ஏப்ரல் 25, 2025 • Makkal Adhikaram

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அரசியல் கட்சிக்கு தகுதி இல்லாத திருமாவளவன், ராமதாஸ், சீமான், வைகோ இது போன்ற பல கட்சிகள்,மற்றும் லெட்டர் பேடு கட்சிகள், நாட்டில் படித்த முட்டாள்களையும், படிப்பறிவு இல்லாதவர்களையும், அவரவர்களுக்கு ஏற்றார் போல் பேசி ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதாவது இவர்கள் பேசும்போது சமுதாயத்தை தூக்கி பிடிப்பவர்கள் போலவும், அவர்களுடைய வாழ்க்கையை அப்படியே மாற்றி பெரிய அளவில் கொண்டு வந்து விடுபவர்கள் போலவும் பேசுகிறார்கள். இதைதான் இந்த கூட்டங்கள் கைதட்டி கொண்டிருக்கிறது. இவர்கள் வீடு, வீடாக போய் சமுதாயத்திற்காக ஒரு பக்கம், ஜாதிக்காக உழைப்பவர்கள் போல் அவர்களிடம் காட்டிக் கொள்வார்கள். ஆனால், ஜாதியே சாப்பிடுபவர்கள் இவர்கள்தான் என்பது இவர்களுக்கு ஓட்டு போடும் கூட்டங்களுக்கு இன்னும் புரியாமல் ஏமாந்து கொண்டிருக்கிறது. மேலும்,

இந்தக் கூட்டம் எதற்காக காத்திக் கொண்டிருக்கிறது? என்பது இந்த ஓட்டு போடும் முட்டாள்களுக்கு தெரியவில்லை. இவர்களுடைய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ள இவர்கள் கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை கொஞ்சம் அரசியல் கட்சியினருக்கு கசக்கத்தான் செய்யும். எதற்காக உங்களுக்கு வாக்களிக்க வேண்டும்? நீங்கள் செய்த சேவை என்ன? உங்களுடைய சமூக அக்கறை என்ன? நீங்கள் வாழ்கின்ற பகுதியில் நீங்கள் செய்தது என்ன? அதை பட்டியல் போட்டு உங்களால் வாக்கு கேட்க முடியுமா?அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாது. ஆனால், உனக்கு தெரிந்தவன் வாக்களிக்க வேண்டும். அதனால்தான் அராஜக காரர்களை, அரசியலில் அடாவடித்தனம் செய்ய, அடாவடி பேச்சு பேச, இதுதான் அரசியலா?இவர்கள் நாட்டுக்காகவோ இந்த மக்களுக்காகவோ அரசியல் நடத்தவில்லை.மேலும்,

அதே போல் தான் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொண்டு, அதுவும் மூத்த பத்திரிகையாளர்கள் என்று youtube களில் பேசிக்கொண்டு, இவர்கள் எல்லாம் பத்திரிக்கையை துறையை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவன் என்ன சொன்ன யாருக்கு தெரியப் போகுது? பாம்பறியும், பாம்பின் கால் என்பது போல, நீ எங்க அசைந்தாலும், எங்கள மாதிரி ஆட்கள் உன்னை கண்டுபிடித்து விடுவோம்.
நீ எங்கே காசு வாங்கி, எப்படி பேசினாலும், அதை எங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்களால் தெரிந்து கொள்ள முடியும். அதனால்,உங்களுடைய பெயரைச் சொல்லிக் கூட, என்னுடைய பத்திரிக்கையில் எழுதி, அதை களங்கப்படுத்த தேவை இல்லை என்று நினைக்கிறேன் .அதனால், பத்திரிகை என்று பெயர் சொல்லாதீங்க ,நீங்க பேசாம ஏதோ ஒரு கட்சியில போயிட்டு கரை வேஷ்டி கட்டிக்கோங்க தப்பில்லை.

ஏனென்றால், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு இந்த அரசியல் தெரியாமல் ஒரு பக்கம் ஏமார்ந்து கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்த முஸ்லிம்கள் அதைவிட பாவம் இப்போதுதான் அவர்களுக்கு கொஞ்சம் விஷயம் புரிந்திருக்கிறது. இந்த மக்களை மதத்தால் அடிமைகளாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கொஞ்சம் மோடி முத்தலாக் சட்டம் கொண்டு வந்ததால், முஸ்லிம் பெண்கள் இன்று அவர்களுக்கு ஒரு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தெருவில் நின்ற பெண்கள் எவ்வளவு பேர்?மேலும்,

உலகே திரும்பிப் பார்க்கின்ற ஒரு நிகழ்வாக காஷ்மீரில் நடந்த ஒரு பயங்கரவாத சம்பவத்தால் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த குடும்பம் எவ்வளவு துடித்து இருப்பார்கள்? அந்த இடத்தில் எவ்வளவு உயிருக்கு போராடி இருப்பார்கள்? எவ்வளவு பயந்து இருப்பார்கள்? அதிலும் உளவுத்துறையை சேர்ந்த எட்டு குடும்பங்கள், மிலிட்டரியை சேர்ந்த குடும்பங்கள், நல்ல படித்த சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கக்கூடிய குடும்பங்கள் தான், அங்கே சுற்றுலா சென்று இருக்கிறது.
இவர்கள் வாயை திறந்தாலே என்ன சொல்கிறார்கள்? உளவுத்துறை எதற்காக இருக்கிறது? உளவுத்துறையின் மீது பழி போடுகிறார்கள். அடுத்தது அந்த முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் இந்த முஸ்லிம் தீவிரவாத இயக்கங்களுக்கு முட்டுக் கொடுத்து பேசுகிறார்கள். எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு தேவையற்ற ஒரு கட்சி. இது சுதந்திரத்திற்காக பாடுபட்ட கட்சி அல்ல. இன்னும் அரசியல் தெரியாதவர்களிடம் ஏதோ சுதந்திர தியாகி போல இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், ஒரு வங்கியில் பியுனாக இருந்த செல்லப் பெருந்தகை கொண்டு போய் மாநில தலைவராக அக் கட்சிக்கு போட்டிருக்கிறார்கள் என்றால்? அப்போதே தெரிந்து விட்டது, இது எப்படிப்பட்ட கட்சி என்பது? குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜெயிலுக்கு போய் வந்தவர் என்று அரசியல் வட்டாரம் பேசுகிறது. இப்படிப்பட்டவர்களிடம் எல்லாம் நாடு ஒப்படைத்தால் என்ன ஆகும்? சிந்தியுங்கள்.இவர்கள் எல்லாம் ஓட்டுக்காக அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டு மக்கள் படித்தவர்கள், படித்த இளைஞர்கள் இந்த தேசத்தை பற்றிய அரசியல் அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் வருங்காலத்தில் இவர்களெல்லாம் உங்களை எங்கு கொண்டு போய் சேர்ப்பார்கள்? என்பது தெரியாது. ஏனென்றால் திருடனும், கொள்ளையடிப்பவனும் அரசியலில் உத்தமனாக பேசிக் கொண்டிருப்பான். அவன் கூட எப்படி பேசுவான் என்றால்? உத்தமன், யோக்கியன் கூட அந்த அளவுக்கு பேசி நடிக்க மாட்டான் .அவ்வளவு நடிப்பு, திறமை ,பேச்சுத்திறமை இவர்களுக்கு எல்லாம் டயலாக் சொல்லித் தர வேண்டியது இல்லை. இவர்கள் அதற்காகவே வந்திருக்கிறார்கள்.
அதனால், இந்த ஏமாற்று வேலை எல்லாம் அரசியலில் ஏமாந்த கூட்டம் தான் 8 சதவீதம் மக்கள் வாக்குகளை போட்டு, ஏமாந்து கொண்டிருக்கிறது. ஒருவன் சொல்கிறான், அதாணி பணம் பூரா மோடி பணம். ஏன் அதானிடம் கொடுக்க வேண்டும்? அவர்கள் குடும்பத்திலே அண்ணன், தம்பிகள் இருக்கிறார்கள் அவர்களிடம் மோடி கொடுக்க கூடாதா?

இந்த நாட்டில் ஊழல்வாதிகள் எவ்வளவு உத்தரமார்களாக பேசுகிறார்கள்? இந்த ஊழல்வாதிகளுக்கு கொடை பிடித்துக் கொண்டிருக்கும் சோசியல் மீடியாவில் பேசக்கூடிய பேச்சாளர்கள் எப்படி எல்லாம் பேசுகிறார்கள்? பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் தங்களுடைய வருமானத்திற்காக எப்படி எல்லாம் செய்திகளை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் ?ஆனால், மக்கள் அதை எல்லாம் பார்த்து ஏமாந்து குழம்பி அரசியல் என்றால் படிக்காமல், புரியாமல் ஏமாறுவது முட்டாள்களின் வேலை. அதனால், தற்போதைய காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக படித்த சமுதாயம் வாழ வேண்டும். மேலும்,.
ஒரு அரசியல் தலைவன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? நாட்டில் அரசியல் என்றால் எப்படி இருக்க வேண்டும்? எதுவுமே தெரியாத ஒரு கூட்டம் எதைப் பேசினாலும், கையைத் தட்டிக் கொண்டு விசில் அடித்துக் கொண்டு, இது எல்லாம் படித்த சமுதாயம் சிந்தியுங்கள். இல்லையென்றால் நீங்கள் அவர்களிடம் அடிமைகள் ஆகி விடுவீர்கள். இது உண்மை. இது எனக்காக சொல்லும் கருத்து அல்ல, உங்களுக்காக சொல்லும் கருத்து. ஏனென்றால் இவர்கள் பேரில் எனக்கு எந்த விருப்பு, வெறுப்பும் கிடையாது.

ஒரு பத்திரிக்கை என்றால்! ஒரு பத்திரிக்கையாளன் என்றால்! உண்மையை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும். அந்த தகுதியற்றவர்கள் எல்லாம் பத்திரிகை, பத்திரிக்கையாளன் என்று சொல்லிக்கொண்டு, இந்த சமூகத்தை, மக்களை, ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் .இதில் பல சோசியல் மீடியாக்கள், இது தவிர, அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இயங்கக் கொண்டிருக்கின்ற பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இவை அத்தனையும் இன்று இந்த சமூகத்திற்கு முட் புதர்களாக வளர்ந்திருக்கிறது.மேலும்,.
ஆடு மாடு மேய்த்து கொண்டு, எருமை மாடு மேய்த்து கொண்டு, ஊரில் குடிகாரர்களாக இருப்பவர்கள், வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள், ரவுடிகள், பொறுக்கிகள், மொள்ளமாரிகள் ,இவர்களெல்லாம் இன்று அரசியல் கட்சிகளில் பொறுப்புகளை வாங்கிக்கொண்டு, உலா வருவதை பொதுமக்களாகிய உங்களுக்கு தெரியாதது அல்ல.

அதனால், இனி வருங்கால அரசியலில் சின்னங்களை பார்த்து வாக்களித்துக் கொண்டிருப்பது, உங்களுடைய அரசியல் அறியாமையின் முட்டாள்தனம். தகுதியானவர்கள் யார்? என்பதை தேர்வு செய்து வாக்களியுங்கள். மேலும், அரசியல் கட்சியின் தலைவன் யார்? எப்படிப்பட்டவர்? அவர் இந்த தேசத்திற்கான தலைவனா? அல்லது நமது தமிழ்நாட்டிற்கான தலைவனா? என்பதை எல்லாம் சிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம் இது. இவர்களுடைய பொய் வாக்குறுதிகளையும், பேச்சுக்களையும் நம்பி ஏமாந்தால் அவர்கள் எப்படியும் பிழைப்பார்கள். நாம் உழைத்தால் தான் பிழைக்க முடியும் .மேலும்,
இன்று பாகிஸ்தான் ஒரு தகுதியான தலைவனை அந்த நாடு இழந்ததால், இன்று இவ்வளவு பெரிய வறுமைக்கும், வாழ்வாதாரத்திற்கும், தீவிரவாத, பயங்கரவாத செயல்களுக்கும் பயந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை . அந்த நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், அரசியல் சரியான முறையில் அந்த மக்கள் தேர்வு செய்யாததால், இவ்வளவு இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாடும் மதம், மொழி, இனம் வேற்றுமையில் இருந்தாலும், அவர்கள் தேர்வு செய்யப்படும் அரசியல் கட்சித் தலைவன், இந்த நாட்டு மக்களுக்கு ஓட்டுக்காக இல்லாமல், நாட்டுக்காக தன்னை அர்ப்பணிப்பவனாக இருக்க வேண்டும். அதேபோல் ஊடகங்கள் கூலிக்கு கூவுற கூட்டமாக இருந்து கொண்டு, தேச நலனிலோ, நாட்டு மக்கள் நலனிலோ, அக்கறை காட்டாமல் எந்த கட்சிக்காரன் பணம் கொடுப்பான்? அவனுக்காக எப்படி பேசலாம்? இப்படிப்பட்ட ஊடகங்கள் தான், இப்படிப்பட்ட சோசியல் மீடியாக்கள் தான், தமிழ்நாட்டில் அதிகம் இருக்கிறது.

அதனால், நாட்டு மக்கள், வருங்கால இளைய தலைமுறைகள், இதுவரையில் நீங்கள் அரசியல் கட்சிகளை பற்றியோ ,அரசியல்வாதிகளை பற்றியோ, தெரியாமல் வாழ்ந்தால், உங்கள் வாழ்க்கை, எதிர்காலம், இந்த நாட்டின் எதிர்காலம், நிச்சயம் கேள்விக்குறியாகும் .அதேபோல் தான் ஊடகங்களைப் பற்றிய அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் .தகுதியற்றவர்கள் எல்லாம் ஊடகவியளாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பெருமை பேசிக் கொள்வதில் அர்த்தமில்லை. இந்த அர்த்தமற்ற கூட்டம் அரசியல் கட்சிகளுக்கு பின்னால் நின்று கொண்டு பிழைப்பு நடத்துகிறது. எதை சொல்ல வேண்டும்? என்று கூட தெரியாமல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் போலி கூட்டத்தின் உடன் போட்டி போட வேண்டியிருக்கிறது. எப்படி தகுதியான அரசியல்வாதிகள், தகுதியற்ற அரசியல்வாதிகளுடன் போட்டி போட வேண்டி இருக்குமோ, அதே நிலைமைதான் ஊடகத்திற்கும் இருக்கிறது. அதிலும் படித்த சமுதாயம் சிந்திக்க கூடிய சமுதாயம் இதை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும்.

ஆனால், படித்து சிந்திக்க தெரியாமல் முட்டாள்தனமாக இந்த அரசியல் கட்சிகளிடம் ஏமாந்து கொண்டிருக்கும் ஏமாளிகள் தமிழ்நாட்டில் அதிகம். அவர்கள் எல்லாம் இந்த உண்மைகளை சிந்திக்கத் தெரியாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிலர் அவர்களுக்கு ஏற்றார் போல் பேசினால் கைதட்டுவார்கள், சந்தோஷப்படுவார்கள். அப்படிதான் இந்த அரசியல் கட்சிகளும், இவர்களை திருப்திப்படுத்த, இவர்கள் செய்யக்கூடிய அயோக்கியத்தனத்தை எல்லாம் மூடி மறைக்க பத்திரிக்கை நடத்த வேண்டும் என்றால், அப்படி ஒரு பத்திரிகையே தேவையில்லை நாட்டுக்கு! இந்த உண்மையாவது உங்களுக்கு புரியுமா?
.jpeg)
நாட்டில் போர் என்று வந்தால், அப்போது ஏழை, பணக்காரன், தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி ,தாழ்த்தப்பட்டவன், உயர்த்தப்பட்டவன் எதுவும் இருக்காது. எல்லோரும் தான் அந்தப் போராட்டத்தை அனுபவிப்பார்கள். எல்லோரும் தான் அந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள். அதனால், ஜாதிக்காக ஒரு அரசியல், ஜாதியை எப்படி ஏமாற்றுவது என்பது ஒரு அரசியல், இந்த சமூகத்தை எப்படி ஏமாற்றுவது ஒரு அரசியல், ஒரு மதத்தினரை எப்படி திருப்திப்படுத்துவது என்பது ஒரு அரசியல், இப்படியெல்லாம் இந்த அரசியல் கட்சியினர் பேச்சும், நடிப்பும் நம்பினால், நாட்டு மக்கள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், நாடு முன்னேறாது, மக்களும் முன்னேற மாட்டார்கள். ஆனால், அவர்கள் மட்டும் தான் முன்னேறுவார்கள் .இதுதான் இன்றைய அரசியல். அதனால், அரசியல் பற்றி தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் அரசியலை எதிர்பார்ப்பு ஏமாற்றம்தான் மிஞ்சும் அதனால், தகுதியான அரசியல் கட்சியும் தகுதியான அரசியல்வாதியும் யார் என்பதை உங்கள் பகுதியில் தேர்வு செய்யுங்கள்.
இவர்கள் உங்களுடைய ஓட்டுக்காகவும், அவர்களுடைய பொருளாதார வளர்ச்சிக்காகவும், அதிகார பதவிக்காகவும் அரசியல் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் விழிப்புணர்வு அவசியம் தேவை.விழித்துக் கொள்.