தமிழக அரசுக்கு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தமிழ்நாடு பனை வாரியத்தை உருவாக்க கோரிக்கை.

தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் ,  தமிழ்நாடு அரசு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரித்தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணனை சென்னையில் சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் . அம்மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் , பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கயிறு வாரியம், காதி வாரியம் என தனித்தனியாக வாரியங்கள் செயல்படுகிறது. அவ்வாறு செயல்படுவதால் , பனைத் தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்குதல் மட்டுமே நலவாரியத்தால் செயல்படுத்த […]

Continue Reading

கடந்த 9 ஆண்டுகளில் மீன் வளத்துறைக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலனுக்காக ரூ. 38,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 2015 இல் தொடங்கப்பட்ட நீலப்புரட்சி திட்டத்துக்கு ரூ. 5,000 கோடி, பிரதமந்திரி மத்சய சம்பதா திட்டத்துக்கு அதாவது தர்சாற்பு இந்தியா நடவடிக்கைகளுக்காக ரூ. 20,000 கோடி, உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ. 7,500 கோடி, படகுகளைப் பதிவுசெய்தல், டிஜிட்டல் மயமாக்குதலுக்கு ரூ.6,000 கோடி என இதுவரை மொத்தமாக  ரூ. 38,500 கோடி நிதி ஒதுக்கீடு […]

Continue Reading

இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் வணிகத்தின் சேவை

இந்திய தபால் துறையில் விளம்பர சேவையை வழங்கும் புதிய பொறிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் துறையின் மீடியா போஸ்ட் மூலம் வணிக நிறுவனங்களின் வியாபார வளர்ச்சி திட்டத்தை இந்திய தபால் துறை கொண்டு வந்துள்ளது இது குறைந்த செலவில் தங்களுடைய வியாபாரத்தை பொதுமக்களிடையே கொண்டு செல்லும் புதிய முறை தான் இந்திய அஞ்சல் துறை மீடியா போஸ்ட் சேவை. மேலும் இது அரசு மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை திறம்பட மேம்படுத்த உதவும் வகையில் […]

Continue Reading

ரயில் நிலையங்களில்! உள்ளூர் தயாரிப்புகளுக்கான விற்பனை நிலையங்கள்.

மத்திய அரசு 728 ரயில் நிலையங்களில் தயாரிப்பு விற்பனை நிலையங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதன் பயன்பாட்டு நோக்கத்தை அதிகப்படுத்துவதற்காக இந்த திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஒரு பக்கம் உற்பத்தியை பெருக்கி விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கம் என்றாலும் அது இந்திய மக்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்போது சமூக பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும் இதற்காக மத்திய அரசு ‘உள்ளூர் மக்களுக்கான […]

Continue Reading

கலாச்சார மையத்தின் பிரதிபலிப்பு தான் ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்ற தேசிய நவீன கலைக்கூட கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் மோடி.

புது டெல்லி உள்ள தேசிய நவீன கலைக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி ஜனசக்தி ஒரு கூட்டு சக்தி என்னும் கண்காட்சியை தேசிய நவீன கலைக்கூடத்தின் கண்காட்சியை பார்வையிட்டார். மேலும் பிரதமரின் வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல் நிகழ்ச்சியின் 100வது அத்தியாயத்தை குறிக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சி இந்தியாவின் கலைப் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன்,  மனதின் குரல் நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்படும் கருப்பொருள்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. மேலும் கண்காட்சியைப் பார்வையிட்ட பிரதமரிடம் ,  கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகள் பற்றி விளக்கிக் கூறும் வாய்ப்பைப் பெற்றனர். ஜெய்ப்பூர் இல்லத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க குவிமாடத்தில் ஜன சக்தி கண்காட்சியின் அதிவேகத் திட்டக் காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார். கலைப்படைப்புகளைப் பார்த்த பிறகு, பிரதமர் ஜன சக்தி கண்காட்சி அட்டவணையில் […]

Continue Reading

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது- மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.

ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்காக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் புது தில்லியில் வெளியிட்டார். ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள் – 2023, துறைமுக மேம்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இயற்கையுடன் இணைந்து பணிபுரிவதை ஊக்குவிக்கிறது. மேலும், துறைமுக செயல்பாட்டில் சுத்தமான/பசுமை ஆற்றலைப் […]

Continue Reading

தர நிர்ணயம் மற்றும் தர முறைகளுக்கு மாநில அளவிலான கூட்டம் இன்று தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது

தர நிர்ணயம் மற்றும் தர முறைகளுக்கு மாநில அளவிலான கூட்டம் தமிழ்நாடு அரசு  தலைமைச் செயலகத்தில் இன்று (08.05.2023) நடைபெற்றது. குழாய் மூலம் குடிநீர் விநியோக மேலாண்மை அமைப்புக்கான தரநிலைகளை செயல்படுத்துதல், ஆயத்த கலவை தயார்நிலை கான்கிரீட் செயல்முறை சான்றிதழ், மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ் திட்டம், முத்திரையிடுதல், பால் மற்றும் பால் பொருட்களுக்கான இணக்க மதிப்பீட்டுத்  திட்டம், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மைத் திட்டம், மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான அணுகுமுறை  போன்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில்  விரிவாக விவாதிக்கப்பட்டு  பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. ​தமிழ்நாடு மாநிலத்தில் தர நிர்ணயம் குறித்த அமைப்புகளை உருவாக்குவது  தொடர்பாகவும் விவாதங்கள் நடத்தப்பட்டன.  இந்த தர நிர்ணய அமைப்புகளின் முக்கிய பணியானது அரசு, தொழில்துறை மற்றும்  இந்திய தர நிர்ணய அமைவனம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு  பாலமாக செயல்படுவதே ஆகும். மாநில அரசு அதிகாரிகளின் தரநிர்ணயம் குறித்த  திறனை மேம்படுத்துவது, தரநிலைகளை உருவாக்குதல், தர நியமங்கள் உபயோகத்தை அதிகரித்தல், இணக்க மதிப்பீடு மற்றும் நுகர்வோர் மேம்பாடு ஆகியவை குறித்தும் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது, விவாதிக்கப்பட்டது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் வெ. இறையன்பு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, கூடுதல் தலைமைச் செயலர் (கூட்டுறவு, உணவு மற்றும்  நுகர்வோர் பாதுகாப்புத் துறை), டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு)   திரு யு எஸ் பி யாதவ்,  சென்னை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி.பவானி ஆகியோர் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கமளித்தனர்.

Continue Reading

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு அம்சங்களை அரசு நிறுவனங்கள் மக்கள் நலத் திட்ட பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்-கூடுதல் தலைமை இயக்குனர் மா -அண்ணாதுரை.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பல்வேறு செயல்திட்டங்களை அரசு நிறுவனங்கள் மக்கள் நல திட்டங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தின் அவசியம். மேலும் இதற்காக மத்திய அரசின் ஊடக நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு மிக முக்கியமானது என சென்னை பத்திரிக்கை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் மா அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மேலும், அரசு நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஊடக ஒளிபரப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தில் நடைபெற்ற போது, இதன் ஒருங்கிணைப்பு […]

Continue Reading

தமிழ்நாட்டில் பிழைக்கு வந்த வடமாநிலத்தவர்களால் பாதிக்கும் தொழில் நிறுவன முதலாளிகள். பொதுமக்கள் உஷார்.

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களை அதிக அளவில் வைத்து வேலை செய்யும் கட்டிட உரிமையாளர்கள், காண்ட்ராக்டர்கள், கம்பெனி முதலாளிகள், பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் கவனத்துடன் அவர்களிடம் இருப்பது மிகவும் அவசியமானது. இங்கு கொலை, கொள்ளை ,கற்பழிப்பு நடத்தி விட்டு தங்கள் மாநிலத்திற்கு ஓடி விடுகிறார்கள். அவர்களை காவல்துறை தேடிக் கொண்டிருப்பது கடினமாக வேலையாகவும் இருக்கிறது. மேலும்  இவர்கள் ஜார்கண்ட் ,பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் வேலைக்கு வந்து அந்த முதலாளிகள் மீது வழக்குகளை பதிவு செய்து […]

Continue Reading