ஜனவரி 29, 2025 • Makkal Adhikaram
வன்னிய சமுதாயத்தின் தலைவர் ஏ.கே.நடராஜனை தவிர, வன்னிய சமுதாயத்தின் தலைவருக்கான தகுதி யாருக்கும் இல்லை. மீதி எல்லாம் சுயநலத்துக்காக, இந்த சமுதாயத்தை அடகு வைத்து தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் தான் . அந்த வகையில் பாமகவும் ஒன்று.
மேலும், திமுகவில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு வன்னிய சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் ஒரே தலைவன் அவர் மட்டும்தான். இன்னைக்கு அவர் இருந்தால் தம்பி ஸ்டாலின் அந்தப் 10.5 % இட ஒதுக்கீடு போட்டு குடுத்துருங்க. ஸ்டாலின் வாய் திறக்க முடியாது. அந்த தைரியம் துரைமுருகன் இடமில்லை. ஜெகத்ரட்சகனிடம் இல்லை. இந்த சமுதாயத்தை இவர்கள் சமுதாயத்தை ஓட்டுக்காக பயன்படுத்திக் கொண்டார்களே ஒழிய, சமுதாயத்தின் நலனை பற்றி சிந்திக்கவில்லை. சொந்த நல்லனை பற்றி சிந்திப்பவர்கள், இந்த வேலைக்கு வந்து இருக்க கூடாது. பிறகு சமுதாயத்தின் மூஞ்சிலும் முழிக்க கூடாது.
கேடு கெட்டவன் வன்னியர் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவன். பாரம்பரியமிக்க ஒரு சமுதாயத்தை சீரழிக்க வந்த ராமதாஸ் மற்றும் அன்புமணி ,வன்னியர் என்று சொல்வதற்கு தகுதியற்றவர்கள். சமுதாயத்தை எத்தனை காலம் ஏமாற்றினாலும், இவர்கள் பின்னால் ஏமாறுவதற்கு குறிப்பிட்ட சதவீதம் இருக்கிறது. ஆனால், எத்தனையோ பேர் படித்தவர்கள், விவரம் அறிந்தவர்கள், கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் அதிகாரம் பேஸ்புக்கில் முனைவர் பால காமராஜ் திமுகவின் வாரிசு அரசியல் பற்றியும், இந்த இட ஒதுக்கீட்டின்( 10.5%) திமுகவின் உள்ளடி மோசடி வேலையும், அந்த அரசியல் வேறு யாருக்கும் தெரியாது என்று மிகத் திறமையாக ஸ்டாலின் செய்திருக்கிறார். இவர்களைப் போன்று அரசியல் கிரிமினல் வேலை செய்வதற்கு வேற யாருக்கும் தெரியாது என்று நினைப்பது ஸ்டாலின் தவறு.
உங்களுடைய ஆட்சி, உங்களுடைய கட்சி, சினிமா, டிராமா போன்றது. இது படித்த அரசியல் தெரிந்தவர்களிடம் எவனும் பேச முடியாது. ஏனென்றால் உங்களுடைய அரசியல் வீர வசனம் எல்லாம் படிக்காத முட்டாள்களிடம் தான் காட்ட வேண்டும். இல்லையென்றால் சுயநலவாதியான துரைமுருகன் மாதிரி ஆளுங்க தான் இதற்கு தகுதி. மேலும்,
உச்ச நீதிமன்றத்தில் பத்து புள்ளி ஐந்து சதவீதம் வன்னிய சமுதாயத்திற்கு கொடுக்க சொல்லி உத்தரவு போடப்பட்டது. அதை அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை உண்மையிலேயே அவரை பாராட்ட வேண்டும். அதற்கு முக்கிய காரணமாக இருந்த சி.வி சண்முகம் மிகவும் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இதற்காக கோடிக்கணக்கில் பணத்தையும் செலவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், இங்கே ஸ்டாலின் என்ன செய்தார் தெரியுமா? மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தன் உறவினரை வைத்து ஸ்டாலின் இதற்கு எதிராக வழக்கு தொடர வைத்தார். வன்னிய சமுதாயத்திற்கு 10.5 கொடுக்கக் கூடாது என்ற மனநிலையில் இருந்தார். ஆனால்,அந்த ஆத்மாக்கள் உண்மையாகப் போராடியது, உயிரை விட்டது அந்த நோக்கம் நிறைவேறவில்லை. மணி மண்டபம் கட்டி வன்னிய சமுதாயத்தின் வாக்குகளுக்காக அரசியல் செய்யும் ஸ்டாலின்பேச்சுக்களை நம்பி வன்னிய சமுதாயம் ஏமாறக்கூடாது.மேலும்,
நீங்கள் ஏமாந்து, ஏமாந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அது இப்போது உங்களுடைய அடுத்த தலைமுறை வரை வந்துவிட்டது. இந்த அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருப்பவர்கள். இவர்களுடைய பேச்சு தண்ணீரில் எழுதிக் கொள்ள வேண்டியதுதான். ஸ்டாலின் சமூக நீதிப் பற்றி பேசுகிறார். நான் ஒன்றே, ஒன்று கேட்கிறேன். சமூக நீதி பற்றிய பேசக்கூடிய ஸ்டாலின் ,பத்திரிக்கையில் சமூக நீதி இருக்கிறதா? என்பதை ஸ்டாலின் என்னிடம் பேச தயாரா? இல்லை விவாதிக்க தயாரா? இல்லை, செய்தித்துறை இயக்குனர் வைத்தியநாதன் பேச தயாரா? அல்லது பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் பொறுப்புக்களை கொடுத்துள்ள பத்திரிக்கை நடத்தக்கூடிய முதலாளியாக இருக்கட்டும், பத்திரிகை ஆசிரியர்களாக கூட இருக்கட்டும் விவாதம் நடத்த தயாரா?
ஒரு பத்திரிக்கை துறையிலே உங்களுடைய சமூக நீதி இல்லை என்றால், மக்களுக்கு எங்கையா இருக்கும்? மக்கள் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண்டவன் செய்த தவறு, உங்களை எங்களை ஆள வைத்தது ஆண்டவன் தான் தவறு செய்தவன்.
இதுவரை மக்கள் அதிகாரத்தில் ஐந்தாண்டு காலத்திற்கு மேலாக இந்த பத்திரிக்கை துறையின் உள்ளடி மோசடி, சட்டங்கள் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மேலும், பத்திரிக்கை பற்றி படித்தவன். 30 ஆண்டுகாலம் அனுபவம் உள்ளவன். அந்த துணிச்சலில் தான் பேசுகிறேன். எங்களுக்கு உண்மை தெரியும். நான் சொல்லும் ஒவ்வொரு விஷயத்தையும் சிபிஐ ஆய்வு செய்ய தயாரா? அல்லது உளவுத்துறை ஆய்வு செய்ய தயாரா? அல்லது நீதிமன்றம் சுமோட்டோ வழக்காக இதை எடுத்து விசாரணை செய்ய தயாரா?விசாரணையில் நான் உண்மையை எடுத்து வைக்க தயாராக இருக்கிறேன். இவர்களால் முடியுமா?
மேலும், எந்த நோக்கத்திற்காக இட ஒதுக்கீடு போராளிகள் 21 பேர் உயிரை விட்டார்களோ, அந்த நோக்கம் நிறை வேறாத போது, வன்னிய சமுதாயத்தை ஏமாற்ற மணிமண்டபம் கட்டி 40 கோடி செலவு செய்தாலும் பயனில்லை.