மும்மொழி கொள்கை திமுகவின் அரசியல் பிரச்சனையா? அல்லது தமிழக மாணவர்கள் பிரச்சனையா? அல்லது பாஜக பிரச்சனையா? யார் பிரச்சனை இது?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மார்ச் 07, 2025 • Makkal Adhikaram

அரசியல் கட்சி தலைவர்கள் பிஎச்டி பட்டம் பெற்று இதில் ஆய்வு நடத்திருக்கிறார்களா? அல்லது இந்த மொழி ஆய்வு செய்து phd பட்டம் பெற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் தெரிவிக்கிறார்களா?அல்லது அரசியல் கட்சி என்றும், அதற்கு தலைவன் என்று பேசிக் கொண்டிருந்தால், ஆளாளுக்கு ஒரு கருத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒரு கருத்து, இதில் எது மக்கள் நலன்? எது இவர்களுடைய நலன்? ரெண்டு பேருடைய பிசினஸும் இணைந்து நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.இதை தான் சமூக நலன் ஊடகங்கள் மக்களிடம் இந்த உண்மையை சொல்ல வேண்டும் என்று தெரிவிக்கிறோம் .மேலும்,

நாட்டில் காலத்திற்கேற்ப சமூக மாற்றங்கள் தேவைப்படுகிறது .இந்த இளைய சமூகம் எதை நோக்கி இருக்கிறது? என்றால்! மொழி ,அறிவு ,சிந்தனை ஆற்றல், திறமை, இதை நோக்கி வருங்கால இளைய தலைமுறைகளின் வாழ்க்கை எதிர்நோக்கி இருக்கின்ற சவால்கள் .

இந்த சவால்களுக்கு தமிழக மாணவர்கள் ,அதாவது தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள், அரசு பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் என்று இரு பிரிவாக இருக்கிறார்கள் .இது இவர்களுடைய பிரச்சனை. ஐம்பது வயதுக்கு மேல் அல்லது 30 வயதுக்கு மேல் யாரும் ஹிந்தியை இப்போது படிக்கப் போவதில்லை. கல்விப் பருவத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள், இந்தி படித்தால், அவர்கள் வாழ்க்கை கெட்டுவிடுமா? இல்லை தமிழகம் அதனால் அழிந்து விடுமா? பக்கத்து மாநிலத்தில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னுடைய மாநிலத்தில் தெலுங்கு மொழி தவிர, மாணவர்கள் 10 மொழியை கூட கல்வி கற்கலாம் .எந்த மொழி வேண்டுமானாலும் கல்வி கற்கலாம் என்று தெரிவித்துள்ளார் .

மேலும், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை, அதாவது மூன்றாவது மொழியை மாணவர்கள் உருது மொழியை கற்கலாம். ஆனால், இந்தி மொழியை கற்க கூடாது. உருது மொழி, திமுக அரசின் அரசியல் லாபமா?தமிழ்நாட்டில் உருது மொழிக்கு மட்டும் ஏன்? தமிழக முதல்வர் முக்கியத்துவம் கொடுக்கிறார்? இங்கே அரசியல் லாபமா? இந்தி படித்தால், உங்களுக்கு இங்கே அரசியல் லாபம் இல்லையா?உருது படித்தால் அரசியல் லாபம் இருக்கிறது. இந்தியை படித்தால் தமிழ்நாட்டில் திமுகவுக்கு அரசியல் லாபம் இல்லையா? அதாவது, உங்களுடைய அரசியல் லாபங்களுக்கு தமிழக மாணவர்களின் எதிர்கால நலன்களை கேள்விக்குறியாக்கக் கூடாது.மேலும், தமிழக அரசு மாணவர்களின் எதிர்கால நலனை பற்றி தான் சிந்திக்க வேண்டும் .ஆனால், 

அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவர்களை மட்டும் தான் இவர்கள் இந்தி படிக்க கூடாது என்று தடை விதிக்கிறார்கள். ஆனால், தனியார் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்கள் இந்தியை தாராளமாக படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, இதில் ஏழை ,எளிய நடுத்தர வர்க்க மாணவர்களின் எதிர்கால நலனை தமிழக அரசு கேள்விக்குறியாக்குகிறதா? 

மேலும், இந்த மாணவர்கள் மாநிலத்தை விட்டு, வேறு மாநிலம் சென்று வேலைவாய்ப்பை தேடிக் கொள்ளவும் ,சொந்தத் தொழில் நிறுவனங்களை உருவாக்கவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த மொழி உபயோகமானதாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். அதை தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் தாய் மொழி மீது கை வைத்தால், நாங்கள் அதை உயிரைக் கொடுத்து போராடுவோம் என்று கொதிக்கிறார். தாய் மொழியை யாரும் புறக்கணிக்கவில்லை. மத்திய அரசும் தாய்மொழி அவசியம் என்று தான் தெரிவிக்கிறது. இங்கே தமிழ்நாட்டின் அரசியல்! ,அரசியல் கட்சிகளின் சுயலாபங்களாக மாறிவிட்டது.மேலும், 

மக்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கையில்லாத போது, கட்சியினரை எப்படி நம்புவார்கள்? அவர்களுடைய பேச்சை எப்படி நம்புவார்கள் ? இவர்களுடைய பேச்சுக்களை எல்லாம் இவர்கள் நலத்திற்காக தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் நலம், மக்கள் நலம், என்றே சொல்லுவார் .ஆனால், தம் மக்கள் நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார். இதுதான் இன்றைய அரசியல்.மேலும்,

இதில், பிஜேபி தமிழிசை சௌந்தரராஜன் மக்களை சந்தித்து கையெழுத்து வாங்க ஆரம்பித்து இருக்கிறார். அவரை காவல்துறை கைது செய்துள்ளது என்ற தகவல் வெளியானது. அது மட்டும் அல்ல, மக்கள் இடத்தில் இந்த உண்மையை எடுத்துச் சொல்வதற்கும், காவல் துறை மூலம் தடை விதி இருக்கிறார்கள். மக்களுக்கு உண்மை போய் சேரக்கூடாது என்பதில் திமுக அரசியல் செய்கிறது. இது ஒரு புறம் என்றால், 

இந்த ஊடகங்கள் அதாவது தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் திமுகவின் சாதகமான கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். ஆனால், உண்மையை மக்களிடம் சொல்ல கூடாது. சொன்னால் அவர்களுக்கு அது எதிரான கருத்தாக தெரிகிறது. அது பத்திரிக்கை என்று சொல்வதற்கு தகுதி இல்லாத வேலை. பத்திரிக்கை என்பது ஆளும் கட்சியின் புரோக்கர் வேலையா? பத்திரிகை என்பது நியாயத்தின் பக்கம்! அநியாயத்தின் பக்கம் பத்திரிகை இல்லை. அப்படி இருக்கிறது என்றால், அது பத்திரிகை இல்லை. அதை பத்திரிக்கை என்று பெயர் சொல்லி அழைப்பது தவறானது.மேலும்,

மக்களுக்குத்தான் பத்திரிக்கையே தவிர, ஆட்சியாளர்கள் சொல்வதை, அரசியல் கட்சியினர் சொல்வதை, மக்களிடம் செய்திகளாக திணிப்பது பத்திரிகைகளின் சுயலாபத்திற்கு, மக்களை ஏமாற்றும் வேலை. அதனால், மக்கள் சிந்திக்க வேண்டும். மக்கள் எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும், அவர்கள் சொல்வது பற்றியும், ஆய்வு செய்ய வேண்டும். இந்த உண்மைகள் எதில் சரியான முறையில், எந்த,எந்த, பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வருகிறது? என்பதை பற்றி பொதுமக்கள் தான் சிந்திக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் தான், தமிழக மக்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அதனால், மக்கள் அலட்சியத்துடன் வாழ்வது அதேபோல், இந்த இளைய சமுதாயம் இதையெல்லாம் அலட்சியமாக பார்த்துக் கொண்டிருப்பது உங்களுடைய எதிர்கால நலனுக்கு அது ஆபத்து.

மேலும்,திறமை இருக்கும் மாணவர்கள் எத்தனை மொழி வேண்டுமானாலும், படிக்கட்டும். திறமை இல்லாதவர்கள் ஒரு மொழியைப் படிக்கட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *