ஏப்ரல் 28, 2025 • Makkal Adhikaram

இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டுள்ள அத்தனை இந்திய வீரர்களுக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பில் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தேசத்திற்காக உங்கள் குடும்பத்தை, உங்கள் சந்தோஷத்தை இழந்து, இந்த தேசம் தான் எல்லாவற்றையும் விட பெரிது என்ற உங்களுடைய மன வலிமைக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நீங்கள் எல்லாம் அவ்வளவு வலியும், வேதனையும் இந்த நாட்டுக்காக அர்ப்பணிக்கின்ற உங்களுடைய தியாகத்தை பார்க்கும்போது, நாங்கள் எல்லாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல. மேலும், சில ராணுவ வீரர்களின் வீடியோக்கள் பார்க்கும்போது, அவர்கள் எவ்வளவோ மனவேதனையுடன் கொந்தளிக்கிறார்கள் என்பது எனக்கு வருத்தமாக தான் இருந்தது. காரணம் அவர்கள் இந்த காடுகளிலும், மலைகளிலும் எவ்வளவு வேதனையை அனுபவிப்பார்கள்? என்பது கடவுளுக்கு தான் தெரியும். அப்படிப்பட்ட ராணுவத்தின் மனவேதனை என்ன? என்பது நான் நன்றாக புரிந்து கொண்டேன்.

தமிழ்நாட்டில் ஓட்டுக்காக பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன், சீமான் போன்றவர்கள் பேச்சுக்களைப் பார்த்து கொதித்துப் போய் பேசுவது புரிந்தது. இவர்கள் எல்லாம் அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். இதை காதில் வாங்காதீர்கள். அந்த காலத்தில் படிப்பறிவு இல்லாத மக்களிடம் ஜாதி உணர்வை, ஜாதி வெறியை தூண்டி பேசிக்கொண்டு, ஓட்டு வாங்கிக் கொண்டிருக்கும் கூட்டம். இவர்களுக்கு தேசப்பற்றும் தெரியாது. சமூக நலனும் தெரியாது.

தீவிரவாதி கொடுத்தால் கூட பணம் வாங்கி அரசியல் நடத்துவார்கள். அப்படிப்பட்ட ஒரு கேவலமான கூட்டம் தான் இது. அதனால், திருமாவளவன், சீமான் எல்லாம் ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள். எங்களைப் போன்ற பத்திரிகைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். இந்த தேச நலனுக்காக ஆதரவாக இருக்கிறோம். உங்களைப் போன்ற ராணுவ வீரர்கள் தான் எங்களை நிம்மதியாக தூங்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய தியாகத்திற்கு அர்த்தம் தெரியாதவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சித் தலைவர்களாக ஆகிவிட்டார்கள். அது தமிழ்நாட்டு மக்களின் அரசியல் அறியாமை.

அதனால், காலம் அரசியல் தெரியாத மக்களுக்கு, அது உண்மையை புரிய வைக்கும் போது, இவர்களெல்லாம் அரசியல் களத்தில்! அப்போது காணாமல் போய்விடுவார்கள். கவலைப்படாதீர்கள். உங்களுக்கு எப்பொழுதும் இந்த தேசத்தின் தெய்வ சக்தி காப்பாற்றும்.

இவர்களுக்கெல்லாம் மோடியைப் பற்றி பேச தகுதியே கிடையாது. மோடியை பற்றி பேசினால், ஏதோ இவர்களுக்கு தகுதி வந்து விடும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் .அதுதான் உண்மை.

இது அரசியல் தெரியாதவனிடம் அரசியல் படிக்காதவனிடம் ஏதோ தமிழ்நாட்டின் தியாகி போல இவர்கள் இந்த கார்ப்பரேட் மைக் ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கெல்லாம்,

தமிழ்நாட்டில் வரும் 2026 தேர்தலில், தமிழ்நாட்டு மக்கள் நன்றாக பாடம் புகட்டுவார்கள். அதை மாற்று கருத்து இல்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தண்ணீ குடிப்பார்கள்.