ஏப்ரல் 30, 2025 • Makkal Adhikaram

சட்டமன்ற கூட்டம் என்பதை தமிழக மக்களுக்கான ஒரு கூட்டம் இங்கே மக்கள் நலனை விட மீதி எல்லாம் பேசி அரசியல்வாதிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்களிக்க கூடிய மக்கள் அரசியல் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும்,
மத்திய அரசு கொண்டுவந்த வஃப் வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். இது எல்லாம் ஓட்டுக்காக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். உண்மை என்ன என்பது தெரியாமல் சட்டமன்ற கூட்டத்தின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் திமுக ஆட்சியின் அவலம். தவிர, நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாக உள்ளது. வரி உயர்வு எல்லாவற்றிலும் அதிகமாக உள்ளது.மேலும்,

ஏழை ,நடுத்தர மக்களுக்கு தங்கத்தின் விலை கேட்டாலே அஞ்சி நடுங்க வேண்டிய விலையாக உள்ளது. அதைக் குறைப்பதற்கு என்ன வழி? என்று எத்தனையோ கடிதங்கள் மத்திய அரசுக்கு எழுதிக் கொண்டிருக்கிற ஸ்டாலினுக்கு இதைப் பற்றி தெரியாதது ஏன்? அரை பவுனில் தாலி செய்வதற்கு கூட இப்போது ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய கவலை. மேலும், எதிர்க்கட்சிகள் கூட இதைப்பற்றி பேசவில்லை.மேலும்,

இங்கே அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய, மக்கள் பிரச்சனைகளை பேசக்கூடிய இடமாக தமிழக சட்டமன்றம் இல்லை. தவிர, சாமானிய ஏழை நடுத்தர மக்களின் பிரச்சினைகள் என்ன ?என்பது பற்றி தெரியாமல் ஊழலில் மிதந்து கொண்டிருக்கிறது ஸ்டாலின் அரசு. மேலும்,
சட்டமன்றத்திலே சமூக நலன் பத்திரிகைகளுக்காக பேசக்கூடிய ஒரு அரசியல்வாதியோ, ஒரு எம்எல்ஏ கூடவா? இருக்க மாட்டார்களா? அல்லது எதிர்க்கட்சிகள் கூட இல்லையா? எவ்வளவு அரசியல்வாதிகள் படிக்கிறார்கள்? இவர்களுக்கு உண்மையை எழுதக்கூடிய பத்திரிகைகள்? இந்த சமூக அக்கறை உள்ள பத்திரிகைகளை பற்றி, இந்த சமூகத்திற்கு, இந்த தேசத்திற்கு தேவையில்லை என்று நினைக்கிறார்களா? மேலும்,
ஊழல்வாதிகளை பாராட்டவும், ஊழலுக்கு ஒத்து ஓதக்கூடிய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மட்டும்தான் தேவை என்று நினைக்கிறார்களா? அதனால்தான் நாடு மிகவும் மோசமான அரசியலை பார்த்துக் கொண்டிருக்கிறது. இப்போதாவது உங்களுக்கு இந்த உண்மைகள் புரியுமா?

மேலும்,நாட்டில்,ஆயிரம், 500 க்கு ஓட்டு போட்டால் அவனுக்கு என்ன அரசியல் தெரியும் ? பிரியாணிக்கும், கோட்டர் பாட்டிலுக்கும் ஓட்டு போட்டால் அவனுக்கு என்ன அரசியல் தெரியும்?
அதனால்தான், இவர்களுடைய பிரதிநிதிகள் அங்கே அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் ,மக்களின் பிரச்சினைகளை விட,எது முக்கியம்? எது முக்கியம் இல்லை ?என்பது கூட தெரியாமல் பேசிவிட்டு போகிறார்கள். அப்படிதான் சட்டமன்றத்திலே தேவையற்ற ஒன்று அர்த்தம் தெரியாமல் காலனி என்ற வார்த்தையை நீக்கி இருக்கிறார் ஸ்டாலின். .
சட்டமன்றத்திலே முதல்வர் ஸ்டாலின் காலனி என்ற வார்த்தையை எதற்காக நீக்கினார்?காலனி என்ற வார்த்தைக்கு அதன் அர்த்தம் என்ன? குடியிருப்பு பகுதி, குடியிருப்பு, இதுதான் ஆங்கில டிக்ஷனரி சொல்லும் அர்த்தம். மேலும், இவர் எந்த அர்த்தத்தில் இதை நீக்கினார்? என்பதை தமிழக மக்களுக்கு சொல்லவில்லை.மேலும்,

ஒருவேளை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் காலனி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால், இந்த பெயரை அவர் நீக்கி இருக்கலாம். இருப்பினும் மற்ற சமூகங்களில் ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காக நீக்கி இருக்கலாம். தவறில்லை. ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகள் அதை ஏன் நீக்கப்படவில்லை? அடுத்தது பி. சி. ஆர் கம்பளைண்ட் கொடுத்து ஒருவரை பழிவாங்க அந்த சட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பதை, அதை ஏன் நீக்கவில்லை? ஏனென்றால் எல்லோரும் சமம் என்று வந்த பிறகு, இதையெல்லாம் நீக்குவது தான் சரியானது என்று மற்ற சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். இதற்கு ஸ்டாலின் பதில் சொல்வாரா? ஓட்டுக்காக அரசியல் செய்யும் திமுக அரசுக்கு இதைப் பற்றி எல்லாம் ஏன் சிந்திக்கவில்லை?மேலும்,

காமராஜர் ஆட்சியை விடவா? ஒருவரால் தமிழ்நாட்டுக்கு சிறப்பான ஆட்சியை தந்து விடப் போகிறார்கள்? அவருக்கு இதுவெல்லாம் தோன்றவில்லை. இவருக்கு யாரோ ஒரு அதி மேதாவி இதை சொல்லி இருக்கிறார்கள். இதனால், என்ன சமூக ஏற்றத்தாழ்வு நீக்கி விட்டீர்கள்? அல்லது நீக்கிவிடப் போகிறீர்கள்?
தவறு செய்து விட்டு, அதை மறைக்க தன்னை தாழ்த்தப்பட்டவனாக ஒருவன் அடையாளப்படுத்துகிறான். அதை வெளியில் சொல்லவில்லை என்றாலும், வெளிப்படுத்தும் முறையில் வெளிவருகிறது. அடாவடி பேச்சு, ரவுடிசம் இதை ஒழி, அதை ஒழிப்பதில் ஒன்றுமில்லை. அகத்தில் இருப்பதை ஒழி, புறத்தில் இருப்பது ஒழித்துப் பயனில்லை. மேலும், நீ நீக்கியது தபால்கார்களும், கொரியர்காரர்களும் தான் அவஸ்தைப்பட போகிறார்கள். ஏனென்றால், ஒரே பெயரில் நான்கு ஐந்து பேர் இருப்பார்கள். காலனி என்றால் அவன் அந்தப் பகுதியில் போய் அந்தப் பெயரைக் கேட்டு தேடிக் கொண்டிருப்பான்.

ஊரில் என்றால் ஊரில் அதே பெயரில் நான்கு ஐந்து பேர் இருப்பார்கள். அவன் யார்? என்று தேடுவதில் இப்போது அவனுக்கு மிகப்பெரிய குழப்பம் இருக்கும். ஊரில் பஜனை கோயில் தெரு என்றால், அங்கே பஜனை கோவில் தெரு இருக்கும். பெரும்பாலும், நகரங்களில் பிளாட் நம்பர், வீட்டு நம்பர் இது எல்லாம் இருப்பது போல, வீட்டிற்கு முன்னால் எதுவும் இருக்காது. இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? காலனி என்ற ஒரு வார்த்தையை நீக்கி எல்லா சமூகத்தையும் சமமாக ஆக்கிவிட்டால்! இந்த சலுகைகள் எதற்கு? அதையும் நீக்குங்கள் என்கிறார்கள் மற்ற சமூகத்தினர்.மேலும்,
ஓட்டுக்காக அரசியல் செய்து கொண்டிருக்கும் ஸ்டாலின், ஊழல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் ஸ்டாலின், இவையெல்லாம் சிறப்பான ஆட்சி என்று ஜால்ரா போட்டுக் கொண்டிருக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகள் தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்?