மார்ச் 12, 2025 • Makkal Adhikaram

திமுக அரசு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு ஏற்படுத்தி உள்ள நிதி இழப்பு குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அச்செய்தியின் காரணமாக கூட்டுறவுத் துறையில், கூட்டுறவு பதிவாளர் மற்றும் கூடுதல் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால்,
வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஏ.கே. சிவமலர் மட்டும் அங்கிருந்து பணியிட மாற்றமோ அல்லது அவர் மீது எந்த நடவடிக்கையோ எடுக்கவில்லை. இது ஏன் ?அரசியல் தலையிடா? அல்லது கூட்டுறவு துறை அமைச்சர் தலையிடா? என்பதுதான் காஞ்சிபுரம் மத்திய வங்கியின் கூட்டுறவுவாளர்கள் கேள்வி? மேலும், A.K.சிவமலர் செய்துள்ள தவறு கை புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பார்கள். அது போல் இருக்கிறது. எனவே,
மீண்டும் இது பற்றி தலைமை செயலகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியின் செயலாளர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் கவனத்திற்கு, இந்த செய்தி மீண்டும் இணையதளத்திலும், எமது மக்கள் அதிகாரம் பத்திரிகையிலும்,மேற்படி வங்கியின் கூட்டுறவாளர்கள் தெரிவித்த ஊழல் மோசடி குறித்து, பொதுமக்களின் கவனத்திற்கு இதை மீண்டும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

அதாவது ஏ.கே. சிவமலர் 4 .7 .2024 இல் வங்கிக்காக பர்னிச்சர் அண்ட் பிட்டிங்ஸ் (Funiture & Fittings )அதாவது சேர் ,டேபிள் மற்றும் அது சம்பந்தமான தளவாடப் பொருட்கள் வாங்க 12 கோடியே, 75 லட்சத்து, 25, 171 ரூபாய் வங்கியின் கணக்கில், செலவு செய்ததாக, மேற்படித் தொகை காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு காட்டப்பட்டுள்ளது.
மேலும்,காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை மற்றும் அனைத்து கிளைகளிலும் உள்ள பர்னிச்சர் அண்ட் பிட்டிங்ஸ்(Funiture & Fittings) அதாவது சேர் மற்றும் டேபிள் போன்ற தளவாடப் பொருட்கள் மதிப்பு (தேய்மானம் நீங்களாக) 2,74,62,422. என்று தான் பேலன்ஸ் (Balance sheet) ல் கொடுக்கப்பட்டுள்ள தொகை. இங்கே வங்கியில் இருக்கக்கூடிய தளவாடப் பொருட்கள் மதிப்புக்கும், ஏ.கே சிவமலர் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட தொகைக்கும் சுமார் 4 மடங்கு வித்தியாசம் இருக்கிறது.
இது தவிர, வங்கிக்கு அதே தேதியில் வாகனங்கள் கொள்முதல் செய்ய ஒரு கோடி, 36 லட்சம் ரூபாய் செலவு கணக்கு எழுதப்பட்டுள்ளது. இங்கே வாங்கிய பொருட்களின் விவரத்தை வங்கியில் கொண்டு வந்து அதை காட்டியிருக்க வேண்டும். பொருட்களையும் காட்டவில்லை. தவிர, சுமார் 14 கோடி ரூபாய் எந்தெந்த கணக்கில்? அல்லது யாருடைய கணக்கில்? இது வரவு வைக்கப்பட்டது?

நேரடியாக வாகனங்கள் வாங்கிய கம்பெனிக்கா? அல்லது பர்னிச்சர் அண்ட் பிட்டிங்ஸ் கம்பெனிக்கா? என்பதும் ஒரே நாளில் எந்தெந்த கம்பெனிகளில்? எவ்வளவு தொகை? காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கணக்கிலிருந்து கம்பெனி கணக்குகளுக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டது? அதனுடைய முழு விவரம் எடுத்தாலே சிவமலர் செய்த ஊழல் நிச்சயம் வெளிவரும்.
இதற்கு உடந்தையாக அதே வங்கியில் தணிக்கை பிரிவில் இருக்கக்கூடிய ஏழுமலை விசாரணையில் முக்கிய உறுப்பினராக இதிலே சேர்க்க வேண்டும். ஏனென்றால், இவருக்கு தான் தெரியும். யாருடைய கணக்கில்? இந்த பணம் சேர்த்து உள்ளார்கள் ?மேலும்,

வங்கியில் உட் தணிக்கையாளர் கிருஷ்ண குமார்,தொடர் தணிக்கை அதிகாரிகள், இந்த ஊழலை கண்டுபிடித்து, உயரதிகாரிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும். மேலும், இந்த வங்கிகளுக்கு தணிக்கை மேலாளராக இருக்கக்கூடிய ஏழுமலை இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்க வேண்டும்.
தவிர, இந்த கணக்கு வழக்குகளை எல்லாம் மறைத்து சி. ஏ. படித்த ஆடிட்டர்களிடம் கணக்கை சரிகட்டும் வேலையில் ஈடுபட்டு வருபவர் இந்த தணிக்கை மேலாளர் ஏழுமலை என்கிறார்கள் கூட்டுறவாளர்கள். அதனால் உடனடியாக இவரை அவ்விடத்திலிருந்து மாற்றி ,மேற்படி வங்கிக்கு நேர்மையான ஒரு தணிக்கை மேலாளரை நியமனம் செய்ய வேண்டும் .
மேலும், மேற்படி தணிக்கை மேலாளர் ஏழுமலை எட்டு வருடத்தில் இந்த வங்கிக்கு எத்தனை கோடி நிதி இழப்பு இவர்களுடன் கூட்டு சேர்ந்து செய்துள்ளார் என்பதையும் கண்டுபிடிக்க காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்டுறவாளர்கள் மேற்படி வங்கியின் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.தவிர,
.jpeg)
Director general of audit arun sunder dyalan .
இது ஒரு மிகப்பெரிய ஊழல் முறைகேடாக இருப்பதால், இந்த ஊழலை ஆய்வு செய்ய டைரக்டர் ஜெனரல் ஆப் ஆடிட் அருண் சுந்தர் தயாளன் தலைமையில், இதை ஆய்வு செய்து, மேற்படி வங்கிக் கணக்கில் இருந்து, எந்தெந்த தேதியில் இந்த பணம் யார்? யார்? அக்கவுண்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
மேலும், ஏ. கே. சிவமலர் மீண்டும் ஒரு தவறை செய்திருக்கிறார் .அது என்ன என்றால்? வங்கியில் எந்த செலவானாலும், அதை தீர்மானம் போட்டு, ஒப்புதல் பெற்ற பிறகே வங்கியில் இருந்து பணத்தை எடுக்க வேண்டும். ஆனால், ஏ.கே. சிவமலர் 4 .7 .2024 ல் மேற்படி தொகையினை எடுத்துவிட்டு, பிறகு தீர்மானம் போடுகிறார்.அதுவே தவறு. சரி அப்படியே தீர்மானம் போட்டாலும், அன்று மேற்படி பொருட்கள் வாங்கியதை, வங்கி அதிகாரிகள் முன்னாடி அதை காண்பித்திருக்க வேண்டும். அதுவும் இல்லை.
மேலும், மேற்படி தளவாட சாமான்கள் வாங்கியதாக மற்றும் புதிய வாகனங்கள் வாங்கியதாக கணக்கு எழுதி விட்டு, பின்னர் பேரவையில் அனுமதி கேட்டு தீர்மானம் போட்டதில், இங்கே வங்கியில் இருந்து எவ்வளவு தொகை யார் கைக்கு? அல்லது யாருடைய கம்பெனிக்கு ?எவ்வளவு தொகை கை மாறி உள்ளது?
மேலும், 27. 9 .2024 அன்று நடந்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 110 வது பொது பேரவை கூட்டத்தில், பேரவையின் பரிசீலனைக்கு வைக்கப்பட்ட 23 பொருட்களில்,அனுமதி கேட்கப்பட்ட கீழ்க்கண்ட இரண்டு பொருட்களும் அடங்கும். தீர்மான நகலில் பொருளின் 12 ல், வங்கியின் உபயோகத்திற்காக புதிய இனோவா வாகனம் ஒன்று, உத்தேச மதிப்பீடு ரூபாய் 34 லட்சத்தில் காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களின் அனுமதி பெற்று கொள்முதல் செய்து கொள்ள ஒப்புதல் கோருதல்.அடுத்தது
பொருள் :14 ல், வங்கியின் தவணை கடந்த கடன்களை வசூலிப்பதற்கு இரண்டு புதிய பொலிரோ டீசல் வாகனங்கள் வாங்க காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களின் அனுமதி பெற்று, கொள்முதல் செய்து கொள்ள ஒப்புதல் கோருதல்.
தீர்மான முறை கேடுகள் :
ஒரு இனோவா, இரண்டு போலிரோ, இரண்டும் சேர்த்து சுமார், 60 லட்சத்திற்கு மட்டுமே, தீர்மானம். தவிர ,வங்கிக் கணக்கில் ரூ1.36 கோடிக்கும், ரூ12,கோடி, 77 லட்சத்திற்கும்,மண்டல இணைப் பதிவாளர் முன் அனுமதி இன்றி செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது குறித்து பொது குழுவில் தீர்மானம் நிறை வேற்றப் படவில்லை.
எனவே, மேற்படி பணம் யாருடைய வங்கி கணக்கு சென்றுள்ளது? என்பதை தணிக்கை துறை அதிகாரிகள் தான், இதில் முழுமையாக விசாரணை செய்து உண்மையை கண்டுபிடிக்க முடியும்.
இது தவிர, வங்கியின் தணிக்கை மேலாளராக செயல்பட்டு வரும் ஏழுமலை சுமார் 8 வருட காலத்திற்கு மேலாக, அதே இடத்தில் பணி புரிய வேண்டிய அவசியம் என்ன? ஏனென்றால், மூன்று வருடத்திற்கு ஒருமுறை, தமிழகத்தில் உள்ள எந்த துறை அதிகாரியாக இருந்தாலும், அவர்களுக்கு பணியிட மாற்றம் செய்தாக வேண்டும் .ஆனால், இங்கே ஏழுமலை எட்டு வருடத்திற்கு தணிக்கை மேலாளராக கூட்டுறவு வங்கியிலே இருப்பதற்கான காரணம் என்ன ?

மேலும், இந்த எட்டு வருடத்தில் இவர் என்னென்ன ஊழல்கள்? செய்து வங்கிக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியுள்ளார்? என்பதை டைரக்டர் ஜெனரல் ஆப் ஆடிட் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .மேலும்,
தலைமை அலுவலகம் மற்றும் கிளைகளுக்கான ஒரு சிறிய பொருள் வாங்க வேண்டும் என்றாலும், வளர்ச்சிப் பிரிவு அதற்கான கோப்பு தயாரித்து, எழுத்தர், ,உதவி மேலாளர், மேலாளர், உதவி பொது மேலாளர் ,பொது மேலாளர், பின் மேலாண்மை இயக்குனர் ஒப்புதலோடு முறையாக கோப்பு முடிக்கப்பட வேண்டும் .பின்னரே பொருள் வாங்கப்பட வேண்டும் .
அதற்கு முன் சம்பந்தப்பட்ட மண்டல இணைப்பதிவாளரிடம் அனுமதி பெற வேண்டும்.இவ்வளவு கூட்டுறவு சட்ட விதிமுறைகள் மீறி இந்த ஊழல் எப்படி நடந்துள்ளது? மேலும்,வங்கியின் வளர்ச்சி பிரிவில் பணிபுரியும் மேலாளர் புஷ்பலதா மேற்கண்ட 14 கோடி பற்றி விசாரித்த போது, தளவாட சாமான்கள் மற்றும் வாகனங்களுக்கான தேய்மானப் பதிவு மேற்கொண்டுள்ளதாக தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
ஆனால், 4 .7. 2024 பதிவினை பார்க்கும் பொழுது, அது தேய்மான பதிவாக தெரியவில்லை. மாறாக கொள்முதல் செய்ததாக பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்முதல் செய்வது என்றால், மேலே சொன்ன பல கோப்புகள் உருவாக்கி, கொள்முதல் செய்திருக்க வேண்டும்.
மேற்படி வங்கியில் மேலாண்மை இயக்குனர் சிவமலர், இவ்வளவு பெரிய தளவாட சாமான்களும், வாகனங்களும் வாங்கியதாக செலவழிக்கப்பட்ட

கணக்கில், எவ்வளவு கொள்ளையடித்துள்ளார்? என்பதை இதனுடைய கணக்கு வழக்குகளையும், இதில் சம்பந்தப்பட்ட மேலாண்மை இயக்குனர் சிவகுமார், தணிக்கை மேலாளர் ஏழுமலை, புஷ்பலதா,ஆகியோரை இந்த விசாரணை வளையத்திற்குள் சேர்த்து டைரக்டர் ஜெனரல் ஆஃப் ஆடிட் விசாரிக்க வேண்டும்.அப்போதுதான் இந்த 14 கோடி ஊழல் எப்படி நடந்தேறியுள்ளது ?என்பது பற்றிய உண்மை விபரம் தெரிய வரும் என்று கூட்டுறவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்படி ஊழல் குறித்து சரியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கூட்டுறவு உறுப்பினராக இருக்கக்கூடிய ஒருவர் இது சம்பந்தமாக பொதுநல வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார் என்பதை திமுக அரசுக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும், கூட்டுறவுத்துறை செயலாளருக்கும், கூட்டுறவுத்துறை பதிவாளருக்கும், இச்செய்தியின் உண்மை புரிந்தால் சரி.