நவம்பர் 05, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாட்டில் திராவிடம், தமிழ் தேசியம் இது இரண்டுக்கும், மக்களுக்கு அர்த்தம் தெரியுதோ, தெரியாமல் இருக்கிறதோ, அதைப்பற்றி யாரும் இப்போது கவலைப்பட போவதில்லை. கவலைப்படுபவர்கள் சீமான், திருமாவளவன், ரங்கராஜ் பாண்டே இவர்கள் தான் இப்போது இதை பெரிதாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் .
இல்லையென்றால்! இந்த அரசியல் கட்சி பேச்சாளர்கள் மற்றும் youtube சேனல்கள் இவர்களுக்கு தான் இதைப் பற்றி அதிகம் தேவைப்படுகிறதோ, என்னவோ தெரியவில்லை .நாட்டில் மக்களுக்கு எது தேவையோ !அதை நோக்கி தான் இன்றைய அரசியல் இருக்க வேண்டும்.கொள்கைகளை பேசி கொள்ளையடிக்கிற கூட்டமாக அரசியல் கட்சிகள் இருக்கிறது. எந்த கொள்கை யார் கடைபிடித்து வாழ்கிறார்கள்? பேசுவதற்கு கொள்கை! செயல்படுவதற்கு கொள்கையா?அல்லது கொள்ளையா?
அப்படி வாழும் தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்கள் பட்டியலில் இருப்பவர்களின் பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்? இன்று விஜய் சினிமாவில் நடித்து, அதில் சம்பாதித்த பணத்தை இன்று அரசியல் கட்சியில் ஒரு முதலீடு போல கொண்டு வந்து போட்டு, மக்களுக்கு தன்னால் ஏதாவது செய்ய முடியுமா? என்ற நோக்கத்தில் வருபவர்கள் தமிழ்நாட்டில் உள்ள ஏழு கோடி மக்களில் இவர் ஒருவர் .
இந்த நல்ல நோக்கத்தை தேவையற்ற அரசியல் பேச்சாளர்கள், இவர்கள் பேசியே நாட்டைக் கெடுக்க வந்த ஒரு கூட்டம் திமுக .பிறகு, அதிமுக கொள்கையை பேசி ,கொள்ளையடிக்கும் கூட்டம் அரசியலில் அது ஒரு ஏமாற்று வித்தை . அந்த வித்தையை காட்டி தான், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் 50 ஆண்டுகாலம் அரசியலை நடத்தி இருக்கிறது . அதில் ஊழல் என்ற கரை இல்லாத ஒரு தலைவராக எம்ஜிஆர்.அவருடைய சொத்துக்களை ஏழை, எளிய மக்களுக்கு ,ஊனமுற்ற ,அனாதை குழந்தைகளுக்கு எழுதி வைத்துவிட்டு சென்றார் .ஆனால், கருணாநிதி,ஜெயலலிதா இவர்கள் மீதும் ஊழல் கரை படிந்து சிறைக்கு சென்றவர் ஜெயலலிதா. அதில் சட்டத்தை ஏமாற்றியவர் கருணாநிதி .மேலும்,
நாட்டைக் கெடுக்க வந்தவர்கள் தமிழ்நாட்டில் திமுக .முதலில் கொள்கையை தான் பேசினார்கள். என்ன என்றால், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இந்த கட்டுப்பாடு, கடமை எல்லாம் அண்ணாவோட திமுகவின் அரசியல் முடிந்துவிட்டது. அதற்கு அடுத்தது கருணாநிதியின் அரசியல், ஸ்டாலின் அரசியல், இப்போது உதயநிதி அரசியல், இந்த கொள்கைகள் எல்லாம் திராவிடம், தமிழ் தேசியம் இப்படி பேசிப் ,பேசி இந்த மக்களை குழப்பி, அவர்கள் திராவிடத்திற்கு ஓட்டு போடுகிறார்களா? அல்லது தமிழ் தேசியத்திற்கு ஓட்டு போடுகிறார்களா? என்று ஓட்டு போட்ட மக்களுக்கே தெரியாது.
அப்படி இருக்கும்போது, இன்று விஜயைப் பார்த்து ஏன்? இத்தனை அரசியல் கட்சிகள் பயப்படுகிறார்கள்? அவர் ஒரு நடிகர் என்றா? அல்லது இவரிடம் பணம் இருக்கிறது என்றா? அல்லது இவரிடம் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றா? அல்லது எதற்கு இவர்கள் பயப்படுகிறார்கள்? இன்று அரசியல் கட்சிகள், ஜாதி அரசியல் கட்சிகள், ஏன் பயப்படுகிறார்கள்? எதற்காக இந்த கதறல்? விஜய் பேசிய நேர்மையான பேச்சு! இதை பார்த்து தான் கதறல். இவர்களிடம் நேர்மை இல்லை .உண்மையில்லை. அது இவர்களுடைய மனசாட்சிக்கு தெரிந்து தான் கதறுகிறார்கள் .
அரசியல் கட்சிகள் என்பது கொள்கை கூட்டத்தை பேசி, கொள்ளையடிக்கிற கூட்டமா? மக்கள் அதற்கு ஏமாளிகள் ஆகவும், வைத்து பிழப்புக்கு கையேந்துபவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படி இருக்கிற மக்கள் தான் காசு கொடுத்தால், கண்ணை மூடிக்கொண்டு வாக்களிப்பார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது. அரசியல் என்றால் என்ன? தெரியாது .அரசியல் கட்சி என்றால் என்ன? தெரியாது. கொள்கை என்றால் என்ன? தெரியாது. இப்படிப்பட்ட மக்கள் இன்று வரைக்கும், பல அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதில் இப்போது இந்த இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று, ஏதோ வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்கள். உழைப்பவர்கள். இந்த இளைஞர் கூட்டம் விஜய்க்கு அரசியல் ஆதரவு தெரிவித்துள்ளது. மிகப்பெரிய இந்த அரசியல் கட்சிகள் இடையே ஒரு தாக்கத்தை தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாக்கம் உளவுத்துறை மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கும், தெரிவித்துள்ளது . இதனால் தான், தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தின் மீது பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனங்களை வைத்துக் கொண்டு இருந்தாலும், அதில் சீமானும், திருமாவளவன் அதிகமாக கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுடைய கதறல், தன்னிடம் இருக்கின்ற வாக்கு வங்கி போய்விடுமோ என்பதுதான் இவர்களுடைய ஒரு கதறல் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள் .ஏனென்றால், இந்த ஜாதி கட்சிகள் ,ஜாதியை இதுவரை ஏமாற்றி பிழைப்பு நடத்தி இருக்கிறார்களே ஒழிய, ஜாதிக்காக இவர்கள் எதுவும் செய்யவில்லை. ஜாதிக்காக குரல் கொடுப்பது, பேசுவது எல்லாம் ஜாதிக்காக உயிரை கொடுப்பது போல் ஊடகங்களில் பேசுவார்கள். இதை தான் ராமதாஸ், அன்புமணி செய்து வருகிறார்கள் .
இதை இளைய தலைமுறைகள் துளி கூட மதிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அது மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை நோக்கி ,அரசியல் தேவையே தவிர, இவர்களுடைய திராவிட சித்தாந்தமும், தமிழ் தேசிய சித்தாந்தமும் யாரும் அதை பெரிதாக பேசவில்லை. மக்களுக்கு தேவை நேர்மையான அரசியல் தலைவன்! மக்களுக்காக உழைக்கும் அரசியல் கட்சியினர் இருந்தால் தான் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, ஊடகங்களில் கொள்கைகளை பேசிவிட்டு, எந்த வழியில் கொள்ளை அடிக்கலாம் என்று திட்டம் போடக்கூடாது.
மேலும், தற்போது கொள்கைகளை பேசுகின்ற அரசியல் கட்சி கூட்டங்களையும், அதற்கு விசில் அடித்து கத்துகின்ற கூட்டங்களையும், இளைய தலைமுறைகள், பொதுமக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். அதில் ஒன்றும் மாற்றுக்கருத்து இல்லை . அதனால், ரங்கராஜ் பாண்டே, சீமான், திருமாவளவன், பேச்சுக்களை மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .இதை பெரிதாக எடுத்துக் கொள்பவர்கள் கார்ப்பரேட் மீடியா பத்திரிகைகளும்,தொலைக்காட்சிகளும் தான் எடுத்துக் கொள்கிறார்கள்.
ஏனென்றால் ஊழல்வாதிகள் இருந்தால் தான், இவர்கள் கோடி கணக்கில் வருமானம் சம்பாதிக்க முடியும். எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்களை கொடுக்காதீர்கள் என்று ஆட்சியாளர்களிடம் ஓதிக் கொண்டிருப்பார்கள் .மேலும், இந்த கொள்கை, சித்தாந்தம், கோட்பாடு இதையெல்லாம் பேசி அரசியல் என்று மக்களை ஏமாற்ற நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று, அவர்களோடு சேர்ந்து மக்களை ஏமாற்ற தாளம் தட்டினால், இளைஞர்களை, அரசியல் தெரிந்தவர்களை இனி ஏமாற்ற முடியாது.
இனி உங்களுக்கும், அந்த வாய்ப்பு இருக்காது . மேலும் அப்படிப்பட்ட கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு வியாபாரம் போய்விடும் . ரங்கராஜ் பாண்டேவும் ஒரு கார்ப்பரேட் பத்திரிக்கையில் வேலை செய்தவர். அவருக்கு அதே டேஸ்ட் தான் இருக்கும். நாங்கள் எல்லா பத்திரிக்கையும் பார்த்திருக்கிறோம். அதனால், அதில் எந்தெந்த டேஸ்ட் எப்படி எப்படி இருக்கும்? என்பதை ஆய்வு செய்து இச்செய்தியை வெளியிடுகிறேன்.