Tamilnadu social journalist federation.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாடு சோசியல் சேனல் லிஸ்ட் ஃபெடரேஷன் அமைப்பு சமூகப் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அழைப்பு.

தமிழ்நாட்டில் மக்களின் வாழ்க்கையே பிரச்சனையாக ஒவ்வொரு நாளும்  போராட வேண்டி வந்து விட்டது. இதற்கு என்ன காரணம் இன்றைய அரசியல் கட்சியாக  இருந்தாலும் அல்லது ஜாதி அரசியல் கட்சியாக இருந்தாலும் , அவர்கள் சமூக நன்மைக்காகவும் ,மக்களுக்காகவும், சமூகத்திற்காகவும் பாடுபட வேண்டியவர்கள், தற்போது அவர்களிடமே சமூகங்கள் போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது . ஆனால்,

இவர்களெல்லாம் கார்ப்பரேட் ஊடகங்களில் தங்களை சமூக போராளி போல் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .இந்த ஊடகங்கள் செய்கின்ற தவறுகளால், சமூகத்தில் அந்தந்த சமூகங்களுக்குள்ளே வேறுபாடுகளை உருவாக்கி சமூகப் பிரச்சனைகளையும், சட்டப் பிரச்சனைகளையும், வாழ்க்கையோடு மக்கள் போராட வேண்டி உள்ளது. தவிர ,காவல்துறை அவர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இதற்கு அடிப்படை ஊழல் முக்கிய காரணம் .

உழைக்காமல் நேர்மையற்ற முறையில் வருகின்ற வருமானத்தின்  பின்னால் அரசியல், அதிகாரம், ரவுடிகள், சமூகவிரோதிகள், சட்டத்தை ஏமாற்றுபவர்கள்,  அனைவரும் சட்டத்தின் ஓட்டையில் ஒளிந்து கொண்டு நல்லவர்கள் வேஷம்தான் இன்றைய அரசியல் . இதனால் மக்களுக்கு வாழ்க்கையே போராட்டமாக மாறி உள்ளது .அது மட்டுமல்ல, மக்களுக்கு கடவுளின் தண்டனையாக ,கொடிய கொரோனா நோய் போன்ற காலகட்டத்தில், சுமார் தமிழ்நாட்டில் மட்டும் லட்சக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கி விட்டது.

 ஆனால் அவர்கள் வாங்கிய வங்கிக் கடன்களுக்கு வங்கி அதிகாரிகள் அசல் வந்தால் கூட போதும் என்று நினைக்காமல், வட்டி கூட தள்ளுபடி செய்ய மாட்டேன் என்று மறுத்து வருகிறார்கள். இப் பிரச்சனை சமீபத்தில் கடம்பத்தூர்  இந்தியன் வங்கி கிளை சார்பில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது.அதில் கடன் வாங்கியவர்கள் நீதிமன்றத்தில் அமர்ந்து 

சமரசம் பேசினார்கள். 

அங்கே வங்கி அதிகாரிகள், மற்றும் கடம்பத்தூர் கிளை மேலாளர் ஒத்துக் கொண்ட தொகைக்கு பதிலாக, கடன் பெற்றவர்களை வங்கிக்கு வரவழைத்து, நீங்கள் இத்தனை லட்சம் கட்டினால் தான் முடியும் என்று மிரட்டுகிறார்கள். எப்படி எல்லாம் அதிகாரத்தின் உச்சத்தால் சாமானிய மக்கள் போராட வேண்டி உள்ளது.

 இது தவிர பொது சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பஞ்சாயத்து நிர்வாகம் பொது சொத்துக்களை பங்கு போட்டு கொள்ளை அடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அதுமட்டுமல்ல தற்போது அறுவடைக்கு வந்த விளைச்சல் மழையினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு உதவி செய்ய எந்த பஞ்சாயத்து நிர்வாக தலைவர்களோ, கவுன்சிலர்களோ, உள்ளாட்சி பிரதிநிதிகளோ, எம்எல்ஏ களோ, எம்பி க்களோ, மந்திரிகளோ யாரும் முன் வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களே அதிகாரிகளிடம் சென்று முறையிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கிராம பஞ்சாயத்துக்களில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட கிராமங்களில் எவ்வளவு பொய் கணக்கு எழுதி, இந்த வேலை செய்தது. அந்த இடத்தில் தண்ணியை கால்வாய் மூலம் சரி செய்தது என்று கணக்கு காட்டுவதற்கு ஜே சி பி எந்திரங்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். சில இடங்களில் ஆட்களை வைத்து சரி செய்தது போல் கணக்கு காட்டி இருக்கிறார்கள். இப்படி எல்லாவற்றிற்கும் இன்றைய போட்டோ ஒரு எவிடன்ஸ் ஆகிவிட்டது. அதனால் அதிகாரிகள் அதைப்பற்றி யாரும் ஆய்வு செய்யப் போவதில்லை .நானே ஒரு இடத்தில் பார்த்தேன் தண்ணீர் ஒரு கால்வாய் மூலம் வடிந்து கொண்டிருக்கிறது .அங்கே ஜேசிபி நிற்க வைத்து விட்டு ஏதோ தள்ளுவது போல் ஆக்சன் நடந்து கொண்டு இருந்தது .

இது எல்லாம் பஞ்சாயத்து நிர்வாகம் இப்படி எல்லாம் நடப்பது எவ்வளவு கேவலமாக இருக்கிறது. இதை கிராமத்தில் கேட்பவர்கள் ஏதோ காழ் புணர்ச்சியில் கேட்பது போல, அவர்களை அரசியல் கட்சியினர் கிராமங்களில் கதை கட்டி பேசிக்கொண்டு, மிக மிக கேவலமாக இருந்து வருகிறார்கள். இவை எல்லாம் தவறு என்பதை தெரிந்து சட்டப்படி செய்வதாக செயல்படுத்தி காட்டும் திறமை தான் இன்றைய அரசியல். சட்டத்தின் இந்த ஓட்டைகளை அடைக்காமல், ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கையின் முன்னேற்றம், வளர்ச்சி இன்று கேள்விக்குறியாகி வருகிறது .

அது மட்டும் அல்ல, எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ , பொது சொத்துக்களை கொள்ளையடித்து கொழுத்து சமூக மக்களுக்கு எதிரானவர்களாக இருந்து வருகிறார்கள். நேற்று வரை பைக்கில் சென்றவர்கள் இன்று எப்படி திடீரென்று கார் வந்து விடும். அதாவது தற்போதைய அரசியல் என்பது உழைக்காமல் மக்களை ஏமாற்றும் தொழிலாகிவிட்டது . அப்படிப்பட்டவர்களுக்கு அதிகாரிகளும், சிலர் உடந்தையாக இருந்து வருகிறார்கள்.அதனால் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டு இருந்தால், உங்களைவிட அடி முட்டாள்கள், நாட்டில் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

 இது தவிர,குடி போதைக்கு அடிமையானவர்கள் ,குடும்பத்தில் தினம் போராட்ட வாழ்க்கை தான். இது தவிர ,உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கும், பொது மக்களுக்கும் இன்றைய அரசியல் ஒரு போராட்ட களத்தை உருவாக்கி இருக்கிறது. அதுதான் இன்றைய அரசியல் நிலைமை . காரணம் அரசியல் என்பது பொதுநலமில்லாமல் ,சுயநலமாக ஆகிவிட்டதால் ,இன்றைய மக்களின் வாழ்க்கை போராட்டம் ஆகிவிட்டது என்பதை ஒவ்வொரு தமிழ் மக்களும் சிந்திக்க வேண்டும்.

 தவிர, இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்று வழி தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் என்று பல கோடி பேர் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு பொதுமக்களின் சுயநலம், சுயநல அரசியல்வாதிகளுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. மக்கள் தன் வீட்டில் மட்டும் தண்ணி வந்தால் போதும், கரண்ட் வந்தால் போதும், விளக்கு எரிந்தால் போதும், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் ,இந்த எண்ணம் தவறானது. இப்படிப்பட்ட மக்களுக்கு இறைவன் இயற்கையின் மூலம் தண்டனை கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். தற்போது சென்னையில் பெய்த கனமழை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இப்படிப்பட்ட மக்களுக்கு

 வெளிவேஷம், போட்டி, பொறாமை இவையெல்லாம் சுயநலத்தின் அங்கீகாரம். இது மக்களின் போராட்ட வாழ்க்கைக்கு முக்கிய காரணம் இதையெல்லாம் உணராமல் மக்கள் இதிலிருந்து வெளிவர முடியாது .

 சமூக நன்மைக்கு போராடுபவர்களுக்கும் ,சமூக ஆர்வலர்களுக்கும் ,கட்சி பேதம் இன்றி ,மக்கள் பணம் வாங்காமல் வாக்களித்து வெற்றி பெற செய்தால் முடியும். இல்லையென்றால், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். அதுவரை இந்த பிரச்சனைக்கு எந்த தீர்வும் கிடைக்காது.

மேலும் எல்லா சமூகத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் அதிகாரிகளில் நல்லவர்கள் இருக்கிறார்கள். சமூக ஆர்வலர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சிகளில் நல்லவர்களை தேட வேண்டி இருக்கிறது. மேலும் பொதுநலத்திற்காக வந்து, சுயநலமாக மாறிவிட்ட அரசியல்வாதிகளை திருத்த முடியாது .ஆனால், மக்கள் நினைத்தால் இவர்களை திருத்த முடியும். அப்படிப்பட்டவர்களின் நடிப்பு அரசியலை  நம்பி ஏமாறுவதை தவிர்த்து, நடிப்பு அரசியல்வாதிகளை புறக்கணிக்க வேண்டும்.

அதனால், தமிழ்நாடு சோசியல் ஜானலிஸ்ட் பெடரேஷன் இதற்கு என்ன உதவிகளை செய்ய முடியுமோ,அதை செய்ய எங்களுடன் 

சமூக ஆர்வலர்கள்,  அதிகாரிகள் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் தற்போது பணியில் இருப்பவர்கள் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள் மத்திய மாநில அரசின் உயரதிகாரிகள் ஆதரவு உடன் தான் இப்பணிகளை செய்ய முடியும் .அதனால், பாதிக்கப்பட்டவர்கள் அதாவது சட்டப் பிரச்சினையாக இருந்தாலும், அரசியல் கட்சியினரின் அடாவடி அராஜகங்களாக இருந்தாலும்,சமூகப் பிரச்சினையாக இருந்தாலும், சொத்து பிரச்சனையாக இருந்தாலும் ,கம்பெனிகளில் டேக்ஸ் tax பிரச்சனையாக இருந்தாலும், அதற்காக ஒரு குழு அமைக்க முடிவு எடுத்துள்ளோம்,

அது முடிந்த அளவுக்கு இந்த சமூக நன்மைக்காக குரல் கொடுத்து, 

காப்பாற்ற முன்வருவார்கள். அவரவர் சக்திக்கு ஏற்றவாறு 

முடிந்த அளவு நன்மை செய்ய முயற்சி செய்வோம்  . இந்த சமூக 

பங்களிப்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். 

மனம் இருந்தால் மட்டுமே இதற்கு நேரத்தை ஒதுக்க முடியும். 

ஏழை எளிய மக்களுக்கு செய்யும் தொண்டு,இறைவனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு என்பதை புரிந்து கொண்டால் 

சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *