தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் மூலம் 2024 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் பதிவு செய்துள்ள தகுதியுள்ள 941 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த 24. 7. 2024 அன்று பத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் மரபு உரிமையினருக்கு ரூ. 1,21,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழ்நாடு அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 9 நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு 63,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர் நாமக்கல் கிளாரினட் வே.பிரபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.