கி கடன் மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் கைது கோயலை கைது செய்துள்ளது .

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் 1992 இல் ஆரம்பிக்கப்பட்டு லாபத்தில் இயங்கி வந்த நிறுவனம். 2017 இல் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் இதனுடைய விமான சேவை 2019 நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 2021 இல் விற்பனை செய்யப்பட்டது.  விற்பனை செய்யப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கனரா வங்கியில் வாங்கிய 538 கோடி ரூபாய் திருப்பி தராமல் மோசடி செய்ததாக கனரா வங்கி புகார் அளித்ததன் பேரில் நரேஷ் கோயில் அவருடைய மனைவி அனிதா […]

Continue Reading

தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்ட பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரைக்கு குரு ஞான விருது” மற்றும் சமூக சீர்திருத்தவாதி லாலா ஜகத் நாராயண் கல்வி விருது ஆசிரியர் தின விழாவில் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரைக்கு பஞ்சாப்  பிரேவ் சௌல்ஸ் அமைப்பு மற்றும் இந்திய அரசின் குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் அமைச்சகம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தின விருது விழாவில் “குரு ஞான விருது” மற்றும் சமூக சீர்திருத்தவாதி லாலா ஜகத் நாராயண் கல்வி பணிக்கான சிறப்பு விருதும், இரண்டு நபருக்கு வழங்கப்பட்டது.மேலும், இதில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியை முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களுக்கு பரிசு தொகையுடன் லாலா ஜகத் […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் மிக மிக கேவலமாக இருக்க மக்கள் ஏமாளிகளா? அல்லது அவர்கள் திறமைசாலிகளா?

தமிழ்நாட்டின் அரசியல் ஆளும் கட்சியின் ஊழல்கள், எதிர்க்கட்சியின் ஊழல், தவிர,நாம் தமிழர் கட்சி சீமானின் காதல் விவகாரங்கள் அனைத்துமே, சந்தி சிரிக்கும் நிலையில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை எப்படி மக்களுக்கு கொடுக்க முடியும்?  அமைச்சர்களே ஊழலில் இருந்து எங்களை காப்பாற்ற உங்கள் திறமையை பயன்படுத்துங்கள். இதை சொல்வதற்கு அந்த அமைச்சருக்கு துளி கூட வெட்கம் இல்லையா ? அமைச்சருக்கான தகுதி ,கவுரவம், இவை எல்லாம் இல்லாத ஒரு நபரிடம் (கே. என். […]

Continue Reading

வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்.

மத்திய அரசின் ஒரே நாடு ,ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன .இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால், தமிழகம் போன்று சில மாநிலங்களில் ஐந்தாண்டு காலம் முடிவதற்கு முன்பே இந்த தேர்தல் வந்து விடுகிறது. இது ஒருபுறம், மற்றொருபுறம் ,ஒரு முக்கியமான அரசியல்! அதாவது மாநிலங்களுக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் இடையே ஒரு பிரிவினவாத அரசியல், மக்களிடையே செய்ய முடியாது. பெரும்பாலான மக்களுக்கு இந்த அரசியல் பற்றி தெரியாமல் […]

Continue Reading

தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி செபஸ்டின் சைமனின் காதல் கதைகள் கூட, அரசியல் ஆக்கப்படுவதா?

தமிழ்நாட்டின் அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து உள்ளது?  என்பது இது போன்ற சம்பவங்களால், கேவலமாக பேசப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியலில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட தவறு செய்தாலும் அல்லது சட்டத்தை ஏமாற்றினாலும், சமூகத்தை ஏமாற்றினாலும், எல்லோரும் ஒன்றை சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். அது என்னவென்றால் அது எந்த கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும் ,இதை எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சி, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, இதற்கு பின்னால் ஆளும் கட்சியின் அரசியல், இப்படிப்பட்ட சொற்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் பிழைப்பு […]

Continue Reading

தினமலர் பத்திரிகையில் வந்த செய்தியை திமுக அரசியல் ஆக்குவது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது.

தினமலரில் வந்த செய்தி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் டபுள் சாப்பாடு ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது. இந்த செய்தி உண்மையிலே தவறுதான். படிக்கின்ற மாணவர்களை கேவலப்படுத்தும் விதமாக ஒரு புறம் இருக்கிறது. மற்றொருபுறம், மனித குலத்தையே கேவலப்படுத்தும் விதமாகத்தான் இருக்கிறது. இது சரி என்று நான் சொல்லவில்லை . ஆனால், இதை போட்டவர் ஒரு செய்தியாளராக இருக்கணும். அல்லது அந்த பத்திரிகையின் ஆசிரியராக இருக்கணும். இவர்கள் இருவர் தான் அதற்கு பொறுப்பு. ஆனால், ஒட்டுமொத்த பிராமணர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் பிஜேபி செய்கின்ற தவறுகள், அதிமுக , திமுக, செய்த தவறுகளால், இன்று தமிழக மக்களுக்கு எதிரானதா? தமிழகம் எதிர்காலத்தில் கடனால் திவால் ஆகுமா?

கடந்த காலங்களில் மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும், தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் அல்லது மத்திய அரசின் கம்பெனிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் வேலை செய்யவில்லை. ஆனால், தற்போது தான் ரயில்வே மற்றும் மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வட இந்தியர்களை முழுக்க முழுக்க பணியமத்தியுள்ளது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  அடுத்ததாக கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி செய்த தவறு ,யார் வேண்டுமானாலும் இந்த மாநிலத்தில் அரசு பணிகளில் சேர்ந்து […]

Continue Reading