நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram

சமீபத்தில் விஜயின் மாநாட்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளின் அரசியல் பேரம் மறைமுகமாக அது ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அதிமுக எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பிரேமலதா இவர்களெல்லாம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, அதில் கூட்டணி பற்றி முடிவு செய்திருக்கிறார்கள் .
அந்த வகையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் விஜய் கூட்டணி வைப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தி இருக்கிறார். அதேபோல் தேமுதிகவிலும் பிரேமலதா மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்தியதாக தகவல் வெளியானது.
மேலும், இவர்களுடன் சில அரசியல் கட்சிகளும் சேர்ந்து வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது . இது சமூக நோக்கத்திற்கு எதிரான அரசியல். ஏனென்றால் அதிமுக, திமுக பல ஆயிரம் கோடிகளை தேர்தலில் செலவு செய்து வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் இது ஒரு வியாபார அரசியல். இந்த வியாபார அரசியலில் ஊழலை ஒழிக்க முடியாது. மக்கள் பணம் கொடுத்தால் கொள்ளையடிச்ச பணம் தானே என்று நினைத்து வாங்குகிறார்கள் .

இது கொள்ளை அடிச்ச பணமாக இருந்தாலும், மீண்டும் இதைவிட அதிகமாக கொள்ளையடிப்பதற்கு தான் கொடுக்கின்ற பணம் என்பதை வாக்காளர்கள் சிந்திப்பதில்லை. எந்த மாற்றத்திற்காக தமிழ்நாட்டில் இளைஞர்கள், பொதுமக்கள் விரும்புகிறார்கள்? அந்த மாற்றம் விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்குகிறார்கள். இது வியாபார அரசியல். அதனால், இதை விஜய் தவிர்ப்பது நல்லது.மேலும்,படிக்காதவர்கள், ஆடு, மாடு மேய்ப்பவர்கள், விவசாயத்தில் இருப்பவர்கள் ,100 நாள் வேலைக்கு செல்பவர்கள், இவர்களை நம்பி தான் அதிமுக, திமுக ஓட்டுக்கள் உள்ளது. இது இவர்களுக்கு மட்டுமல்ல, ஜாதி கட்சிகளான திருமாவளவன்,ராமதாஸ், சீமான் போன்றவருக்கும் இதில் குறிப்பிட்ட சதவீதம் வாக்குகள் வைத்திருக்கிறார்கள்.

இந்த வாக்கு வங்கி அரசியல்! வியாபார அரசியல், பதவியை அதிகாரத்திற்காக போட்டி போடும் அரசியல் .இவர்கள் மக்களைப் பற்றியோ, மக்கள் நலனை பற்றியோ பெரிதாக நினைக்க மாட்டார்கள். இவர்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு ,பதவிக்கு அலைபவர்கள். அதனால், இவர்கள் முழுக்க, முழுக்க பணத்தை நம்பி தான் அரசியலில் இறங்குகிறார்கள்.மேலும்,
வருங்கால இளைய தலைமுறை பெரும்பாலும், இந்த பணத்திற்கு அடிமையாகாது. அப்படி அடிமை ஆனாலும், வாங்கிக் கொண்டு யாருக்கு வாக்கு செலுத்த வேண்டுமோ, அவர்களுக்கு தான் வாக்கு செலுத்துவார்கள். அதுவும் குறைந்த குறிப்பிட்டு சதவீத நபர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள். இந்த கூட்டணி விஜய்க்கும் அடி. எடப்பாடிக்கும் அடி .மக்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அரசியல் புரிந்திருக்கிறார்கள்.இது தவிர,தற்போது பஞ்சாயத்து தலைவராக வந்தவர்கள், கிராமங்களில் ஊரையே சாப்பிட்டு கொழுத்திருப்பதால் , மக்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த புலம்பல் எதிரொலி வரும் சட்டமன்ற தேர்தலிலும் நிச்சயம் எதிரொலிக்கும் .அதனால் பணத்தை கொடுத்து விலைக்கு வாங்கும் வாக்குகள் மிக மிக குறைந்த சதவீதமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.மேலும்,

ஏற்கனவே, எடப்பாடி ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் ஆட்சி தான் நடந்துள்ளது. அதற்காக தான் ஸ்டாலினுக்கு வாக்களித்து ,திமுகவை வர வைத்தார்கள். இப்போது ஊடகப் பேச்சாளர்கள் இந்த கூட்டணி சேர்ந்தால், அவர் வெற்றி பெற்று விடுவார் என்று ஜோதிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற மாட்டார்.தவிர,
எடப்பாடி ஆட்சியின் ஊழலை மக்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் மறந்து விட்டிருப்பார்கள் என்பது அவர்களின் கருத்தும், சில ஊடகவியளாளர்களின் கருத்தும் இருக்கிறது.அது தவறு . மக்கள் எந்த மாற்றத்திற்கு அரசியல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அதை இவர்கள் கூட்டணியால் கொடுக்க முடியாது. மேலும், ஒரு வேலை அது திமுகவிற்கும் சாதகமாக இருக்கலாம். அதனால், மீண்டும் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் மீண்டும் பதவியில் அமர முடியாது .விஜய் சுதரித்துக் கொள்வது நல்லது .
அதிமுக எடப்பாடி பழனிசாமி, விஜயை விலை கொடுத்து வாங்கினாலும், குறிப்பிட்ட சதவீத மக்கள் மீண்டும் இந்த ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்க விரும்பவில்லை. இது தவிர, அவர்கள் அதிமுக, திமுகவுக்கு எதிரான மனநிலையில் தான் இருக்கிறார்கள் .அங்கே போய் விஜய் மீண்டும் கூட்டணி வைத்து இவருக்கு வரக்கூடிய ஓட்டுக்கள் அது பிஜேபிக்கு தான் திரும்பும்.மேலும்,
விஜய் அதிமுக கூட்டணியுடன் சேர்வது அவருடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகும் . அடுத்தது பிஜேபி தகுதியான தலைவரே தேர்வு செய்து தமிழக மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அரசியல் செய்யக்கூடிய ஒரு நபர் தேவை . பிஜேபி நினைக்கலாம் அண்ணாமலையால் தான் அதிமுக கூட்டணி நம்முடன் இல்லாமல் போய்விட்டது .அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி பெரிய கூட்டணி இல்லை .பணம் தான் பெரிய கூட்டணி .பணத்தால் மக்களை அடிக்கிறார்கள். அப்படி என்றால் நீங்கள் இந்த மக்களுக்கு ஊடகங்களில் பேசி காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறீர்கள். சேவைகளில் இறங்கவில்லை.
கார்ப்பரேட் ஊடக அரசியலை விட்டு வெளியே வாருங்கள். கார்ப்பரேட் ஊடக அரசியல்! அது ஒரு வியாபார அரசியல். அது சமூக நோக்கத்திற்கான அரசியல் அல்ல. அந்த வியாபார அரசியலில் ஊழல் தான் மிஞ்சிமே தவிர, மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது .

கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களின் நிலைமை இப்போது புரிந்து கொண்டிருக்கிறீர்களோ ,அதே நிலைமைதான். அதை புரியாத 50 ஆண்டுகால தேர்தல் வாக்குகள் அதிமுக, திமுகவுக்கு மாறி, மாறி வாக்களித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை உணர்ந்தவர்கள்இந்த படித்து ஜெனரேஷன் மற்றும் இளைஞர்கள், அரசியல் தெரிந்தவர்கள், அரசியலை படிக்கின்றவர்கள் நிச்சயமாக அதிமுக, திமுகாவிற்கு எதிரான வாக்குகள் தான். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை .
இதில் பிஜேபி தமிழ்நாட்டில் களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய நிர்வாகிகள் அங்கு இல்லை .அதுதான் பிஜேபியின் மைனஸ். அடுத்தது களத்தில் இறங்கி பணியாற்றுவதற்கு பணம் ஒரு முக்கிய காரணம் .அது ஒரு சதவீதம் ஆவது இருக்க வேண்டும். இந்த இரண்டு கட்சிகளிலும் ஆட்சி அதிகாரத்தில் ஊழல் செய்து கொழுத்து போய் இருக்கிறார்கள் . அதனால்தான் தமிழ்நாட்டின் அரசியல் இந்த இரண்டு கட்சிகளோடு மற்ற கட்சிகள் போட்டி போட முடியாத நிலைமையில் இருக்கிறார்கள்.

இதற்கு மாற்றம் தேவை என்று நம்புகின்ற இளைஞர்களை கொண்டு போய் அதிமுகவிடம் விஜய் அடகு வைத்தால், அவர் எந்த நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்தாரோ, அந்த நோக்கம் நிறைவேறாது. அடுத்தது பதவிக்காக அரசியலுக்கு அலைபவர்களில் இவரும் ஒருவராக தான் ஆகிவிடுவார். பதவி முக்கியமல்ல, மக்கள் நலன் முக்கியம் என்று உங்களுடைய செயல்பாட்டை நிலை நிறுத்திப் பாருங்கள், மக்கள் எப்படியும் திரும்பிப் பார்ப்பார்கள். அது காலத்தின் கட்டாயம் .
மேலும், தமிழக மக்கள் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சு! ஊடகங்களின் பேச்சு! பொதுநல நோக்கத்துடன் இருக்கிறதா? பொதுநலத்தில் இவர் என்ன அந்த பகுதியில் செய்திருக்கிறார்? என்பதை தீர்மானித்து வாக்களியுங்கள். கட்சி என்பது முக்கியமல்ல, ஒரு தனி மனிதனின் செயல்பாடு மிக, மிக முக்கியம். அரசியல் கட்சிகள் கொள்கையை பேசிவிட்டு ,கொள்ளையடிப்பது அரசியல் அல்ல .அதை தமிழக வாக்காளர்கள் உணர்ந்தால், இந்த ஊழல்வாதிகள் ,ஊழல் கட்சிகள் தமிழ்நாட்டில் இருக்காது .