செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram
தென்காசி மாவட்டம். அம்பாசமுத்திரம் அருகே மரங்களில் ஆண்டி அடித்து மின் வயர்கள் பதிந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், அதை உடனே அகற்றி, மின்கம்பங்கள் அமைத்து வயர்களை இழுக்க மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.
அம்பாசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது பிரபலமான காசிநாத சுவாமி கோவல். இந்த கோவிலுக்குச் செல்லும் சாலையில் இருபுறமும் பழமையான மருத மரங்கள் காணப்படுகின்றன. இந்த பகுதியில் முறையான மின்வசதி ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட மின்வாரிய துறைஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சாலையோரம் மின் கம்பங்களை நட்டு அதன் வழியாக மின்வயல்களை கொண்டு செல்வதற்கு பதில், சாலையோரங்களில் உள்ள மரத்தின்மீது ஆணி அடித்து, அதன்மூலம் மின் கம்பிகளை எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ வைரலானது. அதில், சாலையோரம் உள்ள மருத மரங்களில், தலா 3 ஆணிகள் வீதம் 3 மின் கம்பிகளை அடித்து, அதன்மூலம் வயர்களை கட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இதுபோன்ற நடவடிக்கை காரணமாக, மரத்தின் ஆயுள் காலம் குறைவதோடு, மரத்தில் ஈரப்பதம் இருப்பதால் மின்சாரம் பாய்வதற்கும் வாய்ப்பு உள்ளதாவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து செய்தி வெளியான நிலையில், இந்த விவகாரம் மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கவனத்துக்கு சென்றனர். இதையடுத்து, சம்பந்தப்பட்டமரங்களில் இருந்து மின் வயர்களை அப்புறப்படுத்தி, புதிதாக மின் கம்பங்கள் வழியாக வயர்கள் கொண்டு செல்ல அமைச்சர் தங்கம் தென்னரசு, நெல்லை மண்டல மின்வாரிய மேற்பார்வை பொறியாளருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் முழு வீச்சில் மின்வாரிய ஊழியர்கள், மரங்கள் வழியாக கொண்டு செல்லப்பட்ட மின் வயர்கள் அனைத்தைஎ யும் அப்புறப்படுத்தி, புதிதாக மின்கம்பங்கள் நடும் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் பாதுகாக்கப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘நெல்லை அம்பாசமுத்திரத்தில், மரத்தில் இன்சுலேட்டர் பொருத்தப்பட்டு மின் கம்பிகளைப் பதித்து மின் இணைப்பு வழங்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், மின் வாரிய அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, உடனே மின்கம்பம் அமைக்க உத்தரவிட்டேன். இந்நிலையில், அதற்கான பணிகள் தற்போது நிறைவுபெற்று, பாதுகாப்பான வகையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.