அக்டோபர் 07, 2024 • Makkal Adhikaram

அரசியல் கட்சிகள்! வியாபார நிறுவனங்கள், தொழிலதிபர்கள் ,கம்பெனிகள் போன்றவற்றில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் வாங்க மத்திய அரசு 2018 சட்டத்தை கொண்டு வந்தது.
அதன்படி எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் நன்கொடை பத்திரத்தின் மூலம் தேர்தல் செலவுக்கு என்று பணம் வாங்கினார்கள். இது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அரசியல் சாசன அமர்வுக்கு எதிரானது என்று தலைமை நீதிபதி சந்திர சூட் இந்த நன்கொடை தேர்தல் பத்திரத்தை ரத்து செய்தார்.
ரத்து செய்ததை மீண்டும் இந்த தீர்ப்பை மறுபரிசின்களை செய்ய பல்வேறு அரசியல் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.
நாட்டில் கருப்பு பணத்தையும், அரசியல்வாதிகள், ஊழல் செய்த பணத்தையும், வெளியில் கொண்டு வரும் வேலைதான் இது.
தேர்தலை காரணம் காட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடை பத்திரத்தின் மூலம் நாங்கள் வெளிப்படையாக வாங்குகிறோம் என்று மக்களை ஏமாற்றும் ஒரு வேலை தான், இந்த தேர்தல் நன்கொடை பத்திரம் என்று உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகள் போடப்பட்ட அனைத்து மனுக்களையும், தள்ளுபடி செய்து விட்டது .