அக்டோபர் 09, 2024 • Makkal Adhikaram

ஜம்மு காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தல் மிக சிறப்பானது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கே சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35 (ஏ) ரத்து செய்யப்பட்ட பின் நடந்த முதல் தேர்தலில் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இதற்காக ஜம்மு காஷ்மீரிகள் ஒவ்வொருவரையும் பாராட்டுகிறேன் என்று மோடி நன்றி தெரிவித்துள்ளார் .மேலும் ,

அரியானாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கருத்துக்கணிப்பு ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரங்கள், இதையெல்லாம் மீறி பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைத்துள்ளது. மேலும், ஹரியானாவில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார். மேலும், பிஜேபியின் வளர்ச்சி திட்டங்களை மக்கள் அறிந்ததன் விளைவு தான் இந்த வரலாற்று வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார். ஹரியானாவில் பிஜேபி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது .