
காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக இந்தியாவை ஆட்சி செய்தது அப்போது இதைவிட அதிகமான வறுமை தான் நாட்டில் இருந்தது. ஏன் அப்போது வறுமையை ஒழிக்கவில்லை?
இப்போது கும்பமேளாவில் மக்கள் கங்கை நதியில் குளிக்கும் போது வறுமையை ஒழிப்பதற்கு குளிக்கின்ற இடமா? மக்களின் நம்பிக்கை இறையருளை பெற வேண்டும். இறையருள் இருந்தால் ஒரு மனிதனுக்கு எல்லாம் கிடைக்கும். சந்தோஷம், ஆத்ம திருப்தி, சகல சௌபாக்கியங்கள் எல்லாமே இறை அருளால் தான் கிடைக்கிறது. நம் மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தி பேசும் விதமாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பேசியிருப்பது இந்து மதத்திற்கு எதிரான ஒன்று.
மேலும்,மக்களின் இறை நம்பிக்கைக்கு எதிரான ஒன்று. 50 ஆண்டுகாலம் காங்கிரஸ் ஆளும்போது வறுமையை ஒழிக்க முடியவில்லை. இப்போது கங்கையில் குளித்தால் மக்களின் வறுமை ஒழித்து விட முடியுமா? இங்கே கூட அரசியலா? ஒரு மனிதன் கடவுளை வழிபடும் போது அவனுடைய பக்தியால் நம்பிக்கையுடன் வழிபடுகிறான். அந்த நம்பிக்கைக்கு வறுமையை ஒழிக்க முடியுமா? இது என்ன பைத்தியக்காரர்கன் கேள்வி?
மேலும், அரசியல் செய்வது வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கடவுளிடம் அரசியல் செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை. கடவுள் நம்பிக்கையில் வாழ்கின்ற மக்களிடம் அரசியல், அவர்களுடைய புனிதத்தை கெடுப்பது மக்களின் வெறுப் புணர்ச்சிக்கு ஆளவீர்கள்.
மேலும், இதையே கிறிஸ்தவ,முஸ்லிம் மத மக்கள் வழிபடும்போது அதாவது மக்காவிற்கு செல்லும்போது, ஜெருசலேமிற்கு செல்லும் போது அங்கு அவர்களைப் பார்த்து கார்க்கே இது எல்லாம் உங்களுடைய வறுமையை ஒழித்து விட முடியுமா? என்று கூறுங்கள். ஓட்டுக்கு அரசியல் செய்து பிழைப்பு நடத்துங்கள். இங்கே மக்களின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள்.