நாட்டில் நாடாளுமன்றம் பெரிதா? அல்லது உச்சநீதிமன்றம் பெரிதா? என்ற ஒரு மறைமுகமான போராட்டம்? எப்படி வந்தது? காரணம் என்ன?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஏப்ரல் 18, 2025 • Makkal Adhikaram

உச்ச நீதிமன்றம், நடுநிலையான தீர்ப்பை கொடுக்காமல், அவர்களே சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்ப்பு !நாட்டு மக்களிடையே அதிர்ச்சியும், பேசு பொருளாகவும் ஆகி உள்ளது. இது நாட்டில் இன்று 

சட்ட போராட்டம், சமூகப் போராட்டம்,மற்றும் மதப் போராட்டம் வரை கொண்டு வந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீதிமன்றத்தில் அரசியல் தலையீடு,பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு, எப்போது வந்ததோ அப்போதே நாட்டில், இப்படிப்பட்ட குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு துறையும் அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமான கருத்து. 

மேலும், இன்று நாடாளுமன்றமா? அல்லது உச்ச நீதிமன்றமா? என்ற நிலைக்கு ஒரு மறைமுகமான போராட்டமாக உருவெடுத்துள்ளது. இந்தப் போராட்டம் நாட்டு மக்களுக்கு எதிரானது.

உச்சநீதிமன்றம், மற்றும் பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீடு, மறைமுகமாக இருப்பதால், நடுநிலை மற்றும் நீதிபதிகள் தீர்ப்பு நாட்டு மக்களிடையே பேசுபொருளானதா? மேலும், மத்திய அரசின், மாநில அரசின் செய்தி துறை கட்டுப்பாட்டில் சலுகை,விளம்பரங்கள் இருப்பதால் பத்திரிகை, தொலைக்காட்சிகள் அதற்கு அடிமையாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

தவிர, தகுதியற்றவர்கள் எல்லாம் இன்று தமிழ்நாட்டில் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி, சோசியல் மீடியாவில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.  அதாவது, கூலிக்கு கூவுகின்ற கூட்டமாக தற்போது இவையெல்லாம் இருந்து வருகிறது. இவையெல்லாம் நாட்டு மக்களுக்கு எதிரான வேலையை தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். 

எப்படி நீதித்துறை நாட்டு மக்களுக்கும், இந்த தேசம் நலனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதேபோல் ஊடகத்துறையும் நாட்டு மக்களுக்கும், தேச நலனுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே தமிழ்நாட்டில் எப்படியும் பேசலாம், எப்படியும் எழுதலாம், எப்படியும் பத்திரிகை நடத்தலாம், எப்படியும் தொலைக்காட்சி நடத்தலாம், இப்படி போய்க்கொண்டிருக்கிறது. இது என்ன அரசியல் கட்சியா?மேலும்,

அரசியல் கட்சி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நடத்துபவர்கள்  மறைமுகமாக கரை வேட்டியை கட்டிக்கொண்டு,நானும் பத்திரிகை, நானும் தொலைக்காட்சி என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் .இந்த உண்மை எல்லாம் செய்தித் துறைக்கு தெரியுமா?இதில் என்ன ஒரு கொடுமை? மக்களுடைய வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் வீணடித்து,

இந்த பத்திரிக்கைகளுக்கும் அரசு அடையாள அட்டை ,பஸ் பாஸ் மற்றும் அரசு விளம்பரங்கள் ,இதன் வளர்ச்சிக்கு செய்தித் துறை அதிகாரிகள்  ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால், உண்மையான சமூக நலன் பத்திரிகைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள். எவ்வளவோ உண்மைகள் எடுத்துச் சொல்லி, மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மத்திய ,மாநில அரசின் செய்தி துறைக்கு புரிய வைத்துள்ளது. ஆனால், இதில் அரசியல் தலையீடு இருப்பதால் என்ன சொன்னாலும் இவர்களுடைய மண்டையில் அது ஏறாது.

அதனால், நீதிமன்றத்திலும், பத்திரிக்கை துறையிலும், அரசியல் தலையிட்டை எப்போது ஒழிக்கிறார்களோ, அப்போதுதான் இப்ப பிரச்சனைக்கு எல்லாம் முக்கிய ஒரு தீர்வு ஏற்படுத்த முடியும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *