
இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது.
இளைய தலைமுறைகள் தான் இன்று youtube,சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் போன்றவற்றில் இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு எதையெல்லாம் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் மூலம் மறைக்கின்ற செய்திகளை இந்த சமூக வலைத்தளங்களில் அவை வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதுபோல் தான் பா. ரஞ்சித், இசைவாணி செய்த தவறுக்கு இந்து உணர்வாளர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் மற்றும் செல்வப் பெருந்தகை போன்றோர் அந்த காலத்தில் பேசுவது போல கார்பரேட் மீடியா மைக்கைகளில் கொடுக்கின்ற சான்று எந்த மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விஷயம் இன்னும் சூடு பிடிக்கிறது.

நாட்டில் இந்து சமுதாயத்தில் பிறந்தவர்களை ஜாதி ரீதியாக பிளவு படுத்தி அரசியல் செய்யலாம் என்று பேசி வரும் இவர்களுடைய ஜாதி அரசியல் எடுபடாது. வேண்டுமானால் குறிப்பிட்ட சிலரை மட்டுமே இதற்கு ஆதரவாகப் பிரிக்க முடியும். பெரும்பான்மை மக்கள் இதற்கு எதிராகத்தான் குரல் கொடுத்து வருகிறார்கள்.மேலும்,
இந்துக்கள் என்றால் பிராமண சமூகம் மட்டுமே என்று அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படி என்றால்! ஏன்?இந்து திராவிடர், இந்து வன்னியர், என்று பள்ளியிலே சான்று கொடுக்கப்படுகிறது? இனி அரசியல் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.மேலும்,
ஒரு காலத்தில் திமுக, அதிமுக இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியே சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்கும் அரசியலை செய்து கொண்டிருந்தார்கள். இப்போது அவ்வாறு செய்தால் பெரும்பான்மை மக்கள் ஓட்டை இழந்து விடுவார்கள்.மேலும்,
ஒவ்வொரு மதத்திலும் உள்ள இறை நம்பிக்கையை கேலி செய்வது, எதிர் கருத்துக்களை பேசுவது,எந்த மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுபவர்கள், எல்லா ஜாதியிலும் இருக்கிறார்கள். அவர்கள் மனதார ஐயப்பனை வணங்கி வருகிறார்கள். ஐயப்பன் பக்தர்கள் இதற்கு பல லட்சம் பேர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். உங்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதா? இல்லையா? இல்லாதவர்கள் இந்துக்கள் கோயில்களை பற்றியும்,இந்து மதத்தை பற்றியும் எப்படி பேசுவீர்கள்? சரி இப்படியே எடுத்துக் கொள்வோம்.
இதே கருத்தை கிருத்துவ மதத்திலும்,முஸ்லிம் மதத்திலும் இசைவானையும்,பா ரஞ்சித்தும் ஏன்? பாட வில்லை. பாடினால் இந்நேரம் அது எவ்வளவு பெரிய பூகம்பம் வெடித்திருக்கும்?ஆட்சியாளர்கள் எல்லாம் அதற்கு ஆடிக் கொண்டிருப்பார்கள். இந்து மக்கள் என்றால் அவ்வாறு கொதிக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டார்கள்.ஆனால், நிச்சயம் இதனுடைய பலன் வரும் தேர்தலில் திமுகவிற்கு எதிராக எதிரொலிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.