செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram
பிஜேபியை மதவாத சக்தி என்று சொல்லும் காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அதைவிட மிகப்பெரிய மதவாத கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜம்மு காஷ்மீர் தனி மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தொடர்ந்து நாடாளு மன்றத்தில் போராடுவோம் என்று பேசியுள்ளார் .அப்படி என்றால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு ஜம்மு காஷ்மீரை இவர் தனி நாடாக உருவாக்க முயற்சிக்கிறார், அவருடைய தாத்தா நேரு அதை தான் செய்து விட்டுப் போனார்.
இது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான தேச துரோக வேலை . இதை கொச்சையாக பிஜேபியின் மாநில பொறுப்பாளர் எச். ராஜா ராகுல் காந்தியை தேச துரோகி என்று சொல்லிவிட்டார் .அதற்காக இங்கு இருக்கிற காங்கிரஸ் கட்சி தியாகிகள் எல்லாம் எச். ராஜா மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்கிறார்கள். நாட்டில் பணம், பதவி இருந்தால், ராகுல் காந்தி போல,எத்தனை பேர் வந்தாலும், கொடி பிடித்து கோஷம் போட, எப்படியும் பேச, காவல்துறையில் வழக்கு பதிவு செய்ய, போலி அரசியல்வாதிகள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு இதுவரை தெரியாத உண்மை .மேலும், ராகுல் காந்தியின் பேச்சு இந்திய மக்களுக்கும், இந்த தேச நலனுக்கும்,
எதிரானது என்று எத்தனை கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன ? இதற்கு ஒத்து ஊதாமல் இருந்தாலே போதும். இவையெல்லாம் நான்காவது தூண் என்று சொல்லி மக்களையும் ஏமாற்றுகிறது .அரசியல் சட்டத்தையும் ஏமாற்றி சலுகை, விளம்பரங்களை கோடிக்கணக்கில், மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதையும் மத்திய மாநில அரசின் செய்தித்துறை இன்று வரை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?மேலும்,
அரசியல் என்பது இந்த தேசத்தின் நலனுக்கும், சமூகத்தின் நலனுக்கும், இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும்,ஒருமைப்பாட்டுக்கும் இல்லை என்பதுதான் ராகுல் காந்தியின் பேச்சு இருப்பதாக அரசியல் தெரிந்தவர்களும், அரசியலை படிக்கின்றவர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்ற கருத்து.
இது தவிர, கடந்த காலங்களில் அரசியலுக்கு வந்தவர்கள் ஒழுக்கமானவர்கள், தகுதியானவர்கள் இப்போது ஒழுக்கம் கெட்டவர்களும், தகுதியற்றவர்களும் தான் நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல் கட்சிகளில் இருக்கிறார்கள்.அவர்கள் தான் கட்சிப் பதவிக்கும், ஆட்சி பதவிக்கும் அலைகிறார்கள். இந்த சதவீதம் சில கட்சிகளில் கூடும், சில கட்சிகளில் குறையும். ஆனால், எந்த நோக்கத்திற்காக இவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்? என்றால் மக்களின் வாக்குகளை விலை பேசி ,வியாபாரம் ஆக்கி பல கோடிகளை சம்பாதிக்க வந்திருக்கிறார்கள்.
அதனால் தான் , உழைப்பவர்கள் ஏமாளிகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன்னேற முடியவில்லை. இதை எல்லாம் சிந்திக்காமல், வருங்கால இளைய தலைமுறைகள், உங்கள் வாழ்க்கை! எதிர்கால கனவுகள் ,எல்லாமே கேள்விக்குறியாகும் என்பதை மனதில் வைத்து, இந்த அரசியல் கட்சிகளை மற்றும் கட்சியினரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் .
இது உங்கள் நலனுக்கானது.நீங்கள் இந்த அரசியலையும், அரசியல் கட்சிகளையும், கட்சியினரையும் பற்றி தெரிந்து கொள்ளாமல் அலட்சியம் காட்டினால், உங்கள் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும், போராட்டமும், ஏமாற்றமும் நிறைந்தது என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
ராகுல் காந்தி இந்திய நாட்டின் நலனுக்காக பேசவில்லை. இவர் ஜம்மு காஷ்மீர் நலனுக்காக பேசியிருக்கிறார் .அதற்காகத்தான் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் அவரது கட்சியினர் போராடுகிறார்கள். இந்த போராட்டத்தின் உண்மையை நம் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் நலனுக்காகவா? அல்லது ஜம்மு காஷ்மீர் நலனுக்காகவா? என்பதை சிந்தித்து முடிவு செய்யுங்கள் .