அக்டோபர் 03, 2024 • Makkal Adhikaram

காந்தி ஜெயந்தி முன் முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக முழுதும் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் எந்தெந்த ஊரில் கிராம சபை நடந்தது? நடக்காமல் போனது ?மக்கள் எவ்வளவு பேர் அந்த கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்? அப்படி கலந்து கொள்ளாமல் நிராகரித்தால், சட்டப்படி அந்த தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் இதுவரை எடுத்துள்ளது? எதுவுமே இல்லை. மக்களுக்கு இதனால் என்ன பயன்?

கடம்பத்தூரில் 10 பேர் கூட இல்லை. விடையூரில் அது நடந்ததா? நடக்கவில்லையா? என்று கூட தெரியவில்லை. இப்படி பல கிராமங்களில், இந்த கிராம சபை கூட்டம் மக்களுக்கு அதன் பயன்கள்? அதன் உண்மைகள்? எதுவுமே இல்லாமல், பேப்பரில், TVயிலும், இணைதளத்திலும், செய்திகள் வருவது, படித்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள், இதை எல்லாம் ஒரு விளம்பரத்திற்கு நடத்துகின்ற தமிழக அரசின் வெட்டி வேலை .அதைவிட இணையதளத்தில் கிராமத்தின் கணக்கு வழக்குகளை வெளியிடுங்கள். இப்போது வரும் இளைஞர்கள், அதைப் பார்த்துக் கொள்வார்கள்,
தவறு இருந்தால் புகார் செய்வார்கள் .ஒரு கிராம நிர்வாக அலுவலகம் கூட வெளிப்படையான கணக்கு வழக்குகளை கொடுப்பதில்லை. மக்கள் அதிகாரம் போட்ட செய்திகளில் முதன்முறையாக இந்த கிராமங்களுக்கு இணையதள வசதிகளை ஏற்படுத்தி, கிராமத்தில் என்ன நடக்கிறது? என்பது அங்குள்ள கிராம மக்களுக்கு, அந்த கிராம அலுவலக வரவு, செலவு கணக்குகள், அனைத்தையும் வெளியிட ஆரம்பத்தில் இருந்து போராடிவரும் ஒரு பத்திரிக்கை. ஏதோ அப்போது இருந்த ஒரு ஆட்சி இதை கொண்டு வந்தது. கொண்டுவந்தும், இன்று வரி வசூலிக்க மட்டுமே இணையதளத்தை திமுக அரசு பயன்படுத்தி வருகிறது.

கணக்கு வழக்குகளை முறையாக ஆடிட் செய்வதில்லை. இந்த கணக்குகள் எல்லாம் பேப்பரில் தான் இருக்கும். நிஜத்தில் இருக்குமா? என்பது எந்த ஒரு ஆடிட்டரும் போய் அதை பார்ப்பதில்லை. இது பற்றி ஏஜி ஆடிட் செய்யக்கூடிய ஒரு அதிகாரியை கேட்டபோது, நாங்கள் பேப்பரைதான் பார்ப்போம். நிஜத்தில் அங்கு என்ன நடக்கிறது? என்று கூட எங்களுக்கு தெரியாது. ஆடிட் என்றால் பேப்பரில் கணக்கு வழக்குகளை எழுதி காட்டி, அதை சரி செய்து, எல்லாம் சரியாக இருக்கிறது என்று கையெழுத்து போடுவதற்கு, ஒரு ஆடிட் ரிப்போர்ட் கிராம பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஆடிட்டர் ரிப்போர்ட்.

இதற்கு ஆடிட் செய்யக்கூடிய அதிகாரிகள் அதற்கு தகுதியானவர்களா? என்பது சந்தேகம். இந்த நிலையில் அவர்கள் எப்படி இந்த கணக்கு வழக்குகளை ஆடிட் செய்வார்கள்? அதைவிட இந்த கிராம சபை ,கிராம பஞ்சாயத்து எல்லாம் ஒழித்து விடுங்கள். இல்லை என்றால், அந்த ஊழல் கணக்கு எதற்கு ?ஒரு ஆடிட் செய்ய வேண்டும்? அதற்கு அதிகாரிகள் எதற்கு தண்ட சம்பளம் வாங்க வேண்டும்? எதற்கு ஒரு பிடிஓ அலுவலகம் இருக்க வேண்டும்? எதற்கு ஒரு மாவட்ட பஞ்சாயத்து பீடி இருக்க வேண்டும்? எதற்கு ஒரு மாவட்ட கலெக்டர் இதற்கு ஒரு ஆய்வாளராக இருக்க வேண்டும்?
எல்லாம் மக்கள் இந்த போலி கணக்குகளையும், ஊழல் கணக்குகளையும் புகார் அளித்தால், கூட நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்கள் கோர்ட்டுக்கு போய், அங்கே வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடவடிக்கை இருந்தால் தான், பெரும்பாலான பஞ்சாயத்து தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது .அப்படி என்றால், எதற்கு அரசு அலுவலகங்கள்? எதற்கு அதிகாரிகள் ?தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு, ஊழல் கணக்குகளை பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறது என்று கையெழுத்து போடவா?, இதற்கு ஒரு பஞ்சாயத்தை தேவையில்லை.
இதற்கு ஒரு பஞ்சாயத்து பஞ்சாயத்து தலைவர் ,அதுல வேற அவனுங்க ஜனாதிபதி மாதிரி பிரசிடென்ட் என்று போர்டு வைத்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய கார்களில், இது எல்லாம் நினைக்கும் போது பஞ்சாயத்து ராஜ் சட்டம் நாட்டுக்கு ஒரு தேவையற்ற சட்டம். அப்படி இது தேவையா இருக்குமானால், இந்த ஊழல்களை எல்லாம் களை எடுக்க இந்த சட்டத்தை மாற்றாமல், பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது கூட வீண்.
எதற்கு கிராம பொது சொத்துக்களை கொள்ளை அடிக்கவா? அதிகாரிகளோடு கூட்டி சேர்ந்து, இதற்கு தான் பஞ்சாயத்து தேர்தலா? இவை அனைத்தும் மத்திய அரசு இதில் மாற்றம் கொண்டு வராமல் ,பஞ்சாயத்து தேர்தலை நாடு முழுவதும் நடத்துவது வீண் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் குற்றச்சாட்டு. நடவடிக்கை மத்திய அரசுதான் இதற்கு எடுக்க முடியும் . ஊழலுக்கு எதிரான கடும் சட்டங்களை பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் கொண்டு வர வேண்டும் .அதில்,மாற்றமில்லாமல் பஞ்சாயத்து தேர்தல் நடத்துவது வீண் .
மேலும், இந்த தேர்தல் மூலம் கிராம மக்களை ஏலத்தில் எடுத்து, இவர்கள் சம்பாதித்துக் கொள்ள அரசாங்கமே ஒரு இந்த தேர்தல் என்று ஒரு வியாபாரத்தை நடத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உண்மையும் புரிந்தவர்களுக்கு புரியும்.கிராமத்தின் ஊழலுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேவையா?