தமிழ்நாட்டில் 2026 ல் ஆட்சியை பிடிக்கும் அரசியல் கட்சி எது ? – அரசியல் ஆய்வாளர்கள் .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram

ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் செல்வாக்கு எடப்பாடி பழனிசாமிக்கோ அல்லது ஓ பன்னீர் செல்வத்திற்கோ அந்தக் கட்சியில் இல்லை என்று அப்போது மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் பலமுறை செய்திகள் யாம் வெளியிட்டுள்ளோம். அப்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி.மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி, நிர்வாகம், மக்களுக்காக இல்லை. அண்ணா திமுக கட்சியினருக்காக இருந்தது .ஊழல்கள் ஆட்சி நிர்வாகத்தில் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஊழலற்ற ஆட்சி, நேர்மையான நிர்வாகத்தை எடப்பாடி கொடுக்க முடியவில்லை .

தவிர தற்போது திமுக ஆட்சியில் பல பிரச்சனைகளை சந்திப்பது போல அப்போதும் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.அதன் எதிரொலி மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். அந்த மாற்றம் திமுகவிற்கு சாதகமாக அமைந்தது .இது ஒரு புறம், மற்றொரு புறத்தில் இந்த கூட்டணி அதாவது திமுகவில் உள்ள திருமாவளவன்,காங்கிரஸ்,முஸ்லிம்லீக்,மதிமுக, கம்யூனிஸ்டுகள் இவை ஒன்னும் பெரிய அளவில் வாக்கு வங்கியை வைத்திருக்கவில்லை. ஆனால், கணக்கிற்கு கூட்டணி என்றுதான் சொல்லிக் கொண்டு இன்றுவரை பத்திரிகைகள் எழுதுகிறது. இவர்களுடைய வாக்கு வங்கி இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

 ஆனால், கள்ள ஓட்டு திமுக தொடர்ந்து போட்டு வருகிறது. பணமும் வாக்காளர்களுக்கு பெரிய அளவில் கொடுக்கவில்லை. 200 ,300 சில இடங்களில் ஆயிரம் ,500 இப்படி தான் கொடுத்திருக்கிறார்கள் . ஒரு மாவட்டத்திற்கு சுமார் ஆயிரம் பூத்து இருக்கிறது என்றால், குறைந்தபட்சம் ஒரு பூத்திற்கு 100ல் இருந்து 200 கள்ள ஓட்டு திமுகவிற்கு விழுகிறது. இது 1000 *200 = 200000 சுமார் ஒரு மாவட்டத்திற்கு இரண்டு லட்சம் கள்ள ஓட்டுகள் போடுகிறார்கள். அதற்காகவே ஒரு டீம் வேலை செய்யும். அது ஒவ்வொரு பூத்துகளிலும் எந்தெந்த கட்சிக்கு ஏஜென்ட்கள் யார்? யார்? அந்த ஏஜெண்டுகளுக்கு எவ்வளவு பணம் கொடுப்பது? அதிகாரிகளுக்கு பணம் கொடுப்பது? இது எல்லாம் இந்த டீம் வேலை . வேட்பாளர்களையே திமுக விலைக்கு வாங்கும் போது, பூத் ஏஜெண்டுகளை விளக்கி வாங்க முடியாதா ?இது தொடர்ந்து பல ஆண்டுகளாக நடக்கின்ற திமுகவின் ரகசிய தேர்தல் தில்லு முல்லு வேலை . 

உழைக்காமல், மக்களுக்கு நல்லது செய்யாமல், ஊழல் செய்து கொண்டு, ரவுடிசம் செய்து கொண்டு, என்னை விட உத்தமன் யாரும்  இல்லை என்று பேசிக்கொண்டு, மக்களை ஏமாற்றும் ஒரு அரசியல், திமுகவின் அரசியல். இதை ஏன் சொல்ல வேண்டும் என்றால்,பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் அவர்களுடைய கைக்கூலிகளாகத்தான் இருக்கிறார்கள். இது பத்திரிகைத் துறைக்கே ஒரு கேவலம். பொய்களை சொல்வதற்கு பத்திரிகைகள் தேவையில்லை.

அதற்கு whatsapp, சோசியல் மீடியா போதும்.  எவ்வளவு போய் வேண்டுமானாலும், அந்தந்த கட்சிக்கு உள்ள பேச்சாளர்கள் சொல்லிக் கொள்ளலாம் . அப்படி தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் இந்த பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் சர்குலேஷன் என்று நமது மத்திய மாநில செய்தித் துறை கணக்கில் எடுத்துக் கொள்கிறது. இப்படி ஒரு குறுக்கு வழியில் தான் திமுகவின் வெற்றி உள்ளது. நேர்வழியில் ஜெயித்த வெற்றி என்று இதை சொல்ல முடியாது. தற்போதுள்ள ஆட்சியின் நிலவரம் பணம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. அப்படி இருக்கும்போது சமீபத்தில் நகராட்சிகளுக்கு சுமார் 2000 பேர் வேலை வாய்ப்புக்காக அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் தேர்வு நடத்தப்பட்டது . இந்த தேர்வில் சுமாராக எழுதியிருப்பார்கள் ,நன்றாக எழுதி இருப்பார்கள், சிலர் தோல்வி அடையும் அளவிற்கு எழுதி இருப்பார்கள். 

ஆனால், யாரெல்லாம் மந்திரியிடம் பணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் இன்று வெற்றி பெற்று இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் ரகசியமாக வந்த தகவல் . அதாவது திமுக என்றால் பேச்சில் உத்தமர்கள். .செயலில் உத்தமர்களாக இருக்க மாட்டார்கள் . நான்காண்டு முடிய போகிறது. இதுவரை இந்த ஆட்சியில் குறிப்பிட்டு சொல்லும் படியாக எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. பணம் இல்லாமல் எதுவும் இல்லை. ஆனால், மணல் கொள்ளை, சவுடு மண் கொள்ளை, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் ஊழல் இவையெல்லாம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தவிர, மக்கள் நேரடியாக அனுபவிக்க கூடிய சுமை வரி உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணங்கள் உயர்வு ,சொத்து வரி உயர்வு,அன்றாடம் மக்கள் வாங்கிய உபயோகிக்கும் மளிகை பொருட்கள் முதல் உடுத்துகின்ற பொருட்கள் வரை விலை உயர்வு, காரணம் அதன் மீது விதிக்கும் அதிகப்படியான வரிகள் இது ஒரு பக்கம், மக்களை சுரண்டி சாப்பிடும் வேலை . இதை செய்துவிட்டு,மகளிருக்கு உதவித்தொகை ரூபாய் 1000 /- கொடுப்பதால், எந்த பிரயோஜனமும் இல்லை. அந்த ஆயிரம் வாங்கும் பெண்மணிகளும், அவர்கள் குடும்பத்தில் பெரும்பாலும் அதாவது எல்லா குடும்பத்தையும் சொல்ல முடியாது. மாதம் பத்தாயிரம் டாஸ்மாக்கில் ஆண்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆக கூடி திமுக ஆட்சி மக்களை சுரண்டுகின்ற ஒரு ஆட்சி .இங்கே இலவசம் ஒரு ரூபாய் கொடுத்து 100 ரூபாய் வாங்கிக் கொள்வது, அப்போது அந்த இலவசம் எதற்கு ? இதையெல்லாம் எந்த பத்திரிக்கையும் மக்களிடம் சொல்லாது.

சொன்னால் அவர்களுக்கு வரவேண்டிய சலுகை, விளம்பரங்கள் கிடைக்காது . இந்த சலுகை, விளம்பரங்கள் கூட மக்களுடைய வரி பணம் தான் சலுகை விளம்பரங்கள். அது திமுக கட்சி அலுவலகத்தில் இருந்தோ அல்லது அவர்களுடைய வீட்டிலிருந்தோ கொடுக்கவில்லை . இந்த நிர்வாகம் மிக மோசமான நிர்வாகமாக இருந்து வருகிறது. இது சில அதிகாரிகள் இவர்களுக்கு ஒத்துப் போகிறார்கள். சில அதிகாரிகளுக்கு ஒத்துப் போகாது வேறு வழியில்லை என்று அவர்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.  

மேலும், இந்த ஆட்சி மிக மோசமாக இருக்கிறது என்றுதான் பேசுகிறார்கள். அதிலும், நகராட்சி பொருத்த அளவில் இந்த கவுன்சிலர்கள், சேர்மங்கள் இந்த உள்ளாட்சி துறையில் பணியாற்றக் கூடிய சிலர் நாங்கள் எல்லாம் இந்த வேலையை வி ஆர் எஸ் கொடுத்துவிட்டு கூட போய்விடலாம் என்று இருக்கிறோம் என்கிறார்கள். அந்த அளவிற்கு இவர்களுடைய டார்ச்சர். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக எது செய்தாலும், அதற்கும் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். இந்த ஆட்சியை போய்விட்டால், நாளைக்கு யார் பதில் சொல்வார்கள்? அவர்கள் தான் மாட்டுவார்கள் . இப்படி அரசு ஊழியர்கள், மக்கள், அதிருப்தியில் திமுகவின் ஆட்சி நிர்வாகம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு என்னதான் இந்த பத்திரிக்கை தொலைக்காட்சிகள் முட்டுக் கொடுத்தாலும், இங்கே வேலைக்காகாது. ஒரு பக்கம் youtube சேனல்கள், இன்னொரு பக்கம் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள், இந்த உண்மை செய்திகளை வெளியிட்டு தான் வருகிறது . இந்த நிலைமையில் அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், எந்த கட்சிக்கு பெரும்பான்மை ? என்பது மிகப்பெரிய கேள்வியாக தான் தமிழ்நாட்டில் தற்போது அதன் நிலைமை .  மேலும், தமிழ்நாட்டில் தேர்தலுக்கு முன் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் உடைவதற்கு வாய்ப்பு 100% உள்ளது . 

இதற்கு அடுத்து தற்போது தமிழ்நாட்டில் புதிய வரவு கட்சியான நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியை பிடித்து விடுவது போல் ஆரம்பத்தில் ஒரு பில்டப் ஏற்படுத்தினார்கள். தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் ஏன்? எம்ஜிஆர் கூட அப்படி வரவில்லை. வரவும் முடியாது. அவ்வாறு தமிழ்நாட்டில் முடியாது. இனி மக்களுக்காக யார் உழைப்பவர்கள்? யார் மக்களுக்காக செய்பவர்கள்? யாரால் நேர்மையான ஆட்சி கொடுக்க முடியும் ? இதை நோக்கி தான் தமிழக மக்களின் அரசியல் பார்வை . 

தமிழ்நாட்டில் பிஜேபிக்கு அண்ணாமலை மாநிலத் தலைவராக வந்த பிறகு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களுடைய தோல்வி கூட யாரெல்லாம் பிஜேபிக்கு வாக்களிப்பார்கள்? என்று தெரிந்து வாக்காளர் பட்டியலில் பெயரை எடுத்து விட்டார்கள். எவ்வளவு பெரிய கிரிமினலாக திமுகவினர் இருக்கிறார்கள்? என்பதற்கு இதுவே சாட்சி . நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 5 சீட்டுகள் ஆவது ஜெயித்திருக்க வேண்டும். இவர்கள் கள்ள ஓட்டும், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கவும் செய்துவிட்டு, மற்றொரு பக்கம் பணமும் வாரி இறைத்து பெற்ற வெற்றி தான் இது. 

மேலும், பிஜேபிக்கு அதிமுக, திமுகவிற்கு எதிரான வாக்குகள் உள்ளது. தவிர, உணர்வாளர்களும் இருக்கிறார்கள். இவர்களை எல்லாம் பிஜேபி பயன்படுத்திக் கொள்ளாமல், நான் கட்சியில் 50 ஆண்டுகாலம் இருக்கிறேன். பத்தாண்டு காலம் இருக்கிறேன். இப்படி இந்த கட்சியை அவர்கள் செல்லரித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எத்தனை காலம் இருந்தாலும், பிஜேபி தமிழ்நாட்டில் உங்களால் கட்சியை வளர்க்க முடியாது .ஆட்சியும் பிரிக்க முடியாது. சமூக நோக்கம் இல்லாமல், எந்த ஒரு கட்சியும் மக்களிடம் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்த முடியாது. சமூக நோக்கம் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், மத்திய அமைச்சராக இருக்கக்கூடிய முருகனுக்கு எங்களது கோரிக்கையை எத்தனையோ முறை, இந்த சமூக நலன் பத்திரிகைகள் பற்றி அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம், செய்திகள் மூலம் அவருடைய பி ஏ வுக்கு அனுப்பி வைத்துக் கொண்டு தான் இருக்கிறோம் . ஆனால், அதையெல்லாம் காதில் வாங்குகிறாரா ? இல்லையா? என்பது தெரியாது. அதனால், தமிழ்நாட்டு மக்கள் அரசியல் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளாத வரை, இந்த அரசியல் கட்சிகள் உங்களை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கும். நீங்கள் ஏமாந்தால் அவர்களுக்கு லாபம். உங்களுக்கு நஷ்டம். இப்போது பணத்தை வைத்து எப்படி வாக்குகளை வேலைக்கு வாங்கலாம்? இதில் போட்டி ,போட்டு எப்படி ஜெயிப்பது? இப்படி ஒரு கணக்கு அரசியல் கட்சிகளிடம் இருக்கிறது.

 மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு அரசியல் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா? மேலும்,எந்த ஒரு அரசியல்வாதியும் அல்லது அரசியல் கட்சியில் வேட்பாளர்களாக நிற்கக் கூடியவர்கள் பற்றிய உண்மை மக்களுக்கு தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் வெளிப்படுத்த வேண்டும் .அது தேர்தல் இணையதளத்தில், அந்த செய்தி வெளியிட வேண்டும் .இவர் யார்? இவருடைய சொத்து மதிப்பு என்ன? இவர் மக்களுக்கு என்ன செய்தார்? இவர் எப்படிப்பட்டவர்?இவர் சமூக நன்மைக்கானவரா? அல்லது குற்றப்பின்னணி உள்ளவரா? இதைப்பற்றி முதலில் வெளியிட வேண்டும். மேலும், இவருடைய தொழில் என்ன? வருமானம் என்ன? இவர் செய்த சமூகம் பணிகள் என்ன? இவருடைய தந்தை சொத்து எவ்வளவு ?இவர் அரசியலில் வந்து சம்பாதித்த சொத்து எவ்வளவு?அத்தனையும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

இவர் யார் என்று கூட தெரியாமல் மக்களிடம், இந்த கட்சியின் வேட்பாளர் என்று தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்கிறது . அது இருக்கக் கூடாது. எப்படியோ பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மூலம் வெளியிட்ட செய்திகள் ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு கொண்டு வர வேலைகள் நடைபெற்ற வருவதாக தெரியவந்துள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிய வருகிறது. காரணம் மேற்கு வங்கத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சியினர், மக்களை வாக்களிக்கவே விடவில்லையாம்.

அந்த அளவிற்கு அவர்களே ஓட்டுகளை போட்டுக் கொள்வது, இல்லை என்றால் இதற்கு தான் போட வேண்டும் என்று அச்சுறுத்துவது, இப்படி ஒரு நிலைமை அங்கு இருந்துள்ளது .அதனால், இனி மக்கள் எங்கு இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், அவர்கள் ஆன்லைன் மூலம் அதற்கான வரைமுறைகள் விதி முறைகள் கடுமையாக பின்பற்றி இணையதளத்தை கொண்டு வருகிறார்கள். கள்ள ஓட்டு போட முடியாது. பூத்துகளுக்கு போய் நான்கைந்து மணி நேரம் கால் எடுக்க நிற்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் கொடுத்து வாக்குகளை வேலைக்கு வாங்க முடியாது.

 ஏனென்றால் அவன் எதற்கு வேண்டுமானாலும் வாக்களிப்பான். பணம் கொடுத்தாலும் அவர்களைக் கேள்வி கேட்க முடியாது. அது மட்டுமல்ல, அப்படி விலை பேசும் வாக்காளர்களை யாரும் கொண்டு போய் ஓரிடத்தில் அடைக்கவோ அல்லது அவர்களுடைய அடையாள அட்டைகளை வைத்து இவர்களோ ஓட்டு போட முடியாது. அப்படி போட்டால்  மாட்டிக் கொள்வார்கள். மேலும், கட்சிக்காரர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இந்த வேலையை அவர்களால் பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அவர்களை கொண்டு போய் ஜெயிலில் போடுவார்கள் . அதனால், இனி வரும் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கப் போகிறது .மேலும்,

சில பிஜேபி வேட்பாளர்களை பல கோடிகளில் திமுக வேட்பாளர் விலைக்கு வாங்கி இருப்பதாகவும்  தகவல் . இது தவிர, அவர்களுடைய கட்சி கொடுத்த பணத்தையும், தேர்தல் நேரத்தில் செலவு செய்யாமல் வீட்டுக்கு கொண்டு போனவர்களும் இருக்கிறார்கள் என்ற தகவல் . இப்படி இருந்தால் பிஜேபி எப்படி தமிழ்நாட்டில் ஜெயிக்கும் ? வேட்பாளர்களையே திமுக விலைக்கு வாங்கும் போது பூத் ஏஜெண்டுகளை விளக்கி வாங்க முடியாதா ?

பிஜேபியின் தோல்விக்கு என்ன காரணம்? என்று அதன் தலைமை பிஜேபிக்கு டேட் டாஸ் எடுக்க சொன்ன சிலரை, அவர்களே இந்த விஷயத்தை பிஜேபியின் முக்கிய கட்சி பொறுப்பாளரான சந்தோஷிடம் தெரிவித்திருக்கிறார்கள்.அதனால் பிஜேபி உழைக்காமல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது .மேலும், எந்தக் கட்சிக்கு பெரும்பான்மை? என்பது தற்போதைய நிலவரத்தில் எதற்கும் இல்லை . எல்லோரும் வாக்குகளை பங்கு பிரிப்பார்கள். தேர்தல் வர இன்னும் ஓராண்டுகள் இருப்பதால், அப்போது கூட்டணிகள் நிலவரம்? மக்களின் மனநிலை? இதைப் பொறுத்து அரசியல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *