நாமக்கல்லில் சினிமா பாணியில் சேசிங் : வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை : தமிழ்நாடு போலீசார் அதிரடி !

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் மாவட்டம்.

கேரளாவின் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சம் பணத்தை கொள்ளையடித்த இளைஞர்களை போலீசார் துரத்தி பிடித்தனர்.நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே புறவழிச்சாலையில் சாலையில் வடமாநிலத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி மூன்று இருசக்கர வாகனத்தையும் ஒரு காரையும் இடித்து தள்ளி நிக்காமல் சென்றதாக வெப்படை காவல் நிலையத்துக்கும், குமாரபாளையம் காவல் நிலையத்துக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் இருக்கலாம் என்ற கருதி உடனடியாக திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் காவல்துறையினர் அந்த வட மாநில கண்டெய்னர் லாரியை பிடிக்க பாணியில் துரத்தி சென்றனர்.

இந்த தகவல் அப்பகுதியில் தீயாகப் பரவிய நிலையில் அதி வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை பிடிக்க பொதுமக்களும் முயன்றனர். அப்பொழுது திருச்செங்கோடு டிஎஸ்பி சென்ற வாகனம் கண்டெய்னர் லாரி முன்னர் சென்றபோது வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்றது.

எனினும் விடாத போலிஸார் மீண்டும் அவ் வாகனத்தை துரத்தி பிடித்து நிறுத்தினர். பின்னர் கண்டெய்னர் லாரியை சுற்றி ஆயுதம் தாங்கிய காவலர்கள் நிறுத்தி வைத்து கண்டன லாரியை திறந்த போது அதில் இருந்த கொள்ளையர்கள் போலிசாரை தாக்கி தப்பியோட முயற்சித்துள்ளனர்.

கொள்ளையர் தாக்குதலில் இருபோலிசாருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலிசார் பாதுகாப்புக்காக துப்பாக்கியால் சுட்ட நிலையில், அதில் ஒரு கொள்ளையன் உயிரிழந்தார். மேலும் ஐந்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்களை போலிஸார் கைது செய்தனர். மேலும் அந்த கண்டெய்னரில் சொகுசு கார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கண்டெய்னர் லாரியை மூடிவிட்டு ஊருக்கு ஒதுக்கப்புறமான இடங்களுக்கு அந்த லாரியைகண்டனரை எடுத்துச் சென்று தகுந்த பாதுகாப்புடன் அந்த திறந்து பார்த்தபோது காரில் ஏராளமான பணம் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் நேற்றிரவு கேரள மாநிலம் திருச்சூரில் மூன்று ஏ டி எம் கொள்ளையடித்து அதில் 65 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு தகவல் தெரியவந்த நிலையில், தற்போது பிடிபட்டது அந்தப் பணமாக இருக்கலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *