அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram

நடிகர் விஜய் இந்தாண்டு தொடக்கத்தில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமக அறிவித்தார். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி அதன் கொடி, சின்னம், பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
.jpeg)
இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாவட்ட தலைவர்கள், மாநில அணித் தலைவர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்து செயல்பட 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் 2 பெண்கள் உள்பட தலா 7 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக 234 தொகுதிகளுக்கு சேர்த்து 1,638 தற்காலிக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த தற்காலிக பொறுப்பாளர்களுடன் கட்சியினர் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)