மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம் வெளிநாட்டு-செய்திகள்

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும், 

இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். இது முழுக்க,முழுக்க இயற்கை வெளிப்படுத்தி இருக்கும் அதன் சக்தி தான் இது. இதை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்,பருவநிலை மாற்றத்தின் ஆய்வாளர்கள் ,விஞ்ஞானிகள்  தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் பல ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் இப்பிரச்சினை தொடர்கதை ஆகிறது .ஏன் ?இன்று வரை இது எதனால் ஏற்படுகிறது? என்பது பற்றி  இதை ஆய்வு செய்யவில்லை. இதை ஆய்வு செய்தால்தான், இப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்தித்து இதை தெரிவித்துள்ளார். அது உண்மையான விஷயம் .

நீங்கள் இயற்கையை அழித்துவிட்டு, மனித உயிர்களை காக்க முடியாது. அதை சரி செய்ய முடியாது .இயற்கை நினைத்தால்  எல்லாமே ஒரே நாளில் தரை மட்டமாக்க முடியும். இது பற்றி புவியியல் வல்லுனர்களை வைத்துக் கூட ஆய்வு செய்து பார்க்கட்டும், நாம் சொன்னது உண்மையா?பொய்யா? என்பது அவர்கள் சொன்னால்தான் புரிந்து கொள்வார்கள். அதாவது ஒரு தொலைக்காட்சியில் , ஆங்கில பத்திரிக்கையில், தேவையற்ற செய்தி வெளி வந்தாலும், மக்கள் அதை பெரிதாக பேசுவார்கள். எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகள் உண்மையை தெரிவித்தாலும், அது அலட்சியமாகத்தான் இன்று மக்களுக்கும் , சில அதிகாரிகளுக்கும் இருக்கிறது. 

அந்த காலத்தில் இயற்கையோடு ஒட்டி மனிதன் வாழ்ந்தான். இன்னும் சொல்லப்போனால் இயற்கையை போற்றி வாழ்ந்தான்.  திருவண்ணாமலையில்இப்படி ஒரு சம்பவம் அதிர்ச்சியாக தான் உள்ளது.  ஏழு பேர் நிலச்சரிவினால் உயிரிழந்திருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக எதிர்பாக்காத அளவில்  வெள்ளை சேதங்கள்  ஏற்படுகிறது. எதிர்பாராத விதமாக புயல் !புயல் வந்தாலே இன்று மக்கள் பயப்படும் அளவிற்கு ஆகிவிட்டது. ஒரு பக்கம் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது.  மற்றொரு பக்கம் கடல் அலைகள் சீற்றம் அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்வது தீர்வு இதுவல்ல

 இவை அத்தனையும் இயற்கை மனிதனுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. என்பதை இன்னும் இந்த ஆட்சியாளர்களும், மக்களும் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் புரிந்து கொண்டதெல்லாம் ஆடு ,மாடுகளைப் போல்  அவர்களுக்கு உணவு கொடுப்பது, ஏதோ ஒரு பெரிய சேவை செய்தது போல் திருப்தி அடைந்து கொள்கிறார்கள்.மேலும், அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட ஆற்று மணல் மற்றும் தாதுக்கள், கனிம வளங்கள்,

மலைகளை அழித்தது, காடுகளை அழித்தது ,அதன் பாதிப்புகள் தான் புவியியல் மாற்றம். இயற்கையை மனிதன் அழித்தால், மனிதனை இயற்கையை அழித்து விடும். 

இது தவிர, ஸ்பேசில்  (space) பல்வேறு நாட்டின் ராக்கெட்டுகள் அது ஒரு புறம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இப்போது அங்கே ஒன்றுக்கொன்று நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதாக தகவல். இப்படி அதிகப்படியான விஞ்ஞான வளர்ச்சி மனித உயிர்களுக்கு ஆபத்தானது என்று மருத்துவத்துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இன்றைய சயின்டிஃபிக் வேளாண்மை மக்களுக்கு அதிக அளவில் கண்டுபிடிக்க முடியாத நோய்களை உருவாக்குகிறது . இது இப்படி என்றால், இதைவிட கொடுமை ஹோட்டல் உணவகங்கள்.  இயற்கையோடு, ஆட்சியாளர்களோடு, அரசியல் கட்சியினரோடு, பல்வேறு நோய்களோடு, பொருளாதாரத்திற்கு,மனிதத் தேவையினால், உழைப்பதற்கு ஏழை எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கை போராட்டம் ஆகிவிட்டது .மேலும்,

எப்போது இந்த பிளாட்டுகள் 16 மாடி, 20 மாடி என்று கட்டிக்கொண்டே போகிறார்களோ, எப்போது மக்கள் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்களோ, மனசாட்சி இல்லாமல் வாழ்கிறார்களோ, இறை நம்பிக்கை ,இறைவனைப் பற்றி அலட்சியப்படுத்துகிறார்களோ, எப்போது மனசாட்சி இல்லாமல், தரம், உண்மை, நேர்மை எல்லாம் வாழ்க்கையில் அலட்சியப்படுத்தப்படுகிறதோ, கல்வி என்பது வியாபாரமாக்கப்பட்டதோ, அதாவது குறிப்பாக சொல்லப்போனால் பணத்திற்கு மட்டுமே எல்லோரும் மதிப்பளித்துவிட்டு,

 மற்ற அனைத்திற்கும், அதன் சிறப்புகளை, தகுதிகளை கேவலமாக்கி விட்டால், மனித வாழ்க்கையில் எந்த உயர்வும், கௌரவமும் இருக்காது. சந்தோஷம், நிம்மதி வாழ்க்கையில் இருக்காது. எல்லாம் வேஷமாக மனித வாழ்க்கை இருக்குமே ஒழிய ,உண்மை, நேர்மை,இருக்காது.

உழைப்பு, உண்மை ,நேர்மை எல்லாம் பணத்தை வைத்து விலைமதிப்பிட முடியாது.  அவ்வாறு அதை விலை பேசப்பட்டால், அதனுடைய தகுதி, தரம், கேவலமாக தான் இருக்கும். ஆட்சியாளர்கள் பணத்திற்காக எப்படி வேண்டுமானாலும், இயற்கையை அழித்துவிட்டு பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டால்! இயற்கை மக்களை அழிக்க ஆரம்பிக்கிறது. இதுதான் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *