அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram

. பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் அமைப்பின் 16 வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு காசான் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார் .
இந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கும், உக்கரையனுக்கும் நடக்கின்ற போர் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்களிடையே மோடி சந்தித்து பேசலாம். மேலும், இந்த மாநாட்டில்! நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, போர்களை தவிர்க்க மோடி பிரிக்ஸ் அமைப்பின் நாட்டு தலைவர்களை வலியுறுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.