வன்னியர் சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட கட்சி தான் திமுக . ஆரம்பத்தில் திமுகவின் வரலாறு தெரிந்தவர்கள் சொன்ன உண்மை. இதை அரசியல் கட்சிக்காரர் சொன்ன தகவல் இல்லை ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்ன தகவல் .

அரசியல் சமூகம் சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram

திமுக கட்சியின் ஆரம்ப கால வரலாறு இன்றைய தலைமுறைக்கும், ஏன் எங்கள் தலைமுறைக்கும் கூட அது சரியாக தெரியாது என்றுதான் நினைக்கிறேன் .அது அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. போராட்டமானது. சொல்லப்போனால்,

அந்த காலத்தில் மேடையில் அண்ணா பேசிய பேச்சுக்கு கூட மரியாதை இல்லை. அவரை மேடையிலே பேச விட மாட்டார்களாம் .அந்த அளவிற்கு கேவலமாக பேசுவார்களாம் .அப்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அந்த மேடையிலே கொம்பை எடுத்து சுத்துவாராம் . எவனாவது கிட்ட வந்து பாருங்க . இப்படி எல்லாம் வன்னியர் சமுதாயம் வளர்க்கப்பட்ட கட்சி திமுக . இன்று அங்கு வன்னியர் சமுதாயத்திற்கு மரியாதை இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு முக்கியமான தலைவராக வன்னியர்கள் வட மாவட்டத்தில் இருந்து இருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் சொன்னால் கலைஞரை தட்ட முடியாது .தம்பி ஸ்டாலின் அந்த 10.5 புள்ளி செஞ்சுருங்கபா ஒரே வார்த்தை சொல்லி முடிச்சிருப்பார் என்று .ஐ. ஏ. எஸ் அதிகாரி சொன்னது. அவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்.சிவிஎம் அண்ணாமலை சமுதாயத்திற்கு எவ்வளவோ நல்லது பண்ணியிருக்கிறார். அவரால் பல குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறது. இன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகிறார். எந்த ஒரு பத்திரிக்கையும் ,அதைப்பற்றி ஒரு வரி கூட விமர்சனங்கள் தெரியவில்லை . 

இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் சினிமா பத்திரிகை போல ஆகிவிட்டது. சினிமா பத்திரிக்கை எல்லாம் சினிமாவில் நடிகர் ,நடிகைகள் நடிப்பை காட்சிப்படுத்துவது போல, இன்றைய பத்திரிகைகள் இருந்து வருகிறது. சந்தானம் சினிமாவில் நடிக்கிறார். தப்பு இல்லை. உதயநிதி ஸ்டாலின் உடன் நடித்தவர். அதனால், வணக்கம் முதலாளி என்று துணை முதல்வருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார். 

ஆனால், இந்த கட்சி ஆரம்பத்தில் இந்த வன்னியர் சமுதாயம் இல்லை என்றால் இந்த கட்சியே இல்லை . என்னுடைய நிருபர் ஈரோட்டில் 35 வயதுக்குள்ள இளைஞர் தான் . அவர் சொல்றார் இந்த கட்சியில் துணை முதல்வராக வர வேண்டியவர் துரைமுருகன் தான். திமுகவில் மொத்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மத்தியில் ஒரு பெரிய அதிருப்தி ஓடிக் கொண்டிருக்கிறது . உழைப்புக்கு மரியாதை இல்லையே என்று அவர்களுடைய தவிப்பு, வேதனை சொல்ல முடியாமல் இருந்து வருகிறார்கள். ஏனென்றால் அவர்களை ஒரு காலத்தில் பொண்டாட்டி, பிள்ளைகள் கூட இந்த கட்சிக்காக போனதால், மதிக்காமல்  பேச்சுக்களை திட்டி தீர்த்திருப்பார்கள்.

 மேலும், ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், உழைப்பு, திறமை இதை எல்லாம் அந்த காலத்தில் மக்களுக்காக செலவிடாமல், திமுக இந்த நிலைக்கு வரவில்லை. அன்று எத்தனையோ சமூக அவலங்களை எதிர்த்த கட்சி திமுக. இன்று சமூகத்திற்கு எதிரான கட்சி ஆக திமுக இருந்து வருகிறது. இதை ஏன் சொல்கிறேன்? என்றால் அன்று சமுதாயத்திற்காக தியாகம் பண்ணவர்கள், உழைத்தவர்கள் உழைப்பில், இன்று திமுக அரசியலில் ஆட்சி பிடித்திருக்கிறது. 

எம்ஜிஆர் உழைப்பில் அண்ணா திமுக உருவானது. அதை ஜெயலலிதாவிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு போய்விட்டார். இப்படி கட்சி என்பது உழைப்பு இல்லாமல், கட்சி இல்லை. உழைப்பு இல்லாமல் பத்திரிகை இல்லை. உழைப்புக்கு மரியாதை இல்லையென்றால், திறமைக்கு, தகுதிக்கு, மரியாதை இல்லை என்றால், ஒரு அரசு அதிகாரியாக இருந்தாலும், ஒரு தனியார் நிறுவன கம்பெனியாக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் வேதனைப்படுவார்கள். இன்றைய திமுக ஆட்சியில் எத்தனை கோடி வருமானம் பார்க்கலாம்? என்று ஆட்சி .அன்றைய திமுக மக்களுக்கு என்ன செய்யலாம்? அப்படி இருந்த ஒரு நிலைமை .இப்போது மக்களைப் பற்றியே சிந்திக்கவில்லை. அவர்களை மட்டுமே சிந்திக்கிறார்கள். 

உதயநிதி வந்து என்ன செய்து விடப் போகிறார்? என்னுடைய நிருபர் என்னிடம் பேசும்போது, எத்தனை மாவட்டம் இருக்கிறது என்பதாவது உதயநிதிக்கு தெரியுமா? என்கிறார். அதிகாரம் மக்கள் கொடுத்தது. இதை திமுக தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. நீண்ட நாளைக்கு இதில் பயணம் செய்ய முடியாது . ஏற்கனவே, அதிமுக கப்பலில் ஓட்டை விழுந்து, அது சிறிது சிறிதாக மூழ்கிக் கொண்டிருக்கிறது. திமுகவும் மொத்தமாக மூழ்கும் கப்பல் ஆகப் போகிறது. 

அதனால், இருக்கும் வரை எவ்வளவு சுருட்டலாம் என்ற நிலையில் தற்போதைய  திமுக . எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், உழைப்பில்லாமல் அந்தக் கட்சியை வளராது. உழைப்பில்லாமல் அந்தக் கட்சி ஆட்சிக்கு வர முடியாது .உழைப்பில்லாமல் டிவி, தொலைக்காட்சி பத்திரிகைகளில் விவாதம் நடத்தி,பேட்டி அளித்து விட்டு, ஆட்சிக்கு வர முடியாது. 

இந்த உண்மை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தெரிந்து கொள்ளுங்கள். எல்லாம் சினிமாவோ, டிராமாவோ, ரசிகர் கட்சி கிடையாது. கட்சி என்றால் மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் .செய்யாமல் யாரும் அரசியலில் வர முடியாது. அப்படி உழைத்தவர்கள், செய்தவர்கள் எல்லாம் திமுகவில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும், துரைமுருகன் புறக்கணிக்கப்பட்டுள்ளது திமுகவுக்கு மிகப்பெரிய சரிவு. கருணாநிதியின் குடும்பம் உழைத்த உழைப்பில் திமுக இல்லை.இதுதான் திமுக கட்சியின் வரலாறு .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *