பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு வணக்கம் .
தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு துவக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் இதுவரை 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக போன்ற அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும், அந்த உரிமை அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அந்த உரிமையை பெற்று தருவதுதான் தமிழ்நாடு சமூகநல (Tamilnadu social journalist federation.) பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம். மேலும்,இங்கே உண்மையான சமூக நல பத்திரிகையாளர்கள் மட்டும்தான் இதில் இடம் பெறுவார்கள் . இங்கே பத்திரிகையாளர் அடையாள அட்டை விற்பனை செய்யப்பட மாட்டாது .ஒரு பத்திரிகையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க நிச்சயம் போராடுவோம். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அதற்குரிய தேவைகள் என்னவோ, அதை நிறைவேற்ற நிச்சயம் பாடுபடும். அதற்காக அதற்காக நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம்.
தவிர, சமூகத்தில் பத்திரிக்கையாளர்களின் மதிப்பு ,மரியாதை, கௌரவம், இதையெல்லாம் காற்றில் பறக்க விட்டவர்களிடம் இருந்து, பத்திரிகையாளர்களுக்கான அந்த மதிப்பு, மரியாதையை மீண்டும் அதை மீட்போம். இதில் தகுதியான சமூகநலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் வரவேற்கப்படுவார்கள்.
மேலும், தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் தவறான அரசாணைகள், பத்திரிக்கை துறையின் காலாவதியான சட்டங்கள், அதில் உள்ள ஓட்டைகள் கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே சொந்தமாகி கொண்டு, பலன்களை அனுபவிப்பதை ஒருகாலம் ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்களின் வரிபணம் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க நிச்சயம் பாடுபடும். அதே போல் ,சமூக நலன் சார்ந்த செய்தியாளர்கள் அவர்களுக்குரிய அங்கீகாரம், சலுகைகள் வழங்க நிச்சயம் இந்த அமைப்பு பாடுபடும் .விரைவில் இதற்கான மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் .இது உண்மையான பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு சமூகத்தில் நல்ல ஆதரவு கிடைத்திட உழைப்போம் .
மேலும்,பத்திரிக்கை துறையும் ,பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள களங்கத்தை மீட்க தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தமிழ்நாட்டில் எத்தனை சங்கங்கள் இருந்தாலும், அதற்கு விதிவிலக்காக செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்பதை பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இங்கனம்
நிறுவனர்.
Tamilnadu social journalist federation.
தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு
ஆசிரியர் மக்கள் அதிகாரம் .
சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் எமது மனமார்ந்த நன்றி .