அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram
இன்றைய அரசியல் கட்சிகள் ,சமூக விரோத கூட்டங்களாக இருந்து கொண்டு அதற்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்களின் பேச்சு, நாட்டில் வன்முறைகள், சட்டம் ஒழுங்கு,தீவிரவாதம், இதை தான் அரசியல் என்று இவர்கள் பேசுகிறார்களா? இதுதான் ஜனநாயக அரசியல் என்று கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றுகிறதா?
பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இதற்கு முன் கொடுத்த கட்டுரையில் கூட இதை மக்கள் அதிகாரம் சுட்டிக்காட்டி இருக்கிறது .அது என்ன என்றால்? இந்த பத்திரிகை ,தொலைக்காட்சிகளை வரைமுறைப்படுத்த வேண்டும். ஒவ்வொன்றின் தகுதி, தரம் என்ன? என்பதை நிர்ணயிக்க வேண்டிய காலம் நாட்டு மக்களுக்காகவும், சமூக நலனுக்காவும் மிகவும் முக்கியத்துவம் ஆனது.
மேலும், இன்றைய அரசியல் கட்சி என்று சொல்லக்கூடிய பெரும்பாலான கட்சிகளில் அடியாட்கள் கூட்டத்தை வைத்து அரசியல் நடத்தி, நாட்டுக்கும் ,நாட்டு மக்களுக்கும், எந்த நன்மையும் இருக்காது.ஏன் அந்த ஜாதிக்கே இருக்காது.அந்த மதத்திற்கும் இருக்காது.
அதே போல் தான், உலக அளவில் தீவிரவாத இயக்கங்களால் ஏற்படும் பிரச்சனைகள் ,எந்த நாட்டுக்கும் நன்மை இல்லை. அதை எல்லா நாடுகளும் இந்த தீவிரவாத இயக்கங்களை ஏற்கவில்லை. ஆனால், இன்று இந்த தீவிரவாத இயக்கங்களால், உலக நாடுகளுக்கு இடையே மோதல், வர்த்தக உறவுகள், வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் சிக்கலும், பிரச்சனைகளும் உருவாக முக்கிய காரணமாக உள்ளது.
மக்கள் எவ்வளவுக்கு, எவ்வளவு சுயநலமாக இருக்கிறார்களோ! அந்த அளவிற்கு ஜாதி அரசியல், தீவிரவாத இயக்கங்கள், வன்முறை அரசியல், இவை அனைத்தும் மக்களுக்கு எதிரானது. பாதிப்பானது. இதனுடைய தாக்கங்கள் தான் இன்று ரஷ்யா ,உக்கிரன் போர், இஸ்ரேல், ஈரான் போர் என்று இந்த தீவிரவாத இயக்கங்களை அழிக்க முற்பட்டு, இப்போது இஸ்ரேல், ஈரானுடன் போரிடும் அபாயம் ஏற்பட்டு, உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது . இந்தியாவில் இருக்கின்ற முஸ்லிம்கள், இந்தியாவிற்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும், கருத்துக்களை பேசி வருகிறார்கள்.
அதையும் ஆதரிக்கின்ற ஒரு ஜாதி நோய் பிடித்த திருமாவளவன், அவர்களோடு கூட்டு சேர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். திமுக அவர்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்று அவர்களே சொல்கிறார்கள். இவர்கள் நாட்டைப் பற்றியோ, மற்ற சமூகங்கள் பற்றியோ, மற்றும் மதத்தைப் பற்றியோ கவலைப்படுவதில்லை .ஆட்சி ,அதிகாரத்திற்காக எப்படியும் பேசக் கூடிய சுயநலவாதிகள். .இல்லையென்றால் மாட்டுக்கறி தின்பதை வைத்து அரசியல் பேசுவார்களா?
நானும் எவ்வளவோ அரசியல் கட்சியை பார்த்திருக்கிறேன். அதுவும் ஒரு சாதாரண தொண்டனோ அல்லது அந்த கட்சியின் பொறுப்பாளர்களோ பேசினால் கூட பரவாயில்லை . இவனையெல்லாம் எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது? என்று தான் தற்போது மற்ற சமூகங்கள் பேசுகிறது.மேலும்,திருமாவளவனின் பேச்சு மற்ற சமூகங்கள் இவர்களைப் பார்த்து பயப்பட வேண்டுமா? அல்லது மதிக்கப்பட வேண்டுமா? என்பதை மக்கள் இனி வரும் தேர்தலில் அதை புரிய வைப்பார்கள் என்று மற்ற சமூகத்தினர் பேசுகின்றனர் . இனி திருமாவளவனுக்கு மற்ற சமூகங்கள் வாக்களிக்க முன்வருவார்களா? என்பது தான் மிகப்பெரிய கேள்வி? அரசியல் தெரியாமல் கூட்டணி கட்சிகளில் இருந்து கொண்டு, இந்த கார்ப்பரேட் ஊடகங்களில் மக்களை ஏமாற்றிக் கொண்டு, அரசியல் செய்வது பெரிய திறமையாகி விட்டது.
இந்த திறமையெல்லாம் எங்களைப் போன்ற ஒரு 100 சமூக ஊடகங்கள் இருந்தால், தமிழ்நாட்டில் இவர்களுடைய நிலைமை என்னவென்று மக்களுக்கு சொல்வோம். அரசியலுக்கு எதற்கு வந்தாய் ?அந்த கேள்விக்கு பல அர்த்தங்கள் உண்டு .ஜாதி ஓட்டு மட்டுமே, ஒருவருடைய வெற்றியை தீர்மானிக்காது.அதுவும் திருமாவளவனின் பேச்சு மற்ற சமூகங்கள் புண்படும் அளவில் இருக்கிறது. இதுவரை இந்த சமூகங்கள் திருமாவளவனுக்கும், இவருடைய கட்சியினருக்கும், ஏமாந்து வாக்களித்தார்களா?
மேலும், நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. நாட்டுக்கு, நாடு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. இதையெல்லாம் காங்கிரஸ் கட்சி, திமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் தீர்த்து வைக்க முடியுமா? இந்த அரசியல் பற்றி ஒவ்வொரு நாளும் மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது .கட்சி என்பதைவிட, நாடு! நாட்டு மக்கள் என்பதை சிந்திக்கும் தேச நலன் விரும்பிகள். தமிழ்நாட்டு அரசியலை நினைத்து வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது சாம்சங் கம்பெனி ஊழியர்கள் விவகாரம் எந்த அளவிற்கு அந்த கம்பெனியை மூடுவதற்கு வழிவகை செய்கிறார்கள். இவர்களால் அந்த ஜாதிக்கு 100 பேருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது. ஆனால், ஜாதியையும், கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கத்தையும், அதில் அங்கீகரிக்க வில்லை என்பதற்காக, அந்த கம்பெனியை இழுத்து எடுத்து மூட பார்க்கிறார்கள். இன்று படித்த இளைஞர்களுக்கு அதனால் பாதிப்பு, அவர்களுக்கும் ,அவர்கள் குடும்பத்திற்கும் தான் ,இவர்களுக்கு ஒன்றும் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல் சாம்சங் நிறுவனத்திற்க்கும் பாதிப்பு இல்லை. தமிழ்நாட்டை விட்டால்,இருக்கின்ற மாநிலங்களில் ஏதோ ஒரு மாநிலத்தில் அவர்கள் கொண்டு போய் அந்த கம்பெனியை வைத்து விடுவார்கள்.
நாட்டில் உதவாத அரசியல் கட்சிகளில் கம்யூனிஸ்டும் ஒன்று .இவர்கள் தியாகிகள் போல் பேசிவிட்டு, எங்களை விட சமூக சேவகர்கள் நாட்டில் இல்லை என்று கூறிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் சட்டம் பேசி, அதை கவிழ்த்து விட்டு வருவது கம்யூனிஸ்ட் வேலை.இதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அந்நிய நாடுகளுடன் இந்தியாவுக்கு எதிராக, மறைமுக சதி வேலைக்கு, மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் நலன் என்று சித்தாந்தமும், வேதாந்தமும் பேசி முட்டாள் ஆக்குவது கம்யூனிஸ்ட் இன் கைவந்த கலை.
எங்கு ஆரம்பித்ததோ சீனாவிலே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், இவர்களை வைத்து இந்தியாவில் தேச துரோக வேலையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால், இன்றைய அரசியல் கட்சியினரிடமும், அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்களும், சுயநலமாகிவிட்டது. இதை மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறது. மக்கள் தான் இதை புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். சுயநல அரசியலை புரியாமல், சுயநல கூட்டங்களுக்கு வாக்களித்து ஏமாந்தால், நாடு இன்னும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமைக்கு தள்ளப்படும். எப்பொழுது தமிழக மக்கள் இதை புரிந்து கொள்கிறார்களோ, அப்போதுதான் தமிழகம் தலை நிமிரும் .
மேலும், நேர்மையான அரசியல் கட்சி தலைவர்கள், மனசாட்சி உள்ள தலைவர்கள் தமிழ்நாட்டில் இல்லை .அதனால் தான், இந்த மனசாட்சி இல்லாமல் வாழ்கின்ற மற்றும் பேசுகின்ற மக்களை பயன்படுத்திக் கொண்டு, இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரும் இதில் இருக்கிறார்கள்.தவிர, போதைக்கு அடிமையானவர்கள், அவர்களுக்கு எதுவும் தெரியாது. போதை ஒன்றுதான் முக்கியம் .குடும்பத்தை பற்றியோ, நாட்டைப் பற்றியோ சிந்திக்கின்ற மனநிலையில் அவர்கள் மூளையே வேலை செய்யாது. ஆல்கஹால் மூளையின் செல்களை அழிக்கிறது .மக்களின் சுயநலம்தான், இன்றைய ஆட்சி அதிகாரத்தின் ஊழலும், வன்முறை அரசியலும், மக்களின் நலன்களுக்கு எதிராக இன்றைய மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு மிக முக்கிய காரணம் .
மக்கள் எப்போது? மனசாட்சியுடன் பேசி, மனசாட்சியுடன் வாழ்கிறார்களோ, அப்பொழுதுதான் இவர்களுக்கு நேர்மையான அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், தகுதியானவர்கள் இவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள். அதனால், மக்கள் செய்கின்ற தவறு, இவர்களிடமே வந்து சேருகிறது . எப்போது மக்கள் இதை எல்லாம் சிந்திக்கிறார்களோ? அப்போதுதான் நல்ல அரசியல் கட்சித் தலைவர்களும், அதற்கான அரசியலும், மக்களுக்கு கிடைக்கும் என்பதை தமிழக மக்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் ?