மார்ச் 24, 2025 • Makkal Adhikaram
பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் .

பத்திரிக்கை துறை இன்று மத்திய ,மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு துறையாக மாற்றிவிட்டார்கள். அப்படி முழுக்க, முழுக்க இந்த துறை அரசின் கட்டுப்பாட்டில், அரசியல் தலையீட்டில் இயங்குவதால், பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டில் இல்லை. போலியான பத்திரிக்கை பிம்பங்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் முழுக்க, முழுக்க அரசியல் ஆக்கிரமித்துள்ளது. எந்த கட்சி ஆளும் கட்சியாக வருகிறதோ ,அது மத்திய அரசு, மாநில அரசு அவர்களுடைய கட்டுப்பாட்டில் பத்திரிக்கை துறையை கொண்டு வந்து விடுகிறார்கள். அதில் உள்ள சட்டங்கள் 50 ஆண்டு காலமாக, காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்படாமல், எவ்வளவு ஊழல் செய்தாலும், அவர்களை பாராட்டி எழுதிக்கொண்டு அரசின், சலுகை விளம்பரங்கள் அரசின் கொள்கை முடிவாக ஆக்கப்பட்டுள்ளது. இந்த செய்து துறையின் கொள்கை முடிவு என்பது பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது.

இங்கே நடுநிலையான, நேர்மையான ஊடகங்கள் அதிலும் குறிப்பாக சமூக நலன் ஊடகங்கள், சாமானிய மக்கள் நடத்தக்கூடிய இந்த ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுப்பதில்லை. இதில் இவர்கள் கொண்டு வந்திருக்கிற சட்டங்கள் 10,000 பிரதிகளை அடிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் அரசு அடையாள அட்டை கொடுப்போம். அப்போதாவது இந்த சலுகை விளம்பரங்கள் கொடுப்பார்களா ?என்பது அது அரசின் கொள்கை முடிவு.
இதற்குப் பிறகு இந்த பத்திரிக்கைகள் எதற்கு? ஏன்? என்ற கேள்வி கூட தெரியாமல் செய்தித் துறை யார் தனக்கு 30 சதவீத கமிஷன் கொடுக்கிறானோ அவனுக்கு சலுகை, விளம்பரங்கள். பத்திரிக்கை துறையே ஒரு போட்டி துறையாக என்று இருந்து வருகிறது. அந்த போட்டிக்குள் இந்த அரசியல் தலையீடு, உச்சபட்சமாக உள்ளது.மேலும், அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு நடத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு ,கொடுக்கக்கூடிய சலுகை, விளம்பரங்கள் சமூக நலனுக்காக நடத்தக்கூடிய பத்திரிகைகளுக்கு அந்த சலுகை, விளம்பரங்கள் கொடுக்கக் கூடாதா?தவிர,
இவர்கள் இதில் தினசரி பத்திரிகைகள் தான் அக்ரி டேசன் கார்டு (Accreditation card) சலுகை, விளம்பரங்கள் இவை அனைத்தும் அந்த பத்திரிகைகள் தான் என்று செய்தித் துறை ஒரு இருட்டடிப்பு வேலையை இதில் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது above 72 to 90% மக்கள் இணையதளத்தில் தான் செய்திகளை படித்துக் கொண்டிருக்கிறார்கள். பேப்பரை வாங்கி படித்து ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் இல்லை.

இது தவிர,பொழுதுபோக்கு, சினிமா ,திருமண நிகழ்வுகள், அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது, இது போன்ற செய்திகளை எல்லாம் போட்டு, பத்து பக்கங்களை காண்பித்து, அதில் அரசு செய்தி 2 போட்டு, அதுவும் பெரிய சர்குலேஷன் பேப்பராக இன்று பத்திரித் துறையை ஏமாற்றி ,செய்தித் துறையில் சலுகை, விளம்பரங்கள் கோடி கணக்கில் வாங்கிக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் பத்திரிகைகள். .ஒரு பக்கம் கார்ப்பரேட் பத்திரிகைகள் இந்த அரசியல் தலையீட்டை சுயநலமாக பயன்படுத்தி, அரசியல்வாதிகளுக்காக இவர்களுடைய பத்திரிகை ,தொலைக்காட்சிகள் மாறிவிட்டது.
இன்னொரு பக்கம் சர்குலேஷன் சட்டத்தை வைத்து இவர்கள் போலியான ஆடிட் ரிப்போர்ட்டுகள் காண்பித்து, இந்த சலுகை, விளம்பரங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது அரசின் விளம்பரத்திலே சர்குலேஷன் காட்டுவது பெரிய விஷயமா? இங்கே ஒவ்வொரு பத்திரிகை செய்தியின் தரமும், உண்மைத் தன்மையும், மக்களுக்கான அதன் நன்மையும், பயனும் என்ன? என்பதை தரம் பிரிக்காமல், இந்த சர்குலேஷன் என்ற ஒரு குப்பை சட்டம், பத்திரிக்கை துறையை சீரழித்துக் கொண்டிருக்கிறது. எனவே,இந்த சட்டங்கள் பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானது. மேலும்,

மக்கள் நலனுக்காக பத்திரிகை இல்லாமல், அரசியல் கட்சிகளின் நலனுக்காகவும், ஆட்சியாளர்களின் நலனுக்காகவும், இருக்கின்ற இந்த சர்குலேஷன் சட்டம், இது ஒரு ஓட்டை சட்டம். இந்த ஓட்டை சட்டத்தில் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் ,ஆட்சியாளர்களின் பொய்களையும், அரசியல் கட்சிகளின் பொய்களையும், செய்திகளாக வெளியிட்டு, அதுவும் சர்குலேஷன் சட்டத்தில் இதையும் செய்து துறை கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்றால்!
செய்தித் துறை ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலும், அரசியல் தலையீட்டிலும் செயல்படும் செய்தித் துறை எப்படி ?பத்திரிக்கை சுதந்திரத்தையும், இந்த தேச நலனையும்,சமூக நலனையும் ,பாதுகாக்கும்? பத்திரிக்கை செய்திகளின் உண்மை தன்மை? அதன் தரம், தகுதி என்ன? என்று கூட தெரியாத

செய்தி துறை ஐஏஎஸ் அதிகாரிகள் ,அவர்களுக்கு கீழ் பணியாற்றக்கூடிய பி. ஆர். ஓ க்கள் தண்ட சம்பளமாக செய்தித் துறையில் வாங்கிக் கொண்டு, மக்களுடைய வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடித்துக் கொண்டு, நாட்டில் ஊழல் அரசியலுக்கும், கருப்பு பணத்தின் அரசியலுக்கும், உழைக்கும் மக்களின் வளர்ச்சிக்கு எதிராக அவர்களை வளர விடாமல் நசுக்கும் அரசியலுக்கு துணை போக கூடிய பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றால்!,
சமூக நலனுக்காக இந்த தேச நலனுக்காக, ஊழலை எதிர்த்து போராடக்கூடிய பத்திரிகைகளுக்காக அதன் வளர்ச்சிக்கு ஏன்? சலுகை, விளம்பரங்கள் கொடுக்க மறுக்கிறார்கள்? ஏன் அங்கீகாரம் கொடுக்க மறுக்கிறார்கள்? இது எல்லாம் அரசின் கொள்கை முடிவா? அல்லது இதுதான் சர்குலேஷன் சட்டமா? இந்த ஓட்டை சட்டத்திற்குள் செய்தித் துறை, பத்திரிக்கை துறையை ஏமாற்றி, மோசடி செய்து கொண்டிருக்கிறது.

பல ஆயிரம் கோடிகள் ஒவ்வொரு துறையிலும் இந்த ஆட்சியில் ஊழல்களாக வெளி வந்துக் கொண்டிருக்கும்போது, செய்தித் துறையில் எத்தனை ஆயிரம் கோடிகள் ஊழல் நடைபெறுகிறது? என்பதை இங்கேயும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை உள்ளே வர வேண்டும். மேலும், அரசின் கொள்கை முடிவு என்று இவர்களுக்கு தேவையானவர்களுக்கு கொடுக்கக்கூடிய அந்த கொள்கை முடிவு ,
அப்படி கொடுக்கப்பட்ட பத்திரிக்கை தொலைக்காட்சிகளால், மக்களுக்கு என்ன பயன்? என்பதை சிபிஐ உள்ளே வந்து ஆய்வு செய்தால் தான் அல்லது நீதித்துறை அதற்கான ஒரு குழுவை நியமித்து ஆய்வு செய்தால், இந்த ஊழலும் கோடிக்கணக்கில் வெளிவரும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும், தினசரி, வாரம், மாதம் ,இருமுறை என்று தரம் பிரித்து இந்த பட்டியலில் அதற்கென்று ஒரு சலுகை, விளம்பரங்கள், இந்த சட்டங்களும், ஒரு குப்பை சட்டங்கள் தான் .

இதையெல்லாம் மாற்றாமல், அரசியலுக்குள் பத்திரிக்கை இருந்து கொண்டு, ,மக்களுக்கு எந்த பயனும் இருக்காது. ஏனென்றால், மக்களின் வரிப்பணத்தில் தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது. ஒரு செய்தி மக்களுக்காக முக்கியத்துவம் இல்லாமல் இருந்தாலும், அதுவும் பத்திரிக்கை என்ற கணக்கில் கொண்டு வந்து,(அதாவது சர்குலேஷன் ) அதற்கும் சலுகை, விளம்பரங்களை இந்த செய்தி துறை கொடுத்துக் கொண்டிருக்கிறது.இங்கே எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது.இது எல்லாம் பத்திரிகை என்றால் என்ன ?என்று படிக்காதவனை ஏமாற்றும் வேலை. பத்திரிக்கை பற்றி தெரியாதவனை ஏமாற்றுகின்ற வேலை. மேலும்,
இந்த அவலங்களை எதிர்த்து குரல் கொடுக்க 10 பத்திரிகைகள் கூட இல்லை. அந்த அளவிற்கு பத்திரிக்கையின் தகுதிகள் இருப்பதால், செய்தித் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருகிறார்கள்.தவிர,பத்திரிக்கை சுதந்திரத்திற்கும், இந்த சட்டங்களுக்கும் எப்படி இது பொருந்துகிறது? ஒன்றுக்,கொன்று எதிர் ,எதிர் துருவமாக இருக்கின்ற இந்த சட்டங்கள் எதை வைத்து இயங்குகிறது ?மேலும்,

சர்குலேஷன் சட்டமே ஒரு பணத்தை வைத்து தான் சர்குலேஷன் சட்டம். அது தகுதியை வைத்து ,உண்மை தன்மையை வைத்து,அறிவுத்திறமையை வைத்து, ஒரு பத்திரிக்கையை ஆய்வு செய்ய வேண்டிய இடத்தில்! பணத்தை வைத்து ஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு செய்தித் துறை இருக்கிறது. இதில் பணியாற்றக்கூடிய இந்த பிஆர்ஓக்களுக்கு எதுவும் தெரியாது. ஏதோ அந்த தினசரி பேப்பரில் கட்டிங் போட்டு ,அரசு செய்தியாக மாவட்ட ஆட்சியர்களுக்கும் மந்திரிகளுக்கும் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். இது மக்களுக்காக பத்திரிகை இல்லை. இவர்களின் சுயநலத்திற்கு, ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு, பத்திரிக்கை துறையை மாற்றி விட்டார்கள்.
எப்படி ஆட்சி ,அதிகாரம் எல்லாம் அரசியல் கட்சியினருக்காக மாறிவிட்டதோ, அதேபோல், இந்த பத்திரிகை துறையும் இவர்களுக்காக மாற்றிவிட்டார்கள். அரசியல், அதிகாரம் அதை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற நிலைமைக்கு சமூக நலன் பத்திரிகைகள்! என்னைப் போன்று எத்தனை ஆண்டுகள் எழுதினாலும், இந்த உண்மைகள் எல்லாம் செய்தித்துறை அதிகாரிகள் அலட்சியம் செய்து கொண்டிருப்பார்கள். சட்டங்கள் சமூக நலன் பத்திரிகைகளுக்கு ஒரு சட்டமாகவும், கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு ஒரு சட்டமாகவும், பணத்தை வைத்து சர்குலேஷன் சட்டமாக மாற்றி விட்டார்கள் .அதாவது சர்குலேஷன் என்பது என்னிடத்தில் மாதம் ஒரு லட்சம் செலவு செய்யக்கூடிய தகுதி இருந்தால், அது சர்குலேஷன்.

ஆனால், மக்களுக்கான உண்மையான செய்திகள் எது? உண்மை எது? பொய் எது? எடுத்துச் சொல்லும் தகுதி, திறமை ,அறிவு ,இவை எல்லாம் இந்த பணம் என்ற சர்குலேஷன் சட்டம் ,அரசியல் தலையிட்டால் தகுதியான பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் சமூக நன்மைக்காக உழைத்தும், ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய பத்திரிகைகளுக்கு, அவர்களுக்கான அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.ஊழலுக்கு மறைமுகமாக ஒத்து ஊதக்கூடிய கூடிய பத்திரிகைகளுக்கு சலுகைகளும், விளம்பரங்களும் கொடுத்து அங்கீகரிக்கும் போது, இதை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்? இதுதான் அரசியல் தலையீடா? மேலும்,
இந்த சட்டங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டிய சட்டங்கள். பத்திரிக்கை துறை எவ்வளவோ வளர்ச்சி பெற்றும், இன்று அதே சட்டங்களை வைத்து பத்திரிக்கை துறையை நடத்துகிறார்கள் என்றால், இவர்கள் மக்களுக்காக பத்திரிக்கை துறையை நடத்தவில்லை. இவர்களுக்காக பத்திரிக்கை துறையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.

மேலும், எங்களுடைய பத்திரிகை இணையதளத்தில் தினசரி முக்கிய செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.இது தவிர, மூன்று லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் இருந்தும், ஏன்? அவையெல்லாம் சர்குலேஷன் கணக்கில் கொண்டு வரக்கூடாது? இன்று சர்குலேஷன் எல்லா பத்திரிகைகளிலும் சர்குலேஷன் இல்லை என்பது பத்திரிகை உலகத்திற்கு தெரியும் .அப்படி இருந்தும், அரசியல் தலையிட்டில் இன்னும் அந்த சர்குலேஷன் சட்டம் மற்றும் அரசின் கொள்கை முடிவு எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு தடையாகவே இருக்கிறது. அதனால்,
இதிலிருந்தும் பத்திரிக்கை துறையை பாதுகாக்கவும், மக்கள் நலனுக்காக அதைக் கொண்டு செல்லவும், ஊழலுக்கு எதிராக போராடுவும் ,இந்தத் துறையை நீதி துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இவ்வளவு தகுதிகள் மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு, இணையதளத்திற்கு இருந்தும் இன்று வரை இதற்கான அங்கீகாரமும் ,சலுகை ,விளம்பரங்களும் மறுக்கப்படுவது அரசியல் தலையீடு.
ஒரு பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும்? எதற்காக பத்திரிக்கை ?ஏன் பத்திரிக்கை? என்ற கேள்விகளுக்கெல்லாம் அர்த்தம் தெரியாமல், செய்தித் துறையில் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருந்து கொண்டு, அதற்கு கீழே 10 அதிகாரிகள், அதற்கு கீழே நூறு பி ஆர் ஓ க்கள் ,இப்படி ஒரு செய்தி மக்கள் தொடர்பு துறையே இதையெல்லாம் சீர் செய்ய தகுதியற்று கிடக்கும்போது, இதற்கு மக்களுடைய வரி பணம், பல ஆயிரம் கோடி செலவு செய்து வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
.jpg)
இதனால், மக்களுக்கு ஒவ்வொரு பத்திரிகையின் செய்திகளால் என்ன நன்மை? அதன் தரம் என்ன? அதன் உண்மை தன்மை என்ன ?அதன் தகுதி என்ன ?எதுவும் தெரியாது. மளிகை கடையில், ஹோட்டல்களில் பொட்டலம் மடிப்பதற்கு தேவைப்படும் பத்திரிகைகள் எல்லாம் இன்று பத்திரிக்கையாக செய்தித் துறையில் கணக்கு காட்டப்படுகிறது.
இதற்கு என்ன காரணம் ?முழுக்க, முழுக்க அரசியல் தலையீடு .இந்த அரசியல் தலையிடை ஒழிக்க வேண்டும் என்றால் ,செய்தித் துறை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கை.