டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram
ஆதவ் அர்ஜுனாவிடம் கள்ள லாட்டரி பணம் இருக்கிறது என்று பொதுமக்களிடம் வரும் தகவல். அதனால், திருமாவளவன் இவருக்கு துணை பொது செயலாளர் பொறுப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கொடுத்து விட்டார். அதுவும் சிறிய பொறுப்பு அல்ல, இவருக்கு அடுத்த பொறுப்பு. பணமிருந்தால், அரசியல் கட்சியில் இவையெல்லாம் எளிது. இந்த கட்சியில் சேர்ந்தது முதல் ஆதவ் அர்ஜுனாவுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்துள்ளது. காரணம் அவரிடம் பணம் இருக்கிறது.

இதில் திமுகவுக்கும், ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு முதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் தான் இன்று வரை அந்தக் கட்சியில் இவ்வளவு தூரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இவருடைய கள்ள லாட்டரிக்கு திமுக ஒத்து வரவில்லை என்று தான் வந்த தகவல். ஏற்கனவே, போதை பொருளில் திமுக சிக்கி இருக்கிறார்கள். இதில் கள்ள லாட்டரி வேற வா என்று இதை ஒதுக்கி இருக்கலாம். இவர்களுடைய வியாபாரத்தை வளர்ப்பதற்கு அரசியல் கட்சியை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை கூட தெரியாமல் நம்முடைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்கள் சொல்வதை செய்திகளாக வெளியிட்டுக் கொண்டிருப்பார்கள். ஆதாவ் அர்ஜுனாவின் திட்டத்தை திமுக ஏற்கவில்லை .மேலும்,
திமுகவிடமிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரித்து விட வேண்டும் என்பது அவருடைய கான்செப்ட். அதற்கு ,பல வழிகளை தேர்வு செய்து அறிக்கைகள் மூலம் விட்டுப் பார்த்தார். ஸ்டாலின், திருமாவளவனை கூப்பிட்டு , இது சரி இல்லை. மாற்று அறிக்கை விடவும் என்று சொன்னவுடன் திமுகவுக்கு சாதகமாக திருமாவளவன் அறிக்கை விட்டார். இப்படி ஒரே கட்சியில் இரண்டு பேரும் மாறி ,மாறி அறிக்கையை விட்டு விட்டார்கள். இந்த அறிக்கை போர் போய் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா இரண்டு பேரும் சேர்ந்து விகடன் குழுமம் அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கே இருவரும் சந்தித்து பேசிக் கொண்டார்கள்.
.jpeg)
இப்போது விஜய் அம்பேத்காருக்காக போனாரா? அல்லது ஆதாவ் அர்ஜுனாவை தன் கட்சிக்கு இழுக்கப் போனாரா? இப்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் ,தமிழக வெற்றி கழகம் கட்சியிலும் ஆதவ் அர்ஜுனாவால் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது .ஆதவ் அர்ஜூனா உண்மையிலேயே ஒரு நல்ல அரசியல்வாதியாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் . அவர் கள்ள லாட்டரியில் சம்பாதித்த கருப்பு பணத்தை அரசியலில் வெள்ளையாக்க பார்ப்பார் என்ற ஒரு தகவல்.
இப்படி இருப்பவர்கள் எப்படி சமுதாயத்திற்கு நல்ல சேவையை செய்வார்கள்? மேலும், இவர்களெல்லாம் வாயிலே தான் ஊழலை ஒழித்து விட்டு போவார்கள். தவறான அரசியல் பாதையில் விஜய் அவர் சொன்ன, சொல் மறந்து விட்டார். தமிழக மக்களின் வறுமையை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள். அதில் அம்பேத்கரை வைத்து தாழ்த்தப்பட்ட சமூகத்திடம் தொடரும் இந்த வியாபார அரசியலை அம்பேத்கர் ஒருபோதும் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அவர் எந்த நோக்கத்திற்காக இந்த மக்களுக்காக குரல் கொடுத்தார்? அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும், சமுதாயத்தினருக்கும் குரல் கொடுத்தவர். அவருடைய வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் அல்ல. மேலும், இங்கே பி சி ஆர் என்ற ஒரு சட்டத்தை இவர்களுக்காக கொண்டு வந்தார். 10 ஆண்டுகளுக்காகத் தான் இந்த மக்களுக்கு சலுகை,இட ஒதுக்கீடு என்று எழுதிவிட்டு தான் சென்று இருக்கிறார். அந்த சட்டத்தைக் கூட மக்களின் மனநிலைக்கு ஏற்ப ,சூழ்நிலைக்கு ஏற்ப, காலத்துக்கு ஏற்றவாறு அந்த சட்டத்தை மாற்றிக் கொள்ளலாம் என்பது அவரே எழுதி வைத்திருக்கிறார். இதையெல்லாம் பார்த்தார் என்றால் நிச்சயம் ஒருபோதும் அம்பேத்கர் அந்த சட்டத்தை எடுத்து விட்டு இருப்பார்.
அப்போது அந்த மக்கள் பட்ட வேதனைக்காக இந்த சட்டம் கொண்டு வந்தார். அது உண்மையிலேயே அந்த காலத்தில் தேவையான சட்டம் தான். ஆனால், தற்போது அந்த சட்டம் தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சியில் தான் இருக்கிறார்கள். ஒரு பக்கம் மாற்றுக் கட்சியினரை பழிவாங்க அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். அரசு அதிகாரிகளையும் ,மாற்று சமூகங்களையும், மிரட்டுவதற்கும், பழி வாங்குவதற்கும் அதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.
இப்படி எந்த நோக்கத்திற்காக அம்பேத்கர் இந்த சட்டங்களை கொண்டு வந்தாரோ ,அந்த சட்டம் அதற்கு தான் பயன்படுத்த வேண்டும். இப்படி மேடையில் பேசுவதற்கும் ,இவர்கள் அறிக்கை விடுவதற்கும், நடைமுறையில் இருப்பதற்கும், சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது. இப்போது ஒருவர் தவறாக பேசிவிட்டால், அவருடைய செல்போனில் அதை எடுத்துவிடுவார்கள். அவ்வளவு அந்த காலத்தில் எந்த செல்போனும் இல்லை. அதனால், காலத்துக்கு ஏற்றவாறு சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அவருடைய சட்டங்கள் அவர் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு தான் அது மிகப் பொருத்தமானது.

அந்த மக்களுக்கு ஏமாற்றுவது தெரியாது .ஏமாந்தவர்களாக இருந்தார்கள். அந்த சட்டம் பொருந்தும். இப்போது அரசியலில் ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள். அதனால், இந்த சட்டம் எல்லாம் எடுக்கப்பட வேண்டிய சட்டம். மேலும், ஆதவ் அர்ஜுனாவை திருமாவளவன் கட்சியிலிருந்து நீக்க திட்டமிட்டார்கள். ஆனால், அது ஆதவ் அர்ஜுனாவுக்கு சாதகமாகி விடுமோ என்ற பயத்தில் விட்டு விட்டார்கள்.

மேலும் ஆதவ் அர்ச்சனாவை கட்சியிலிருந்து நீக்கினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டாக உடைய வாய்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகிறது. அதனால், திருமாவளவன் ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து நீக்காமல் விட்டதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் தேர்தல் செலவுக்கு நிச்சயம் பணம் கொடுத்து இருப்பார். அதில் ஒன்றும் மாற்று கருத்து இல்லை . மேலும், அவரை நீக்கினால் விஜ்ய் பக்கம் செல்வார். அது திருமாவளவனுக்கு மைனஸ். மற்றொரு பக்கம் ஆதாவ் அர்ஜுனா விஜயின் பக்கம் சென்றாலும், விஜய்க்கு அரசியலில் அது மைனஸ் தான்.